Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் குழாய் அமைப்பு

Print PDF

தினமலர்   25.05.2010

குடிநீர் குழாய் அமைப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி கொண்டமநாயக்கன்பட்டி ஆறாவது வார்டில் 2.25 லட்சம் ரூபாய் செலவில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக் கப்பட்டுள்ளது. இப்பகுதி பட்டாளம் மன் கோயில் தெருவில் இருந்து ஆதிதிராவிடர் காலனி வரையில் உள்ள பகுதியில் புதிய பைப் லைன் அமைக்கப்பட் டுள்ளது. இப்பகுதியில் தேவையான இடங்களில் தெருக்குழாய்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று பேரூராட்சி தலைவர் ராமசாமி தெரிவித்தார்.

 

குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் ஒட்டன்சத்திரம் கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர்   25.05.2010

குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் ஒட்டன்சத்திரம் கூட்டத்தில் முடிவு

ஒட்டன்சத்திரம் : குடிநீர் பிரச்னைக்கு முக் கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒட்டன்சத்திரம் சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்து.

ஒட்டன்சத்திரம் சிறப்புநிலை பேரூராட்சிக் கூட் டம் தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. துணைதலைவர் வனிதா முன்னிலை வகித் தார். செயல் அலுவலர் ஜெயக்கொடி வரவேற் றார். அரசு கொறடா சக்கரபாணி சிறப்பு அழை ப்பாளராக பங்கேற்றார். பேரூராட்சி கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை போக்க பழுதான பொதுக்குழாய்களை தேவைக்கேற்ப நீட்டிப்பு செய்யவும், விரிவாக்க பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய புதிய தெருக்குழாய்கள் அமைத்தல், சில இடங்களில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல், வார்டுகள் தோறும் தேவைப்படும் இடங்களில், புதிய தெருவிளக்குகள் அமைத்தல், வடிகால் வசதிகள் செய் தல், தார்ரோடு அமைத் தல், உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

 

பொன்னை ஆற்றிலிருந்து ஆற்காட்டிற்கு குடிநீர்

Print PDF

தினகரன்   24.05.2010

பொன்னை ஆற்றிலிருந்து ஆற்காட்டிற்கு குடிநீர்

ஆற்காடு, மே 24: முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் ஆற்காடு பஸ்நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு நகராட்சி துணைத்தலைவர் பொன்.ராஜசேகர் தலைமை தாங்கினார். ஆணையாளர் எஸ். பாரிஜாதம், பொறியாளர் சா. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை பொறியாளர் செல்வகுமார் வரவேற்றார்.

விழாவில் ஆற்காடு எம்.எல்.., கே.எல். இளவழகன் கலந்துகொண்டு உயர் மின்கோபுர விளக்கை இயக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: ஆற்காடு நகர குடிநீர் பிரச்னையை தீர்க்க அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திற்கு காவிரி நீர் வரும் வாய்ப்பு உள்ளது. அந்த நீரை ஆற்காடு நகரத்திற்கு கொண்டு வரவும், பொன்னை ஆற்றில் இருந்து ஆற்காட்டிற்கு குடிநீர் கொண்டு வரவும் இரண்டு திட்டங்கள் உள்ளது. இதில் ஏதாவது ஒரு திட்டம் மூலம் ஆற்காடு நகர குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் நந்தகுமார், சுரேஷ், கஸ்தூரி, செல்வம், வேண்டா, ஒன்றிய கவுன்சிலர் சந்திரன், போக்குவரத்து பணிமனை மேலாளர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். எம்.எல்.., இளவழகன் தகவல்

 


Page 233 of 390