Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு

Print PDF

தினமலர்        14.05.2010

ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு

ஒகேனக்கல்: ஒகேனக்கல் பகுதியில் 214 கோடி மதிப்பில் நடந்து வரும் கூட்டு முடிநீர் திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்வரன்சிங் ஆய்வு செய்தார். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கிட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் முதல் கட்டமாக 214 கோடி ரூபாய் மதிப்பிட்டில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை வரும் 17ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதற்கு முன் ஏற்பாடாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைவரும் நிர்வாக இயக்குனருமான ஸ்வரன்சிங் திட்ட பணிகளை பார்வையிட நேற்று வந்தார்.

பென்னாகரம் அடுத்த மடம் பகுதியில் 240 லட்சம் லிட்டர் கொள்ளவில் அமைக்கப்படும் நீர் தேக்க தொட்டி கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு யானைகள் அப்பகுதிக்குள் புகுந்து சேதம் விளைவிக்காதபடி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய கேட்டு கொண்டார்.

ஒகேனக்கல்லில் நடந்து வரும் தலைமை நீரேற்று நிலையத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஜப்பான் நாட்டு ஆலோசகர்கள் கிளார்க்,லசிட்டுஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது, கலெக்டர் அமுதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய தலைமை பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணன், செயற்பொறியாளர் திருமூர்த்தி உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

எடப்பாடியில் புதிய குடிநீர்த் தொட்டி திறப்பு விழா

Print PDF

தினமணி     12.05.2010

எடப்பாடியில் புதிய குடிநீர்த் தொட்டி திறப்பு விழா

எடப்பாடி. மே 11: எடப்பாடி நகராட்சி ஒட்டப்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எடப்பாடி நகராட்சி 1-வது வார்டு ஒட்டப்பட்டியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து, நகராட்சிப் பொது நிதியில் இருந்து குடிநீர்த் தொட்டி கட்ட நகராட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து, அப்பகுதியில் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி கட்டுமானப் பணிகள் முடிந்து, செவ்வாயக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது.

நகராட்சித் தலைவர் எம்.இருசப்பமேத்தா குடிநீர்த் தொட்டியை திறந்து வைத்தார். நகர் மன்ற உறுப்பினர்கள் எம்.சீரங்கன், என்.சேகர், ஆர்.ராஜேந்திரன், சி.வடிவேல், சி.சாமியப்பன், இடைப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பி.காந்தி, நகராட்சி பொறியாளர் எம்.கார்த்திகேயன், கே.சின்னமணி, .செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

குடிநீர்ப் பிரச்னை இருந்தால் நேரில் புகார் தரலாம்

Print PDF

தினமணி 06.05.2010

குடிநீர்ப் பிரச்னை இருந்தால் நேரில் புகார் தரலாம்

குடியாத்தம், மே. 5: குடியாத்தம் நகரில் குடிநீர்ப் பிரச்னை இருந்தால் பொதுமக்கள் நேரில் தெரிவித்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் எம். பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை: குடியாத்தம் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் பசுமாத்தூர், போடிப்பேட்டை நீரேற்று நிலையங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர்ப் பிரச்னை ஏற்பட்டால், தங்கள் பகுதி நகரமன்ற உறுப்பினர்களிடமோ, நகராட்சி அலுவலகத்தில் என்னிடமோ (தலைவர்), ஆணையரிடமோ நேரிடையாக தெரிவித்தால் உங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதைத் தவிர்த்து எந்தவித தகவலும் இன்றி சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

மீறி சாலை மறியலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு நகராட்சி எவ்விதமும் பொறுப்பாகாது என குறிப்பிட்டுள்ளார் பாஸ்கர்.

 


Page 241 of 390