Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நல்ல மழை பெய்தாலும் ஜூலை 3வது வாரம் வரை குடிநீர் வெட்டு நீடிக்கும்

Print PDF

தினகரன்    26.05.2010

நல்ல மழை பெய்தாலும் ஜூலை 3வது வாரம் வரை குடிநீர் வெட்டு நீடிக்கும்

மும்பை, மே 26: எதிர்பார்ப் பதைப்போல இன்னும் 2 வார காலத்தில் நல்ல மழை பெய்யத் தொடங்கி னாலும் மும்பையில் ஜூலை மாதம் மூன்றாவது வாரம் வரை குடிநீர் வெட்டு தொடர்ந்து நீடிக் கும் என மாநகராட்சி கூறியுள்ளது.

கடந்த மழை சீசனில் போதிய அளவு மழை பெய்யாததால் மும்பையில் 15 சதவீதம் குடிநீர் வெட்டு அமலில் இருக்கிறது. இந்த குடிநீர் வெட்டை நீக்குவது குறித்து ஜூலை 15ம் தேதிக்கு பிறகே முடிவு செய்யப்படும் என மாந கராட்சி அதிகாரிகள் கூறி னர்.

கேரளாவில் இந்த மாத இறுதியில் பருவமழை பெய்யத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் ஜூன் 10ம் தேதி மழை தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. எனினும் மும்பைக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஆறு ஏரிகளிலும் ஓரளவு தண்ணீர் நிரம்பும் வரையில் குடிநீர் வெட்டு தொடரும் என துணை மாநகராட்சி கமிஷனர் தினேஷ் கொண்டாலியா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மே லும் கூறுகையில், "ஒவ் வொருவரையும் போலவே இந்த சீசனில் பருவமழை நன்றாக பெய்யும் என்றே நாங்களும் நம்புகிறோம். ஆனாலும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைக்காக ஜூலை மாதம் மூன்றாவது வாரம் வரையில் குடிநீர் வெட்டை நீக்க முடி யாது. ஜூலை 15ம் தேதி வாக்கில் நிலைமையை மறு ஆய்வு செய்ய இருக்கி றோம்Ó என்றார்.

பருவமழை நன்றாக பெய்யும் ஆண்டுகளில் மோடக் சாகர் மற்றும் துளசி ஏரிகள் ஜூலை மாதம் மத்தியில் நிரம்பி வழியத் தொடங்கும். விகார் ஏரி ஆகஸ்ட் இரண் டாவது வாரத்தில் நிரம்பும். அப்பர் வைதர்ணா மற்றும் பாட்சா ஏரிகள் ஆகஸ்ட் மாத இறுதியில் நிரம்பும் என்பது குறிப்பிடத் தக்கது.

 

வாரியம் நடவடிக்கை குடிநீர் பிரச்னைக்கு தீர்வு 500 புதிய போர்வெல்

Print PDF

தினகரன்         26.05.2010

வாரியம் நடவடிக்கை குடிநீர் பிரச்னைக்கு தீர்வு 500 புதிய போர்வெல்

பெங்களூர், மே 26:பெங்களூர் நகரில் கூடுதலாக 500 போர்வெல்கள் அமைக்கப்பட்டு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று குடிநீர் வடிகால்வாரிய அதிகாரி ராமமூர்த்தி தெரிவித்தார்.

கோடை மழை சில நாட்களாக பெய்து வரும் நிலையில் பெங்களூர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. தற்போதே அப்பகுதியில் தோண்டப்படும் போர்வெல்களில் 20% தண்ணீர் கிடைப்பதில்லை. மாநகராட்சி குழாய்களில் 2 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது எந்தவித அறிவிப்பும் இல்லாமல் குடிநீரை நிறுத்தி விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து நகர குடிநீர் வடிகால் வாரிய தலைவர் பி.பி.ராமமூர்த்தி தெரிவித்துள்ளதாவது, மாநகராட்சியில் ஏற்கனவே 400 போர்வெல் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குடிநீர் பிரச்னை உள்ள இடங்களில் மேலும் 500 போர்வெல்கள் அமைக்கப்படும். சில இடங்களில் மாநகராட்சி தோண்டியுள்ள போர்வெல்களில் தண்ணீர் கிடைக்கவில்லை.

கே.ஆர்.புரம், மகதேவபுரா மற்றும் பெனகனஹள்ளி பகுதியில் தோண்டப்பட்ட பெரும்பாலான போர்வெல்களில் தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நிலையில் திப்ப குண்டனஹள்ளி நீர்தேக்கத்தில் நீர்மட்டம் 14 அடிக்கும் கீழே குறைந்துள்ளது. இதனால் பெங்களூர் மேற்கு பகுதிக்கு மட்டும் மே மாத இறுதிவரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் தண்ணீர் வழங்க முடியும். இவ்வாறு குடிநீர் வடிகால்வாரிய அதிகாரி ராமமூர்த்தி கூறினார்.

 

சுத்தமாகிறது மாநகராட்சி நீர்தேக்கத் தொட்டிகள்

Print PDF

தினமணி        26.05.2010

சுத்தமாகிறது மாநகராட்சி நீர்தேக்கத் தொட்டிகள்

திருப்பூர், மே 25: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.

திருப்பூர் மாநகராட்சி பகுதி மக்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 490 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முதல், 2வது மற்றும் 3வது கூட்டுக் குடிநீர் திட்டங் கள் மூலம் திருப்பூருக்கு கொண்டு வரப்படும் குடிநீரை தடையின்றி விநியோகிக்க 8 மேல்நிலைத் தொட்டிகள், ஒரு நிலமட்டத் தொட்டி மற்றும் 9 நிலமட்ட சேமிப்புத் தொட்டிகளை மாநகராட்சி நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில், பருவமழை துவங்க உள்ளதை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கும் குடிநீர்த் தொட்டிகள், நீர்த்தேக்கம், வடிகட்டும் பகுதிகளை மே 31-ம் தேதிக்குள் சுத்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாநகராட்சி பகுதியிலுள்ள நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.

மேலும், பருவமழைக் காலங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் விநி யோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சிப் பருக வேண்டும். மாநகராட்சி பகுதிகளிலுள்ள நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவதையொட்டி குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

 


Page 231 of 390