Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.85லட்சம் மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி பணி 6 மாதத்தில் நிறைவடையும்

Print PDF

தினகரன் 03.06.2010

புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.85லட்சம் மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி பணி 6 மாதத்தில் நிறைவடையும்

கரூர், ஜூன் 3: புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு ரூ.85லட்சம் மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் 6 மாதத்தில் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம் புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூராட்சி மக்களின் குடிநீர் தேவைக்கு தவிட்டுப்பாளையம் அருகே காவிரியாற்றில் ஏற்கனவே குடிநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக குடிநீர் தேவை அதிகரித்ததையொட்டி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குறைந்தபட்ச தேவை திட்டத்தின்கீழ் புதியதாக ரூ.84.5 லட்சம் மதிப்பில் பல்வேறு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற உள்ளன. இதில், தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுகிறது. இதன் மூலம் பேரூராட்சியின் 12, 13, 14, 15 வார்டுகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கும்.

மேலும் இதே திட்டத்தில் ஒரத்தையூர் மின் மோட்டார் அறையில் ஏற்கனவே உள்ள 7.5 எச்பி மோட்டாருக்கு பதில் புதியதாக 15 எச்பி மின் மோட்டார் பொருத்தப்படுகிறது. 8, 9வார்டுக்கு உட்பட்ட சேங்கல்பாளையம், மூர்த்திபாளையம், கணபதி பாளையம், மேலஒரத்தை, கீழ் ஒரத்தை, ஆவாரங்காட்டுபுதூர், மூனூட்டுப்பாளையம் ஆகிய பகுதி யினரின் குடிநீர் தேவையை பூர்த்தி அடையும்.

மேலும், தவிட்டுபாளையத்தில் இருந்து ஒரத்தை வரை குடிநீர் விநியோகத்துக்காக பதிக்கப்பட்டுள்ள 4இன்ச் அகலம் கொண்ட குடிநீர் குழாய்களுக்கு பதிலாக 8இன்ச் அகலம் கொண்ட குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

தவிட்டுப்பாளையத்தில் கட்டப்பட உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமான பணிக்கான தொடக்க விழா நேற்று நடந்தது.

இதில், பேரூராட்சி தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் கிருஷ்ணசாமி, துணைத்தலைவர் ரமேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடிவடையும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

நீர் ஆதாரம் குறைவு பொதுமக்களுக்கு நகராட்சி அறிவுரை குடிநீர் சிக்கனம்

Print PDF

தினகரன் 03.06.2010

நீர் ஆதாரம் குறைவு பொதுமக்களுக்கு நகராட்சி அறிவுரை குடிநீர் சிக்கனம்

மயிலாடுதுறை, ஜூன் 3: நீர் ஆதாரம் குறைவாக இருப்பதால் மயிலாடுதுறை நகரில் உள்ள மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண் டுமென நகராட்சி ஆணை யர் மோகன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தற்போது கோடை கால மாக இருப்பதால் கொள் ளிடம் ஆற்றில் நீர் ஆதாரம் குறைவாக உள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக உபயோகப்படுத்த வேண்டும். குடிநீரை வேறு உபயோகத் திற்கு பயன்படுத்த வேண்டாம்.

குடிநீர் மூலம் நோய்கள் பரவாமல் தடுக்க காய்ச்சிய குடிநீரையே பருகவும். நகரா ட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவு விடுதிகள், டீக்கடை, டிபன் கடைகள், கல்வி நிலையங்கள், பள்ளி மற் றும் கல்லூரி மாணவர் விடுதிகளிலும் காய்ச்சிய குடி நீரையே கட்டாயம் வழ ங்க வேண்டும். பொதுமக்கள் நகரில் ஆங்காங்கே குப்பை கொட்டுவதாலும் கழிவுநீரை சாலைகளில், குளங்களில் விடுவதாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் மட்டும் குப்பைகளை கொட்டவும். இவ்வாறு ஆணையர் மோகன் தெரிவித்துள்ளார்.

 

புதிய குடிநீர் குழாய் அமைப்பு: பொதுப்பணித்துறைக்கு நன்றி

Print PDF

தினமணி 03.06.2010

புதிய குடிநீர் குழாய் அமைப்பு: பொதுப்பணித்துறைக்கு நன்றி

புதுச்சேரி, ஜூன் 2: புதுச்சேரியில் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டதற்காக பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவுக்கு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ராஜேஸ்வரி நன்றி தெரிவித்துள்ளார்.

÷அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: புதுவை உருளையன்பேட்டை, திருவள்ளுவர் நகரில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வீடுகளுக்கு 40 ஆண்டுகால பழைய குடிநீர் இணைப்பு குழாய்கள் இருந்தன. இதனால் குடிநீர் நிறம் மாறி, அசுத்தமான குடிநீர் வீடுகளுக்கு வந்தது.

÷இது குறித்து பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு செயற்பொறியாளர் ஜெயக்குமாரிடம் புகார் தெரிவித்தேன். சிறப்பு கூறு நிதி திட்டத்தின் கீழ் அப்பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக இப்பணிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கூறியிருந்தேன்.

÷புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவினர் புதிய குடிநீர் குழாய்களை பொருத்தியுள்ளனர். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 


Page 221 of 390