Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ரூ.3.25 லட்சத்தில் புதிய ஆழ்குழாய் அமைக்கும் பணி

Print PDF

தினமணி 01.06.2010

ரூ.3.25 லட்சத்தில் புதிய ஆழ்குழாய் அமைக்கும் பணி

புதுச்சேரி, மே 31: உருவையாறு அன்பு நகரில் குடிநீர் வசதிக்காக ரூ.3.25 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்குழாய் போடும் பணியை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான க.நடராஜன் தொடங்கி வைத்தார்.

வில்லியனூர் எம்எல்ஏ ஜெ.நாராயணசாமி தலைமை வகித்தார். கவுன்சிலர் ப.சரஸ்வதி பழனி, கிராம பஞ்சாயத்து தலைவர் கே.நாகமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் ஜெ.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்

 

குடிநீர் தட்டுப்பாட்டை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை: ஆட்சியர்

Print PDF

தினமணி     01.06.2010

குடிநீர் தட்டுப்பாட்டை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை: ஆட்சியர்

தஞ்சாவூர், மே 31: தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது: மாவட்டம் முழுவதும் அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் விநியோகிப்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பனகல் கட்டடத்தில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் குடிநீர் விநியோகம் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு இருந்தால் கட்டுப்பாட்டு அறைக்கு 04362-236258 எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் (ஞாயிற்றுக்கிழமைத் தவிர). புகார்களை பதிவேட்டில் பதியப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து பயன் ùபுறலாம் என்றார்.

Last Updated on Tuesday, 01 June 2010 08:41
 

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 01.06.2010

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திருமலைவாசன் கூறியதாவது: கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் கொள்ளிடத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், வரும் தண்ணீரை அனைவருக்கும் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் குடிநீரை திருட்டுத்தனமாக மோட்டார் மூலம் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் தண்ணீரை பொதுமக்கள் வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும். கொதித்த நீரை குளிரவைத்து குடிப்பதால் நோய் பரவாமல் தடுக்க முடியும். விடுதியில் தங்கி உள்ள மாணவ, மாணவிகளுக்கு கொதித்த நீரை வழங்க தேவையான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 


Page 225 of 390