Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி       14.05.2010

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு

தருமபுரி, மே 13: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஸ்வரன்சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் ரூ.1928.80 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

முதல் கட்டமாக காவிரி ஆற்றில் நீர் உறிஞ்சும் இடத்தில் நீரை திசைத்திருப்பும் வகையில் கட்டட தடுப்புப் பணிகளும், நீரை சேமித்து வைப்பதற்காக மடம் பகுதியில் அமைக்கப்படும் தரைத் தள நீர்தேக்கத் தொட்டிப் பணிகளும் நடந்துவருகின்றன.

இவற்றை ஆய்வு செய்த ஸ்வரன்சிங், பணிகளை விரைவாகவும், பாதுகாப்புடனும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் பெ. அமுதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தலைமை பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

பாளை. யில் புதிய குடிநீர் திட்டப் பணி: மேயர் ஆய்வு

Print PDF

தினமணி    14.05.2010

பாளை. யில் புதிய குடிநீர் திட்டப் பணி: மேயர் ஆய்வு

திருநெல்வேலி,மே 13: பாளையங்கோட்டையில் ரூ.22.22 கோடியில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் திட்டப் பணியை, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

இம் மாநகராட்சியில் ரூ.22.22 கோடியில் ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் மேலப்பாளையம் மண்டலம் 19,26,27 வார்டுகள் பகுதியில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப் பணிகள் நடைபெறும் பெருமாள்புரம், கனரா வங்கி காலனி, ஸ்டேட் வங்கி காலனி, தமிழ்நகரில்,ஆசிரியர் காலனி ஆகிய பகுதிகளுக்கு மேயர் அ.லெ.சுப்பிரமணியன் சென்று ஆய்வு செய்தார்.

அவருடன் மாநகர பொறியாளர் கே.பி. ஜெய்சேவியர், செயற் பொறியாளர் வி. நாரயணன் நாயர், மேலப்பாளையம் மண்டலத் தலைவர் எஸ்.எஸ். முகம்மது மைதீன், உதவி செயற் பொறியாளர் து. கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள் பி.தியாகராஜன், பெ.பாண்டிக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

 

 

கூட்டுக்குடிநீர் திட்டங்களில் குடிநீர் சப்ளை நிறுத்தம்

Print PDF

தினமலர்      14.05.2010

கூட்டுக்குடிநீர் திட்டங்களில் குடிநீர் சப்ளை நிறுத்தம்

தேனி : தேனி மாவட்டத்தில் பரவி வரும் வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்த கூட்டுக்குடிநீர் திட்டங்களில் இருந்து குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள் ளது.

சின்னமனூர், உத்தமபாளையம், முத்தலாபுரம், அப்பிபட்டி, சின்னஓவுலாபுரம், .அம்மாபட்டி, ஆண்டிபட்டி பகுதிகளில் வயிற்றுப்போக்கால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தமபாளையம் பகுதியில் பெரியாற்றில் அமைந் துள்ள குடிநீர் கிணறுகளில் இருந்து சப்ளையாகும் குடிநீர் மூலம் வயிற்றுப் போக்கு பரவியது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதிகளில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்டங்களில் இருந்து குடிநீர் சப்ளை செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பம்பிங் கிணறுகள், தரையடி, மேல்நிலை குடிநீர் தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. குடிநீர் பம்பிங் கிணறுகளை சுற்றி நிற்கும் சாக்கடை கழிவுகளை அகற்றும் வகையில் பெரியாற்றில் இருந்து விநாடிக்கு 250 கனஅடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 

 


Page 240 of 390