Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பில்லூர் குடிநீர் பாதிப்பு: நாளை முதல் சீராகும்

Print PDF

தினமணி    28.05.2010

பில்லூர் குடிநீர் பாதிப்பு: நாளை முதல் சீராகும்

கோவை, மே 27: சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் பில்லூர் குடிநீர் விநியோக பகுதிகளில் குடிநீர் விநியோகம் வெள்ளிக்கிழமை பாதிக்கப்படும். சனிக்கிழமை முதல் குடிநீர் விநியோகம சீராகும்.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பில்லூர் பராமரிப்பு கோட்ட செயற்பொறியாளர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: சாலைவிரிவாக்கப் பணி, பூமிக்கு அடியில் மின்கம்பி புதைக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருவதால், பில்லூர் கூட்டுக்குடிநீர் விநியோக பிரதானக் குழாயில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணி வியாழக்கிழை நடைபெற்றது. இப்பணி வெள்ளி கிழமையும் தொடரும். சனிக்கிழமை முதல் குடிநீர் விநியோகம் சீராகும்.

எனவே, பில்லூர் குடிநீர்த் திட்ட பகுதிகளான சூலூர், சுல்தான்பேட்டை, பல்லடம், பொங்கலூர், மதுக்கரை ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளும், மக்களும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

 

ரூ.200 கொடுத்து வாங்கும் அவலம் குடிநீருக்காக அல்லாடும் துவாரகா பகுதி மக்கள்

Print PDF

தினகரன்   27.05.2010

ரூ.200 கொடுத்து வாங்கும் அவலம் குடிநீருக்காக அல்லாடும் துவாரகா பகுதி மக்கள்

புதுடெல்லி, மே 27: துவாரகாவில் நாளுக்கு நாள் குடிநீர் விநியோகம் மோசமடைந்து வருகிறது. பல பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மேலாகியும் குடிநீர் வரவில்லை. இதனால் ரூ.200 கொடுத்து கை வண்டிகளில் வரும் தண்ணீரை வாங்குகின்றனர்.

துவாரகா பகுதிக்கான குடிநீர் விநியோகத்தை டெல்லி மேம்பாட்டு ஆணையம் (டி.டி..) கவனித்து கொள்கிறது. ஆனால், இப்பகுதியில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் எப்போது வரும் என்று இரவு, பகலாக காத்திருக்க வேண்டிய நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.

பாக்கெட் & பி, செக்டர் 14ஐ சேர்ந்த ஆசிர் என்பவர் கூறுகையில், "தினம் குடிநீர் பிரச்னை ஒரு பெரிய தலைவலி ஆகிவிட்டது. மின்சாரம் இல்லாமல் கூட ஒருவர் வாழ்ந்துவிடலாம். ஆனால், குடிநீர் இல்லாமல் வாழ முடியுமா? இப்போது அடிக்கும் கோடை வெப்பத்தில் ஒன்றுக்கு இரண்டு குடம் தண்ணீர் செலவாகிறது. குடிப்பதற்கே குடிநீர் இல்லாத நிலையில், ஏர் கூலர்களுக்கு தண்ணீர் கிடைக்காததால், கோடை வெப்பத்தில் வெந்து சாகும் நிலையில் இருக்கிறோம். குடிநீர் விநியோகத்தை சீர்செய்வதாக டி.டி.. அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரையில் எந்த விநியோகமும் சரியாகவில்லை. இதனால் ரூ.200 கொடுத்து தண்ணீரை வாங்குகிறோம்" என்றார் வெறுப்புடன்.

இதே பகுதியைச் சேர்ந்த பதக் என்பவர் கூறுகையில், "டி.டி.டி. தலைமை இன்ஜினியர் எஸ்.ஆர்.சோலங்கியிடம் குடிநீர் விநியோகத்தை சரி செய்யக்கோரி நான் மனு கொடுத்தேன். தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதி கூறினார். ஆனால், இதுவரையில் எதுவும் நடைபெறவில்லை" என்றார். இதுகுறித்து அதிகாரி சோலங்கியிடம் கேட்டபோது, "துவாரகா பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவு தண்ணீரை டெல்லி குடிநீர் வாரியம் விநியோகிக்கவில்லை. இதனால்தான் குடிநீர் விநியோகம் சரியாக நடைபெறவில்லை" என்றார்.

ஆனால், குடிநீர் வாரியத்தின் குடிநீர் பணிகளுக்கான உறுப்பினர் ஆர்.கே.கார்க்கிடம் கேட்டபோது, "டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு எதுவும் இல்லை. துவாரகா பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய் மிக நீண்ட தொலைவு செல்கிறது. இதில் நடுவில் பல பகுதிகளில் மோட்டார் வைத்து குடிநீர் திருட்டு நடைபெறுகிறது. இதை சரி செய்வதற்காக போலீசாரின் உதவியை நாடியுள்ளோம். துவாரகாவுக்கு தேவையான அளவு தண்ணீரை நாங்கள் விநியோகித்து கொண்டுதான் உள்ளோம்" என்றார்.

 

4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்

Print PDF

தினகரன் 27.05.2010

4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்

கோவை, மே 27: கோவை மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளதாவது:

சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தற்பொழுது பருவமழை உரிய காலத்தில் துவங்காததால் தற்போது அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள குடிநீரை கொண்டு மாநகர மக்களுக்கு தொடர்ந்து 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படாத சூழ்நிலை உள்ளது.

எனவே கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள்: 34, 35, 48, 49, 50, 51, 52, 53, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63 மற்றும் 64, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள்: 25, 27, 28, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 மற்றும் 54, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 30, 31, 32 மற்றும் 33 பகுதிகளுக்கு வரும் ஜூன் 1ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் தீர்மானித்து உள்ளது.தென்மேற்கு பருவமழை பெய்து அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவினை எட்டிய பின்பு மீண்டும் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கன முறையில் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

 


Page 229 of 390