Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு: அமைச்சர்

Print PDF

தினமணி        18.05.2010

குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு: அமைச்சர்

சிவகாசி, மே 18:விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசி நகர்களுக்கு குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்வாய்க்கிழமை கூறினார்.

சிவகாசியில் 3518 பேருக்கு ரூ 4.46 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் மேலும் பேசியதாவது:

மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக குறைகளைக் கேட்கும் முகாம் நடத்தி, பொதுமக்களுக்கு நலத் திட்டங்களை திமுக அரசு அளித்து வருகிறது. இந்த நலத்திட்ட உதவிகள் கொடுத்தவருக்கு நன்றியுடன் இருங்கள் என்றார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் பேசியதாவது:

பொது மக்களிடமிருந்து 19,477 மனுகள் பெறப்பட்டது. தற்போது அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் 3.42 லட்சம் பேருக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் 3 லட்சம் பேருக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மூன்று வருட உத்தரவாதமுள்ள கடன் அட்டைகள் வழங்குவதற்கு 11 ஆயிரம் விவசாயிகளிடம் வேளாண்மைத் துறையினர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.

ஜூன் 5-ம் தேதி மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுóம் என்றார் ஆட்சியர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் கணேசன் வரவேற்றார். சிவகாசி நகர்மன்றத் தலைவர் ராதிகாதேவி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் டி.வனராஜா ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் காசிவிஸ்வநாதன், நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி.அசோகன், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுப்பாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

குடிநீர் தொட்டி சீரமைப்பு பணி: மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு

Print PDF

தினமலர்      15.05.2010

குடிநீர் தொட்டி சீரமைப்பு பணி: மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு

திருச்சி: மரக்கடை குடிநீர் தொட்டியில் ஏற்பட்ட கசிவை சீரமைக்கும் பணியை மேயர், கமிஷனர் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

திருச்சி மாநகரின் மையப்பகுதியான மரக்கடையில் 30 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மெகா சைஸ் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. 30ஆண்டுக்கு முன் இந்த தொட்டி கட்டப்பட்டது. தொட்டியின் கீழ் பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. 12, 14 மற்றும் 16 முதல் 21 வரை ஆகிய 8 வார்டுகளுக்கு இந்த தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த தொட்டியில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க மாநகராட்சியின் பொதுநிதியிலிருந்து 66 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அதேநேரத்தில் இந்த தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் பாதிக்காத வண்ணம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக வட, தென்புறம் என இரு பகுதியாக பிரித்து, தற்போது தென்புறம் குடிநீர் தொட்டி சீரமைப்பு பணி நடக்கிறது. இப்பணி நிறைவு பெற்றவுடன் வடபகுதி சீரமைப்பு பணி துவங்கும். தற்போது தென்புரத்தில் சீரமைப்பு நடைபெறுவதால் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றாமல் நேரடியாக குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது. குடிநீர் தொட்டி சீரமைப்பு பணிகளை மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். அப்போது, மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

 

திட்டக்குடியில் குடிநீர் பம்புகள் திறப்பு விழா

Print PDF

தினமலர்      15.05.2010

திட்டக்குடியில் குடிநீர் பம்புகள் திறப்பு விழா

திட்டக்குடி : திட்டக்குடி பேரூராட்சியில் குடிநீர் கைப்பம்புகள் திறப்பு விழா நடந்தது.திட்டக்குடி பேரூராட்சியில் கோடை காலத்தையொட்டி குடிநீர் சீராக கிடைக்க கூடுதலாக கைப் பம்புகள் அமைக்கப்பட் டது. அதன்படி திட்டக்குடி நாளங்காடிதெரு, .எம்.கே.நகர், தர்மகுடிகாடு துணைமின் நிலையம் அருகில், இளமங்கலம் உட்பட ஏழு இடங்களில் தலா 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கைப்பம்புகள் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று காலை திட்டக்குடியில் நடந்தது.பேரூராட்சி சேர்மன் மன்னன் தலைமை தாங்கி, இயக்கி வைத்தார். துணை சேர்மன் கமலி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜோதிமாணிக்கம் வரவேற்றார். கவுன்சிலர்கள் சரவணன், ராஜேந்திரன், முத்துவேல், ராஜா அலெக் சாண்டர், உதவி பொறியாளர் பூமிநாதன், பதிவறை எழுத்தர் கிருஷ்ணமூர்த்தி, காண்ட்ராக்டர் தேவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 237 of 390