Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ரூ .1.66 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி துவக்கம்கீழக்கரை நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன்    31.05.2010

ரூ .1.66 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி துவக்கம்கீழக்கரை நகராட்சி தலைவர் தகவல்

கீழக்கரை: கீழக்கரையில் 1.66 கோடி ரூபாய் மதிப்பீட்டி குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி விரைவில் துவங்க உள்ளதாக நகராட்சி தலைவர்ர் பஷீர் அகமது கூறினார். அவர் கூறியதாவது:

கீழக்கரையில் 38 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டது.இந்த குழாய்களில் பெரும்பாலான இடங்களில் சேதமடைந்து கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது ஒப்புதலின் படி மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதற்கான பணி விரைவில் துவங்கப்பட உள்ளது.

பழைய குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டு, தரம் வாய்ந்த புதிய குழாய்கள் பொருத்தப் படுவதுடன், 10 லட்சம் லிட்டர் கொண்ட மேல்நிலை தொட்டியும் கட்டப்படும்.கீழக்கரை மக்களுக்கும் காவிரி நீர் முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்புக்கு 5ஆயிரம்,வர்த்தக நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செலுத்த வேண்டும், என்றார். நகராட்சி ஆணையாளர் சுந்தரம் உடன் இருந்தார்.

 

காரைக்குடி நகராட்சியில் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை

Print PDF

தினகரன் 28.06.2010

காரைக்குடி நகராட்சியில் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை

காரைக்குடி மே 28: காரைக் குடி நகராட்சி பகுதியில் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கும் பொருட்டு, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளின் பராமரிப்பு குறித்த ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது.

காரைக்குடி நகராட்சி பகுதியில் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்க நகராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக மேல்நிலை தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பொறியாளர் மணி, இளநிலை பொறியாளர் வேலுச்சாமி உட்பட அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

காரைக்குடியில் திருச்சி சாலையில் உள்ள மேல்நிலை குடிநீர் நீர்தேக்கதொட்டியில் தினமும் முறையாக குளோரின் கலக்கப்படுகிறதா, 15 நாளுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பின்னர் ஆணையர் கூறுகையில், ‘காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு மக்களுக்காக 10 ஆயிரத்து 948 குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத்துக்காக சுப்பிரமணியபுரம் பகுதியில் இரண்டரை லட்சம் லி., கொள்ளளவு தொட்டி, செக்காலை ரோட்டில் 15 லட்சம் லி., கொள்ளளவு தொட்டி, சுப்பிரமணியபுரம் (தெற்கு) பகுதியில் 4 லட்சம் லி., கொள்ளளவு தொட்டி, மகர்நோன்பு திடலில் 15 லட்சம் லி., கொள்ளளவு, கல்லுகட்டியில் ஒன்றரை லட்சம் லி., கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு 75 லட்சம் லி., குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இத்தொட்டிகளில் குளோரின் கலப்பு, சுத்தம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் லிட்டர் நீருக்கு, 400 கிராம் குளோரின் அளவு இருக்கிறதா, தண்ணீர் சுத்தம் செய்யும் ஸ்கவர் வால்வு முறையாக திறக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தண்ணீரின் மூலம் மக்களுக்கு ஏதேனும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க முறையாக தொட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறதுஎன்றார்.

 

கூடலூரில் குளோரின் கலந்து குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி    28.05.2010

கூடலூரில் குளோரின் கலந்து குடிநீர் விநியோகம்

கம்பம், மே 27: தேனி மாவட்டம் கூடலூர் நகர் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் முறையாகக் குளோரின் கலக்கப்பட்டுள்ளதா? என்று நகராட்சி சார்பில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் முறையாகக் குளோரின் கலக்காமல் விநியோகம் செய்ததால் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு 5 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

குடிநீரில் குளோரின் முறையாகக் கலக்கப்படுவதை உள்ளாட்சி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கூடலூர் நகராட்சிக்கு லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

வயிற்றுப் போக்கு, தொற்று நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மேல்நிலை, தரைதள தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. நகர் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கடைசிப் பகுதியில் 0.2 பி.பி.எம். அளவு இருக்கும் வகையில் குளோரின் கலக்கப்படுகிறது. நகரில் அனைத்து ஸ்கவர் வால்வுகளும் இயக்கப்பட்டு கசடு நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தப்பட்டுள்ளது, குடிநீரில் குளோரின் முறையாகக் கலக்கப்பட்டுள்ளதா என தனிக் குழுக்கள் வீடுகள், தெருக் குழாய்களில் ஆய்வு செய்து வருவதாக நகராட்சி நிர்வாக அலுவலர் வெற்றி அரசு தெரிவித்தார்.

 


Page 228 of 390