Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் திட்ட பணிகள்: அமைச்சர் ஆய்வு

Print PDF

தினகரன் 01.06.2010

குடிநீர் திட்ட பணிகள்: அமைச்சர் ஆய்வு

பெ.நா.பாளையம், ஜூன் 1: கவுண்டம்பாளையம்& வடவள்ளி பகுதிக்கான பவானி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி நேற்று பார்வையிட்டார்.

கவுண்டம்பாளையம்& வடவள்ளி பேரூராட்சி பகுதிகளுக்கான பவானி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.31 கோடியே 80 லட்சம் செலவில் நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் உள்ளது.

அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி நேற்று காலை பவானி குடிநீர் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார். வடவள்ளி, கவுண்டம்பாளையம் பகுதிகளில் பணிகள் எந்த அளவு முடிந்துள்ளது என்பதை பார்த்தார். கவுண்டம்பாளையம் நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் ரூமையும், வீரபாண்டி பிரிவில் உள்ள நீர் உந்து நிலையத்தையும், செல்லப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார்.

பிறகு மேட்டுப்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு பவானி குடிநீர் எடுக்கப்படும் இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். கவுண்டம்பாளையம் நகராட்சி தலைவர் சுந்தரம், செயல் அலுவலர் தனசேகரன், வடவள்ளி பேரூட்சி தலைவர் அமிர்தவல்லி சண்முகசுந்தரம் மற்றும் பொது பணித்துறை அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்

 

நாகர்கோவில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கூட்டு குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன் 01.06.2010

நாகர்கோவில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கூட்டு குடிநீர் திட்டம்

நாகர்கோவில், ஜூன் 1: நாகர்கோவில் நகராட்சிக்கு தினமும் 190 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. 1945ம் ஆண்டு அமைக்கப்பட்ட முக்கடல் அணை தண்ணீர் போதுமானதாக இல்லை. எனவே அனந்தனாறு சானல் மூலம் பேச்சிப்பாறை அணைத்தண் ணீ ரே விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோடையில் அடைக்கப்பட்டு விடுவதால் ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடுவது வாடிக்கையாகி விட்டது. இதற்காக உலக்கை அருவி திட்டம், புத்தேரி பெரியகுளத்தில் ராட்சத கிணறு அமைக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டன.

இந்நிலையில் இத்திட்ட த்திற்கான நிதி செலவு மற்றும் நீர்வீழ்ச்சி பகுதிக்கும் அணைக்கட்ட திட்டமிட்ட பகுதிக் கும் இடையே அரை கி.மீட் டர் தூரமே உள்ளது என்பது போன்ற காரணங் களை சுட்டிகாட்டி அதிகாரிகள் சிலர் முட்டுகட்டை போட்டுள்ளனர். புத்தேரி பெரியகுளம் திட்டமும் சாத்தியமில்லை என்று கைவிடப்பட்டது.

இந்நிலையில் அகஸ்தீஸ்வரம், நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு குழித்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றிலிருந்து கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குளச்சல் தொகுதிக்கான திட்டத்தில் நாகர்கோவில் நகராட்சிக்கும் குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள் ளது. இத்திட்டத்திற்காக நாகர்கோவில் புளியடி பகுதி யில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2 ஏக்கர் நிலத்தை நகராட்சி வழங்க வேண்டும். திட்ட ஆய்வுப்பணிக்கு ரூ.50 லட்சம் ஒதுக்க வேண்டும். இத்திட்டப்படி குளச்சல் தொகுதிக்கு 100 லட்சம் லிட்டர் குடிநீரும் நாகர்கோவிலுக்கு 200 லட்சம் லிட்டர் குடிநீரும் வழங்கப்படும். எனவே திட்ட செலவில் 3ல் 2 பங்கை நகராட்சி ஏற்க வேண் டும். 1000 லிட்டருக்கு ரூ4.50 நகராட்சி செலுத்தவேண்டும். இந்த நிபந்தனைகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விதித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே உலக்கைஅருவி திட்டமும், அதற்கு ஒதுக்கிய பணத்திற்கும் சரியான நடவடிக்கை இல்லை எனக்கூறி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு சேர்மன் அசோகன் சாலமன்கூறுகையில் இத்திட்டம் அவசியம் தேவை. ஆனால் நிபந்தனைகளில் பல மாறுதல்கள் தேவைப்படுகிறது. இத்திட்டம் சாத்தியப்படுமா என்ற ஆய்வு மற்றும் உத்தேச மதிப்பீடு போன்றவற்றை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கவேண்டும் என்றார்.

 

வேலூருக்கு காவிரி நீர்: அரசு பரிசீலனை: மேயர் தகவல்

Print PDF

தினமணி 01.06.2010

வேலூருக்கு காவிரி நீர்: அரசு பரிசீலனை: மேயர் தகவல்

வேலூர், மே 31: வேலூர் மாநகருக்கு மேட்டூரிலிருந்து காவிரி நீர் கொண்டுவரும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக மேயர் ப.கார்த்திகேயன் தெரிவித்தார். திங்கள்கிழமை நடைபெற்ற வேலூர் மாமன்ற அவசரக் கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்தார்.

உறுப்பினர்களின் பேச்சு விவரம்:

சீனுவாசகாந்தி (காங்.): நகரில் புதை சாக்கடைக்கு தோண்டப்படும் பள்ளங்கள் சரிவர மூடப்படுவது இல்லை. காலாவதி உணவுப் பொருள்களை சோதனை நடத்தி கைப்பற்றி அழித்து வரும் அதிகாரிகள் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் பாமாயில்களை ஆய்வு செய்ய வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் ஒரு காபியின் விலை ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அசேன் (திமுக): வேலூர் நகர மக்களின் குடிநீர்ப் பிரச்னை என்று தீரும்? ஓகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்படுமா, மேட்டூர் கூட்டு குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதா? மக்கான் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காலதாமதமாகிறது. இதை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

பாலசுந்தரம் (தேமுதிக): தண்ணீர் விநியோகம் சரிவர இல்லாததைக் கண்டித்து வார்டு மக்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளேன்.

கோபி (மதிமுக): மாநகரில் உள்ள பள்ளிகளில் பெற்றோர்கள் படித்திருந்தால்தான் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதாக பள்ளி நிர்வாகங்கள் கூறுகின்றன. இதை கடுமையாக நாங்கள் எதிர்க்கிறோம். படிக்காதவர்களின் பிள்ளைகள் படிக்கக் கூடாதா? இந்த அவலநிலையைப் போக்க மாமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர் அளித்த பதில்:

புதை சாக்கடை திட்டம் நிறைவு பெறும் வரை குறைகள் ஆங்காங்கே இருக்கும். இதுநாளடைவில் சரிசெய்யப்படும். பாமாயில் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய பேருந்து நிலையத்தில் காபியை அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யும் கடைகள் மீது அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.

வேலூர் மாநகருக்கு விரைவில் மேட்டூர் கூட்டுகுடிநீர்த் திட்டம் கொண்டு வரப்படும். இரவுக் காவலர் விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர்ப் பிரச்னைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு கொண்டுவரப்படும். பள்ளி நிர்வாகங்கள் மீது கூறப்படும் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


Page 224 of 390