Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கரூர் நகராட்சிக்கு ரூ.30 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன் 31.05.2010

கரூர் நகராட்சிக்கு ரூ.30 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

கரூர், மே 31: கரூர் நகராட்சிக்கு ரூ.30கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர் நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவி சிவகாமசுந்தரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சிறிய மற்றும் நடுத்தர நகர்ப்புற உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் காவிரி கூடுதல் குடிநீர் ரூ.1.34 கோடி மதிப் பில் நிறைவேற்றப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது, நெரூரில் இருந்து கரூர் நகரம் வரை கூடுதல் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் ரூ.30 கோடியில் செயல்படுத்த நிர்வாக அனு மதி மற்றும் நிதி ஆதாரம் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் நகராட்சியில் செயல்பட உள்ளதால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். எனவே, தற்போதுள்ள குடிநீர் உபவிதிப்படி குடிநீர் கட்டணத்தை உயர்வு செய்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குடிநீர் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என அதிமுக உறுப்பினர் முத்து சாமி கூற, புதிய திட்டம் என்று அமலுக்கு வந்து குடி நீர் விநியோகிக்கப்படுகி றதோ அப்போதுதான் வரி உயர்வு அமலுக்கு வரும். தற்போது எந்த உயர்வும் இல்லை என கவுன்சிலர் மணிராஜ் கூறினார். மேலும் அவர் கூறுகை யில், 13ஆண்டுகளுக்கு முன் னர் ஆக்டோபஸ் வெல் அமைக்கப்பட்டு தற்போ தைய குடிநீர் திட்டம் செயல்படுகிறது.

Last Updated on Monday, 31 May 2010 11:28
 

கத்திவாக்கம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏன்?

Print PDF

தினகரன்  31.05.2010

கத்திவாக்கம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏன்?

திருவொற்றியூர். மே 31: கத்திவாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவுவது குறித்து நகராட்சி தலைவர் திருசங்கு விளக்கம் அளித்துள்ளார்.

கத்திவாக்கம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க, ரூ.6.22 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம்கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம், 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளும், 2 கீழ்நிலை தொட்டிகளும் கட்டப்பட்டன.

நகராட்சி முழுவதும் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்களும் பதிக்கப்பட்டன. வீடுகளுக்கும் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. இவ்வாறு அனைத்து பணிகளும் முடிந்தும், இதுவரை இணைப்பு கொடுக்கப்பட்ட பல வீடுகளுக்கு குடிநீர் வரவடில்லை. இதனால், ரூ.6.22 கோடி செலவழித்தும், குடிநீர் பிரச்னைக்கு இன்னும் தீர்வு ஏற்படவில்லை.

இதுகுறித்து நகராட்சி தலைவர் திருசங்கு கூறியதாவது:

11 லட்சம் லிட்டர் குடிநீர் இருந்தால், பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் கொடுக்க முடியும் என்ற நோக்கத்தில்தான் இந்த குடிநீர் அபிவிருத்தி திட்டம் உருவாக்கப்பட்டது. மணலி குடிநீர் மையத்திலிருந்து கத்திவாக்கம் வரை, சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 அங்குல குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வரும் இந்த குழாயை 12 அங்குலமாக மாற்றினால்தான் குடிநீர் வேகமாக வந்து, தொட்டியின் கொள்ளளவு முழுமையடையும்.

இதுபற்றி குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்து விட்டோம். ஆனால் இதுவரை குழாய் மாற்றப்படாததால், எப்போதும் போல் 5 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிரச்னையில் அவதிப்படுகின்றனர். லாரி மூலம் குடிநீர் விநியோகிப்பதால் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.60 லட்சம் செலவாகிறது. இவ்வாறு நகராட்சி தலைவர் திருசங்கு கூறினார். நகராட்சி தலைவர் விளக்கம்

 

கம்பத்தில் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு பிரிவு துவங்க அனுமதி

Print PDF

தினகரன்   31.05.2010

கம்பத்தில் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு பிரிவு துவங்க அனுமதி

கம்பம்: கம்பத்தில் குடிநீர் வாரியத்தின் பராமரிப்பு பிரிவு அலுவலகம் நாளை (ஜூன் முதல் தேதி) முதல் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு கூட்டுக் குடிநீர் திட்டம், கேபிடி திட்டம் உள்ளிட்ட 10 குடிநீர் திட்டங்களை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, உதவி செயற்பொறியாளர் தலைமையிலான பராமரிப்பு பிரிவு அலுவலகம் ஒன்றை கம்பத்தில் ஏற்படுத்த நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டது.

சமீபத்தில் உத்தமபாளையம் பகுதியில் ஏற்பட்ட காலரா பாதிப்பு காரணமாக பராமரிப்பு பிரிவு அலுவலகம் ஏற்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த அலுவலகம் நாளை (ஜூன் முதல் தேதி) ஆரம்பிக்கப்பட உள்ளது. ஒரு உதவி செயற்பொறியாளர், இரண்டு உதவி பொறியாளர்கள் மற்றும் டெக்னீசியன்கள் நியமிக்கப்படுவார்கள்.

இப்பகுதியில் உள்ள 10 குடிநீர் திட்டங்களின் பராமரிப்பு பணிகளை இந்த அலுவலகம் மேற்கொள்ளும். பகிர்மான குழாய்களில் ஏற்படும் கசிவு, குழாய் உடைதல், பம்பிங்கில் ஏற்படும் பிரச்னைகள், குளோரினேசன் உள்ளிட்ட பல பணிகளை இந்த அலுவலகம் மேற்கொள்ளும்.

 


Page 227 of 390