Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் தட்டுப்பாட்டை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை: கலெக்டர் தகவல்

Print PDF

தினமலர் 02.06.2010

குடிநீர் தட்டுப்பாட்டை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை: கலெக்டர் தகவல்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட அளவில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்தது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது: மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் வழங்குவதை அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். கலெக்டர் அலுவகம் பனகல் கட்டிடத்தில் உள்ள உதவி இயக்குனர் (பஞ்சாயத்துக்கள்) அலுவலகத்தில் குடிநீர் விநியோகம் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்தில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருந்தால் கட்டுப்பாட்டு அறைக்கான தொலைபேசி எண் 04362 236258 என்ற எண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக மற்ற அனைத்து நாட்களிலும் புகார் தெரிவிக்கலாம். குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான புகார்கள் பதிவேட்டில் பதியப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் தட்டுப்பாடு தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு ஃபோன் மூலம் தெரிவித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

 

கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டப்பணி நிறைவு

Print PDF

தினமலர் 02.06.2010

கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டப்பணி நிறைவு

பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.கவுண்டம்பாளையம் நகராட்சி மற்றும் வடவள்ளி பேரூராட்சியில் நிலவி வந்த குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் 31 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய் வழியாக சுத்திகரிக்கப்படாத நீர் கவுண்டம்பாளையத்தை அடைந்தது. இங்குள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தரைமட்டத் தொட்டியில் சேகரிக்கப்படும் நீர், கவுண்டம்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏழு மேல்நிலைத் தொட்டிகளுக்கு செலுத்தப்பட்டு, அங்கிருந்து பகிர்மான குடிநீர் குழாய் வழியாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும். இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. வடவள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிகள் முடிந்து விட்டன. திட்டத்தின் பணிநிறைவு குறித்து அமைச்சர் பழனிச்சாமி, கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் கவுண்டம்பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினர் காரமடை, வெள்ளியங்காடு, செல்லப்பம்பாளையம் பகுதிகளில் திட்டம் நிறைவேற்றப்பட்ட முறை குறித்து ஆய்வு செய்தனர்.

இது குறித்து கவுண்டம்பாளையம் நகராட்சி தலைவர் சுந்தரம் கூறுகையில், ""கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு விட்டது. அமைச்சர் ஆய்வை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் இத்திட்டம் விரைவில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்,'' என்றார்.நிகழ்ச்சியில், கவுண்டம்பாளையம் நகராட்சி செயல் அலுவலர் தனசேகரன், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

ரூ.50 லட்சம் மதிப்பில் ஆழ்துளை குழாய் கிணறு

Print PDF

தினமலர் 02.06.2010

ரூ.50 லட்சம் மதிப்பில் ஆழ்துளை குழாய் கிணறு

நாமக்கல்: நகராட்சியில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ் குழாய் கிணறு அமைப்பதற்கு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாமக்கல் நகராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் செல்வராஜ் தலைமையில், நடந்தது. துணைத்தலைவர் பூபதி முன்னிலை வகித்தார். நகராட்சி 7வது வார்டு பாவடி தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஆழ் குழாய் கிணற்றில் நீர் குறைந்ததால், 3.85 லட்சம் ரூபாய் மதிப்பில், சேந்தமங்கலம் பிரதான சாலையில் ஆழ் குழாய் கிணறு அமைக்க மன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், நகராட்சி 6வது வார்டு குட்டைத்தெரு மக்கள் பயன்பாட்டுக்காக 2.75 லட்சம் ரூபாய் மதிப்பில் தண்ணீர் வசதி ஏற்படுத்தவும், 2வது வார்டு ஆர்.பி.புதூர் காலனி மற்றும் ஜேக் அண்டு ஜில் பள்ளி தெருவில், 4.25 லட்சம் ரூபாய் மதிப்பில் தண்ணீர் குழாய் நீட்டித்தல் பணிக்கும், 13வது வார்டு பேட்டை காலனி, நடராஜபுரம் 4வது தெரு பகுதிகளுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் விநியோக குழாய் பதித்தல் பணிக்கும் ஒப்புதல் பெறப்பட்டது.

வார்டு 18ல் டாக்டர் சங்கரன் சாலை, வார்டு 9ல் வெள்ளவாரி மேலத்தெரு ஆகியவற்றில் ஏற்கனவே உள்ள ஆழ் குழாய் கிணற்றில் தலா 2 லட்சம் ரூபாய் மதிப்பில், நீர்மூழ்கி மோட்டார் அமைத்து ஹெச்.டி.பி.., தண்ணீர் தொட்டி அமைக்கவும், வார்டு 4ல் பொன் கைலாஷ் கார்டன்ஸ் பகுதியில் 2.75 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக ஆழ் குழாய் கிணறு அமைத்து குட்டை தெரு, மேலத்தெரு பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 2வது வார்டு குடியிருப்பு பகுதியில் நகராட்சி பூங்கா பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ் குழாய் கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யவும், அன்பு நகரில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆழ் குழாய் கிணறு அமைக்கவும் மன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. முல்லைநகர் மற்றும் திருநகர் பகுதியில் மேல்நிலைத்தொட்டி வளாகத்தில் 12.60 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நகராட்சி அலுவலகம், பதிநகர் மற்றும் காவேரி நகர் பகுதியில் உள்ள சம்பு மற்றும் மேல்நிலைத்தொட்டி வளாகத்தில் 16.30 லட்சம் ரூபாய் மதிப்பிலும் சுற்று சுவர் மற்றும் காவலர் அறை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

 


Page 223 of 390