Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் இருக்காது

Print PDF

தினமலர்            07.10.2013

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் இருக்காது

திருச்சி: கம்பரசம்பேட்டை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, நாளை திருச்சி மாநகரில் குடிநீர் வினியோகம் இருக்காது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அறிக்கை:திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், மரக்கடை, விறகு பேட்டை, உறையூர், மலைக்கோட்டை, சிந்தாமணி, தில்லைநகர், அண்ணாநகர், புதுஞூதூர் காஜாப்பேட்டை, கண்டோன்மென்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்கநகர், ஆல்ஃபாநகர், ஃபாத்திமா நகர், கருமண்டபம், காஜாமலை காலனி, அரியமங்கலம், மேலக்கல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலைப்பட்டி, மத்திய சிறை, சுப்பிரமணியபுரம், விமான நிலையம், செம்பட்டு, கல்லுக்குழி, காஜாநகர், காஜாமலை, கிருஷ்ணமூர்த்திநகர், தொண்டைமான் நகர், அன்பு நகர், ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், கே.கே.,நகர், எல்.ஐ.சி., காலனி, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், தென்றல்நகர், விஸ்வாஸ்நகர், ஆனந்த்நகர், சுப்பிரமணய நகர் பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் இருக்காது. மறுநாள், 9ம் தேதி வழக்கம்போல குடிநீர் வரும்.

 

திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தகவல்

Print PDF

தினத்தந்தி            07.10.2013

திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தகவல்

திருச்சியில்  (செவ்வாய்க்கிழமை) குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நாளை குடிநீர் வினியோகம் ரத்து

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம், அய்யாளம்மன் படித்துறை பொன்மலை கூட்டுக்குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக்குடிநீர் திட்ட நிலையம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களுக்காக உள்ள கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதையொட்டி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை, உறையூர், மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர், கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணா நகர், புத்தூர், காஜாபேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யகொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்கநகர், ஆல்பா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை)ஒரு நாள் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.

கே.கே.நகர் பகுதி

இதேபோல பொன்மலை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அடங்கும் அரியமங்கலம் பகுதி, மேலகல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமானநிலைய பகுதி, செம்பட்டு, கல்லுக்குழி, காஜாநகர், காஜாமலை, கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், அன்புநகர் ஆகிய பகுதிகளிலும், பிராட்டியூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர், எல்.ஐ.சி. காலனி, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், தென்றல் நகர், விஸ்வாஸ் நகர், ஆனந்த் நகர் மற்றும் சுப்ரமணிய நகர் ஆகிய பகுதிகளிலும் நாளை ஒரு நாள் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.

நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் வழக்கம் போல குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

கூடுதல் குடிநீர் வழங்க கள ஆய்வுப் பணி துவக்கம்

Print PDF

தினமணி           04.10.2013

கூடுதல் குடிநீர் வழங்க கள ஆய்வுப் பணி துவக்கம்

கோவை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்குவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான கள ஆய்வுப் பணியை வேளாண்மைத் துறை அமைச்சர் செ.தாமோதரன் வியாழக்கிழமை துவக்கிவைத்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், சாரதா மில் சாலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மேயர் செ.ம.வேலுசாமி  தலைமை தாங்கினார். தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் செ.தாமோதரன், திட்ட அறிக்கைக்கான கள ஆய்வுப் பணியை தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள வார்டு எண் 87 முதல் 100 வரையிலான 14 வார்டுகளுக்கு சிறுவாணி, ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.

தற்போது இப்பகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்குவதற்கு பில்லூர் 2-ஆவது குடிநீர் திட்டத்திலிருந்து 60 லட்சம் லிட்டர் உக்கடம் புறவழிச்சாலை வழியாக சாரதா மில் சாலை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வரை புதிதாக குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.

இதுபோல, கவுண்டம்பாளையம், வடவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் வார்டு எண் 5, 6, 7, 8, 9 மற்றும் சிறுவாணி திட்டத்தில் உள்ள வார்டு எண் 16, 17 ஆகிய வார்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் 1.1 கோடி  லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வார்டுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் மேற்காணும் 7 வார்டு பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைப்பதற்கும் தமிழ்நாடு நீர் முதலீட்டு கழகம் களஆய்வுப் பணி செய்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் க.லதா, ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், கோவை  துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள்  மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், இந்நிகழச்சியில் கலந்து கொண்டனர்.

 


Page 25 of 390