Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஈரோடு நகரில் பிரதான குழாய் உடைப்பு 14 வார்டுகளில் இன்று குடிநீர் நிறுத்தம்

Print PDF

தினமலர்         18.05.2010

ஈரோடு நகரில் பிரதான குழாய் உடைப்பு 14 வார்டுகளில் இன்று குடிநீர் நிறுத்தம்

ஈரோடு: பிரதான குழாய் உடைப்பு காரணமாக மாநகராட்சியில் உள்ள 14 வார்டுகளுக்கு இன்று குடிநீர் விநியோகம் இருக்காது. மாநகராட்சியின் சென்னிமலை சாலை மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் காந்திஜி சாலை 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு செல்லும் பிரதான நீரேற்று குழாய் கொங்காலம்மன் கோவில் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. பொக்கலைன் இயந்திரம் மூலம் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி நேற்று காலையில் இருந்து நடக்கிறது. கொங்காலம்மன் கோவில் நடுசாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகராட்சியின் சென்னிமலை சாலை மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் காந்திஜி சாலையில் உள்ள 30 லட்சம் லிட்டர் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு செல்லும் பிரதாசன நீரேற்று குழாயில் கொங்காலம்மன் கோவில் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான வார்டு 17 முதல் 22, 29 முதல் 32, 41 முதல் 45 ஆகிய 14 வார்டுகளுக்கு இன்று குடிநீர் விநியோகம் செய்ய இயலாது.

 

குடிநீர் திட்ட பணி இயக்குனர் ஆய்வு

Print PDF

தினமலர்      17.05.2010

குடிநீர் திட்ட பணி இயக்குனர் ஆய்வு

ஒகேனக்கல்: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் ஆய்வு செய்தார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் ஆய்வு செய்தார்.

பென்னாகரம் அடுத்த மட்ததில் நடந்து வரும் பணி மற்றும் ஒகேனக்கல்லில் தலைமை நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். திட்ட தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன், மேற்பார்வை பொறியாளர் கிருஜ்ணன், செயற்பொறியாளர் திருமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ஆழியார் குடிநீர் அண்ணாநகரில் விநியோகம்

Print PDF

தினமலர்   17.05.2010

ஆழியார் குடிநீர் அண்ணாநகரில் விநியோகம்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் குடியிருப்பு பகுதிக்கு, நான்கு லட்சம் ரூபாய் செலவில் ஆழியார் குடிநீர் திட்டத்தின் புதிய பைப் லைன் மூலம் தண்ணீர் விநியோகம் துவங்கியது.

கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு பகுதிக்கு முதலில் அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. பின், ஆழியார் குடிநீர் திட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கிணத்துக்கடவு வடக்கு பகுதி முழுவதும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டதால், இப்பகுதிக்கு தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டது.

ஆனால், கிணத்துக்கடவு தெற்கு பகுதிகளான அண்ணாநகர், எம்.ஜி.ஆர்., நகர், பகவதிபாளையம், கல்லாங்காட்டுப்புதூர், சிங்காராம்பாளையம் போன்ற பகுதிகளுக்கு அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.

இதன்பேரில், பேரூராட்சி கூட்டத்தில், அண்ணாநகர் பகுதிக்கு ஆழியார் குடிநீர் திட்டத்தில் இருந்து பைப் லைன் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின், இதற்காக நான்கு லட்சம் ரூபாய் செலவில் புதிய பைப் லைன் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இத்திட்டத்தில் தண்ணீர் விநியோகம் செய்வதற்கான கூட்டம் நடந்தது.

இதற்கு, தலைவர் விஜயா தலைமை வகித்தார். துணைத்தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கதிர்வேல் வரவேற்றார். விழாவில், பேரூராட்சி தலைவர், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் நடராஜ் ஆகியோர் தண்ணீர் விநியோகத்தை துவக்கி வைத்தனர்.

 


Page 239 of 390