Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

செம்மொழி மாநாட்டுக்கு கை கொடுக்குமா சிறுவாணி குடிநீர்?

Print PDF

தினமலர்        26.05.2010

செம்மொழி மாநாட்டுக்கு கை கொடுக்குமா சிறுவாணி குடிநீர்?

கோவை : சிறுவாணி அணையில் தற்போது 20 நாட்களுக்குரிய குடிநீரே இருப்பதால், இருக்கும் தண்ணீரால் செம்மொழி மாநாட்டை சமாளிக்க முடியுமா என்ற கேள்விக்குறி, மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. கோவையிலிருந்து 37 கி.மீ., தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை உள்ளது. அணையிருக்கும் பகுதி கேரள எல்லையில் இருந்தாலும், அங்கிருந்து வழிந்தோடும் தண்ணீர் தமிழகத்திற்கே வருகிறது. அதனால், கோவை மக்களின் தாகம் தீர்க்கும் குடிநீராக பயன்படுத்தப்படுகிறது.அணையிலிருந்து தண்ணீர் எடுப்பது, சுத்திகரிப்பது போன்ற பணிகளை முழுக்க முழுக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரே செய்து வருகின்றனர். இருப்பினும், அணையின் பராமரிப்புப் பணிகளை கேரள பொதுப்பணித்துறை மேற்பார்வையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்து வருகின்றனர். இப்பணிகளை மாநகராட்சி தன்வசம் ஒப்படைக்கும் படி குடிநீர் வடிகால் வாரியத்தை கேட்டு வருகிறது. ஆனால், பொறுப்புகளை ஒப்படைக்க குடிநீர் வடிகால் வாரியம் மறுத்து வருகிறது. கடந்த ஏப்ரலில் பெய்த கோடை மழையால் அணை நிரம்பி மதகுகள் திறந்துவிடப்பட்டு, தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. அதன் பின், அணையின் நீர்மட்டம் உயரவும் இல்லை; அணை நிரம்பவும் இல்லை.

செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுவதால் அதற்கு தேவையான குடிநீரை வழங்குவதாக கலெக்டர் உமாநாத்தும், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவும் உறுதியளித்திருந்தனர். ஆனால் செம்மொழி மாநாடு நடைபெறுவதற்கு முன்பே சிறுவாணி குடிநீர் வினியோகம் நின்று விடுமோ என்ற பயம் மாநகராட்சி அதிகாரிகளை பிடித்து வாட்டிவருகிறது.

சிறுவாணி அணையில் நேற்றைய நிலவரப்படி உள்ள நீர்மட்டம் 868.30 மீட்டர். நாளொன்றுக்கு 86 எம்.எல்.டி., தண்ணீர் எடுக்கப்படுகிறது; 69 எம்.எல்.டி., குடிநீர் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மற்றும் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வினியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள குடிநீர் வழியோர கிராமங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.அன்றாடம் 89 எம்.எல்.டி., குடிநீர் எடுப்பதால் அணையின் நீர் மட்டம் 9 செ.மீ., அளவுக்கு குறைந்து வருகிறது. கடைசியாக 863 மீட்டர் வரை தான் குடிநீர் எடுக்க முடியும். தற்போது 5 மீ., தூரத்திற்கே சிறுவாணி குடிநீர் அணையில் உள்ளது. ஒரு நாளைக்கு 9 செ.மீ., என்றால் அதிகபட்சமாக தற்போது சிறுவாணி அணையில் இருக்கும் குடிநீரை 20 நாட்கள் வரையே எடுக்க முடியும்.

அதற்கு மேல் எடுப்பதற்கு முடியாது. அப்படியே எடுத்தாலும் சேறும், சகதியுமாக இருக்கும். தண்ணீரை வாய்க்கால் வெட்டி, மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கலாம். அப்படியே எடுத்தாலும் அவை அதிகபட்சமாக ஐந்து நாட்கள் வரையே சமாளிக்கலாம். ஆனால், செம்மொழி மாநாடு கோவையில் நடப்பதற்கு இன்னும் 29 நாட்கள் இருக்கும் நிலையில் சிறுவாணி அணையில் இருக்கும் குடிநீர் அதிகபட்சமாக 25 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

அதிகாரிகள் யோசனை:பில்லூர் குடிநீரை செம்மொழி மாநாட்டிற்கு தேவையான அளவு இருப்பு வைக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் யோசித்து வருகின்றனர். பில்லூர் குடிநீர் மோட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு கோவை நகருக்கு குழாய்கள் மூலம் கொண்டுவரப்படுகிறது. அடிக்கடி ஏற்படும் மின் தடையால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. பில்லூர் குடிநீர் வினியோகத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், லாரிகளில் தண்ணீரை பிடித்து வினியோகம் செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தண்ணீர் பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பே அதிகாரிகள் விழித்துக்கொண்டால், நல்ல பெயரை கோவைக்கு பெற்றுத் தரலாம்.

 

உத்தமபாளையம் பகுதியில் குடிநீர் சப்ளையில் மாற்றம் : லோயர்கேம்ப்பில் இருந்து நேரடி சப்ளை

Print PDF

தினமலர்       26.05.2010

உத்தமபாளையம் பகுதியில் குடிநீர் சப்ளையில் மாற்றம் : லோயர்கேம்ப்பில் இருந்து நேரடி சப்ளை

கம்பம்: கோடைகாலங்களில் மட்டும் உறைகிணறுகளில் குடிநீர் பம்பிங் செய்வதை நிறுத்த குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது. லோயர்கேம்பில் இருந்து நேரடியாக உத்தமபாளையம் பகுதிக்கு பம்பிங் செய்து சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

குடிநீர் சரியாக குளோரினேசன் செய்யப்படாததாலும், குடிநீர் மாசுபட்டதாலும் உத்தமபாளையம் பகுதியில் காலரா பாதிப்பு ஏற்பட்டது. இனி வரும் காலங்களில் காலரா பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து குடிநீர் வாரியத்தின் தலைமை பொறியாளர் தனுஷ் தலைமையிலான குழு ஆலோசனை வழங்கி உள்ளது.உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள கூடலூர், கம்பம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அனுமந்தன் பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் ஆகிய ஊர்களுக்கு லோயர் கேம்பில் இருந்து நேரடியாக சப்ளை செய்ய பகிர்மான குழாய்கள் உள்ளது. கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ஓடைப் பட்டி சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களுக்கு மட்டும் நேரடியாக சப்ளை செய்ய வசதி இல்லை. நேரடியா சப்ளை செய்ய பகிர் மான குழாய்கள் உள்ள ஊர்களுக்கு லோயர் கேம்பில் இருந்து சப்ளை செய்யவும், பிற கிராமங்களுக்கு புதிய பகிர்மான குழாய்கள் பதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோடைகாலங்களில் ஆற்றில் அமைக்கப்பட் டுள்ள உறை கிணறுகளில் இருந்து குடிநீர் பம்பிங் செய்யாமல் இருக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. ஆற்றில் அதிக தண்ணீர் வரும் போது மட்டும், உறை கிணற்றில் பம்பிங் செய்து சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

பெங்களூரில் குடிநீர் விற்கும் தனியார் லாரிகளுக்கு தடை ? நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க அரசு பரிசீலனை

Print PDF

தினகரன்        25.05.2010

பெங்களூரில் குடிநீர் விற்கும் தனியார் லாரிகளுக்கு தடை ? நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க அரசு பரிசீலனை

பெங¢களூர், மே 25: பெங்களூரில் குடி நீர் விற்பனை செய்யும் தனியார் லாரிகளை தடை செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார்.

நிருபர்களுக்கு அசோக் நேற்றளித்த பேட்டி:

பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு தீர்வாக ஒவ்வொரு தொகுதியிலும் அந¢தந்த எம்.எல்.ஏக்கள் தலைமையில் அதிரடிப்படை அமைக்க திட்டமிட்டுள்ளோம். போர்வெல் போடுவது, குடிநீர் சப்ளை லாரிகளை சரியாக உரிய பகுதிக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பணிகளை இவர்கள் செய்வார்கள். 198 வார்டிலும் வாட்டர் மேன் பணியிடங்கள் நிரப்பப்படும். பெங்களூரில் இருக்கும் போர்வெல்களில் உறிஞ்சும் குடிநீரை, நகருக்குள்ளேயே தனியார் தண்ணீர் லாரிகள் விற்று கொள்ளையடித்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், லாரிகளை தடை செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

குடிநீர் சப்ளை செய்யும் லாரிகள் பெங்களூருக்கு வெளியே உள்ள கிராமங்களில் இருந்து நீரேற்றி வந்தால் அரசு அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காது. நகருக்குள் தனியார் லாரிகள் குடிநீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றுவிடுகிறது. அதே நேரத்தில் லாரிகளில் மாநகராட்சி இலவசமாக குடிநீர் வினியோகம் செய்துவரும் பணி தொடரும்.

கே.எஸ்.ஆர்.டி.சி போக்குவரத்துக் கழகம் நடப்பு நிதியாண்டில் ரூ.49 கோடி லாபம் ஈட்டியுள்ளது. தெலுங்கானா பிரச்னையால் ஆந்திர மாநிலத்திற்கு 3 மாதங்கள் பஸ்கள் இயங்கவில்லை. இதன் விளைவாக, கடந்தாண்டைவிட சுமார் ரூ.3 கோடி லாபம் குறைந்துள்ளது.

பி.எம்.டி.சி நிர்வாகம் நடப்பு நிதியாண்டில் ரூ.65 கோடி லாபம் ஈட்டியுள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி புதிதாக பல சக்கர (மல்டி ஆக்சில்) வோல்வோ பஸ்களை இயக்க உள்ளது. ஒரு பஸ்சின் விலை ரூ.85 லட்சமாக இருந்தாலும் பிற வோல்வோக்களைவிட கூடுதலாக 20 இருக்கைகள் இருக்கும் என்பதால், கழகத்திற்கு கூடுதல் லாபம் கிடைக்கும். வெகுதூர இடங்களுக்கு இயக்கப்பட உள்ள இந்த பஸ்சில், வழக்கமான வோல்வோ பஸ் கட்டணமே வசூலிக்கப்படும்.

மங்களூரில் இயக்கப்படும் சிட்டி வோல்வோ பஸ்கள் மூலம், ஒரே மாதத்தில் ரூ.5 லட்சம் லாபம் கிடைத்துள்ளது. பிற நகரங்களிலும் சிட்டி வோல்வோ இயக்கப்படும். அரசு பஸ்கள் மூலம் ஏற்படும் சாலை விபத்துகளை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே நமது போக்குவரத்து கழகங்கள்தான மிகக் குறைந்த விபத்து சதவீதத்துடன் இயங்கிவருகின்றன என்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 


Page 232 of 390