Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பலத்த மழை: பூண்டி ஏரி நீர்மட்டம் உயர்வு

Print PDF
தினமணி     21.05.2010

பலத்த மழை: பூண்டி ஏரி நீர்மட்டம் உயர்வு

திருவள்ளூர், மே 20: லைலா புயலால் கடந்த இரு தினங்களாக தமிழக, ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் பெய்த கன மழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பூண்டி ஏரி. இந்த ஏரியில் சேமிக்கப்படும் நீர் இணைப்புக் கால்வாய் மற்றும் மழலைக் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

கோடை காலம் என்பதால் 34.5 அடியாக இருந்த பூண்டி நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. 17-ம் தேதி காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் 27.55 அடி தண்ணீர் இருந்தது.

இந்நிலையில் லைலா புயல் சின்னம் உருவாகி அதன் காரணமாக 18, 19-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோர பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 27.70 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா கால்வாயில் மழையின் காரணமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 243 கன அடி நீர்வரத்து உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் எல்லையோரப் பகுதியில் மழை நீடித்தால் கிருஷ்ணா கால்வாய் வழியாக நீர் வரத்து மேலும் அதிகரிக்கும். இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கனிசமாக உயரும் வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டரில்: அம்பத்தூர் 143, பொன்னேரி 167, சோழவரம் 130, கும்மிடிப்பூண்டி 156, செம்பரம்பாக்கம் 65, பள்ளிப்பட்டு 51, பூந்தமல்லி 62, பூண்டி 86, தாமரைப்பாக்கம் 108, திருத்தணி 73, திருவள்ளூர் 90, ஊத்துக்கோட்டை 93.

 

பில்லூர் குழாயில் உடைப்பு: சீரமைக்கும் பணி தீவிரம்

Print PDF

தினமணி    21.05.2010

பில்லூர் குழாயில் உடைப்பு: சீரமைக்கும் பணி தீவிரம்

கோவை, மே 20: பில்லூர் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பில்லூரில் இருந்து கோவைக்கு வரும் பிரதான குடிநீர் குழாயில் கரட்டுமேடு பகுதியில் வியாழக்கிழமை மதியம் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி குடிநீர்ப் பிரிவு உதவிப் பொறியாளர் கருப்பசாமி தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாகச் சென்றனர்.

உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப் பணி வெள்ளிக்கிழமை காலை வரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே,வெள்ளிக்கிழமை இரவு முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

 

ஆக. 6-ல் துணை முதல்வர் அடிக்கல்

Print PDF

தினமணி    21.05.2010

ஆக. 6-ல் துணை முதல்வர் அடிக்கல்

கடையநல்லூர், மே 20: கடையநல்லூர் நகராட்சியில் ரூ. 21 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படவுள்ள புதிய குடிநீர்த் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆக. 6- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழக துணைமுதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பீட்டர்அல்போன்ஸ் தெரிவித்தார்.

கடையநல்லூர் பகுதியில் 1300 பயனாளிகளுக்கு, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகையினைவழங்கி, பீட்டர்அல்போன்ஸ் எம்.எல்.. மேலும் பேசியதாவது:

இது போன்ற திட்டங்களுக்கு தமிழகம்தான் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த திட்டத்தினை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இத்திட்டத்திற்கு ரூ. 17 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இத்திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வரை பாராட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும். அப்படி பாராட்டினால்தான் மேலும் நல்ல திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்.

கடையநல்லூர் நகராட்சியில் ரூ. 21 கோடி மதிப்பீட்டில் முழு மானியத்துடன் புதிய குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்திட தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நிதி ஒதுக்கியுள்ளனர். இதற்கான அடிக்கல்நாட்டு விழா ஆக. 6-ஆம் தேதி கடையநல்லூரில் நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார் என்றார் பீட்டர்அல்போன்ஸ்.

 


Page 234 of 390