Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பைப்லைன் உடைப்பால் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது

Print PDF

தினமலர்            25.10.2013

பைப்லைன் உடைப்பால் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது

முதுநகர் : கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் குடிநீர் பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த 4 நாட்களாக குடிநீர் விநியோகமின்றி 5 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடலூர் கேப்பர் மலையில் 10க்கும் மேற்பட்ட போர்வெல்கள் அமைக்கப்பட்டு கடலூர் நகர பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கேப்பர் மலையில் இருந்து பைப்லைன் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர் கடலூர் அடுத்த சரவணா நகரில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் ஏற்றப்பட்டு நகராட்சியில் 28வது வார்டு முதல் 33வது வார்டு வரை உள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி புது வண்டிப்பாளையத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்குச் செல்லும் குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வண்டிப்பாளையம், கண்ணகி நகர், சரவணா நகர், குழந்தைக் காலனி, மணவெளி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் மூலம் குடிநீர் பைப் லைன் சீரமைக்கும் பணி நடந்து வந்தது. நேற்று காலை மீண்டும் அதே பகுதியில் மற்றொரு பகுதியில் பைப் லைன் உடைந்து சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஒடியது. நகராட்சி ஊழியர்கள் பைப் லைனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், 4 நாட்களாக நகராட்சியைச் சேர்ந்த 5 வார்டுகளில் குடிநீர் விநியோகமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோன்று, திருப்பாதிரிப்புலியூர் சார் பதிவாளர் அலுவலகம் எதிரில் பைப் லைன் உடைந்து தண்ணீர் ஆறாக ஓடியது.

 

ராசாத்தாள் குளம் நீர் வரத்து பாதை தூர்வாரும் பணி துவங்கியது

Print PDF

தினமலர்           21.10.2013

ராசாத்தாள் குளம் நீர் வரத்து பாதை தூர்வாரும் பணி துவங்கியது

அவிநாசி :ராக்கியாபாளையம் ராசாத்தாள் குளத்துக்கு நீர் வரத்து பாதையை தூர்வாரும் பணி நேற்று துவங்கியது.

திருமுருகன்பூண்டி பேரூராட்சி, ராக்கியா பாளையத்தில், 12 ஏக்கர் பரப்பளவில் ராசாத்தாள் குளத்துக்கு, நொய்யலின் கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் வரத்து ஏற்பட்டு குளம் நிரம்பும். ஆறு ஆண்டுக்கு முன் நிரம்பிய குளம், இப்போது காய்ந்து கிடக்கிறது. குளத்துக்கு தண்ணீர் வரத்து பாதை பல இடங்களில் முட்புதர், செடிகளால் மண்டியும், சில இடங்களில் ஆக்கிரமிப்புகளாலும் அடைபட்டுள்ளது.

மழைக்காலங்களில் சேகரமாகும் தண்ணீர், முழுமையாக ராசாத்தாள் குளத்துக்கு வருவதில்லை. எனவே, குளத்தில் தண்ணீரை தேக்க, தூர்வாரும் பணியை, திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப் நேற்று துவக்கியது. ராக்கியாபாளையத்தில் நடந்த பூமி பூஜைக்கு, பேரூராட்சி துணை தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.

திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் வெங்கட், செயலாளர் மோகன் குமார், ரோட்டரி துணை கவர்னர் ரவிச்சந்திரன், மாவட்ட சேர்மன் (மாணவர் நலன்) முருகானந்தன், பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் ராமசாமி, கோபால், லதா மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், "பூண்டி பேரூராட்சி மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், தொழிலதிபர்களின் உதவியோடு, குளத்தின் நீர்வரத்து பாதை தூர்வாரும் பணியை துவக்கியுள்ளோம்.

முதல்கட்டமாக, கணியாம்பூண்டி முதல் குளம் வரை 3.5 கி.மீட்டரிலுள்ள கால்வாய் சீரமைக்கப்படும். அதன்பின், பொதுமக்கள் பங்களிப்போடு, குளத்தில் கரசேவை நடத்தப்படும்,' என்றார்.

 

ரூ.717 கோடியில் கூட்டு குடிநீர் திட்டங்கள்: முதல்வர் உத்தரவு

Print PDF

தினபூமி           20.10.2013

ரூ.717 கோடியில் கூட்டு குடிநீர் திட்டங்கள்: முதல்வர் உத்தரவு

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/New-CM_Jaya2(C)_3.jpg 

சென்னை, அக்.20 - திருப்பூர் _ கோவை _ தஞ்சாவூர் மாவட்டங்களில் ரூ.717 கோடியில் கூட்டு குடிநீர் திட்டங்கள் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களின் அடிப்படை தேவைகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.  எனவே,  தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து வழங்கப் பெறுவதற்காக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில், மூலனூர், தாராபுரம், குண்டடம் மற்றும் காங்கேயம் மற்றும் <ரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,262 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுப்பதற்காக கொடுமுடிக்கு அருகிலுள்ள காவிரி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு   91 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கும், இத்திட்டத்திற்காக வருடாந்திர பராமரிப்பு செலவாக 3 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கும் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவிட்டுள்ளார்.  இதன் மூலம் இப்பகுதிகளில் வாழும் 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து கிடைத்திட வழிவகை ஏற்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி, பெருமகளூர் மற்றும் அதிராமபட்டினம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1,153 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுப்பதற்காக  கொள்ளிடம் ஆற்றின் நீரை ஆதாரமாகக் கொண்டு 495 கோடியே 70 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கும், இத்திட்டத்திற்காக வருடாந்திர பராமரிப்பு செலவாக  9 கோடியே 19 லட்சம்  ரூபாய் வழங்குவதற்கும் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இப்பகுதிகளில் வாழும் 5 லட்சத்து 76 ஆயிரம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து கிடைத்திட வழிவகை ஏற்படும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர், பூலுவபட்டி, தென்கரை, வேடப்பட்டி, தாளிக்ஷ்ர், ஆலந்துறை, பே%ர் ஆகிய 7 பேரூராட்சிகள் மற்றும் தொண்டாமுத்தூர்  ஒன்றியத்தைச் சார்ந்த 134 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி செய்துக் கொடுப்பதற்காக பவானி ஆற்றின் நீரை ஆதாரமாகக் கொண்டு 130 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கும், இத்திட்டத்திற்காக வருடாந்திர பராமரிப்பு செலவாக 3 கோடியே 91 லட்சம் ரூபாய் வழங்குவதற்கும்  முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவிட்டுள்ளார்.  இதன் மூலம் இப்பகுதிகளில் வாழும் 1 லட்சத்து 55 ஆயிரம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து வழங்குவதற்கு வழிவகை ஏற்படும்.

மொத்தத்தில் திருப்பூர், <ரோடு, தஞ்சாவூர் மற்றும்  கோயம்புத்தூர் மாவட்டங்களில் 717 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவிட்டுள்ளார்.  இதன்மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைவார்கள்.

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 


Page 24 of 390