Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நாகர்கோவிலில் குடிநீர்த் தட்டுப்பாடு: பெருஞ்சாணி அணையில் தண்ணீர் திறப்பு

Print PDF

தினமணி 03.05.2010

நாகர்கோவிலில் குடிநீர்த் தட்டுப்பாடு: பெருஞ்சாணி அணையில் தண்ணீர் திறப்பு

நாகர்கோவில், மே 2:நாகர்கோவிலில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க பெருஞ்சாணி அணையில் இருந்து சனிக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

நாகர்கோவில் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை உள்ளது. அண்மைக் காலமாக மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்து விட்டது.

இதைத் தொடர்ந்து நகரப் பகுதியில் 7 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில தினங்களாக அணைப் பகுதிகளில் சீரான மழை பெய்து வருவதால் முக்கடல் அணையின் நீர்மட்டம் 18 அடியாக உயர்ந்தது.

இதையடுத்து, நகர்மன்றத் தலைவர் அசோகன் சாலமன், ஆணையர் ஜானகி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் நாகர்கோவிலில் குடிநீர்ப் பிரச்னையைப் போக்க பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, பெருஞ்சாணி அணையில் இருந்து சனிக்கிழமை 27 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இத் தண்ணீர் முக்கடல் அணையை வந்தடைந்தது. இதனால், நாகர்கோவில் பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்னை ஓரளவுக்குத் தீரும் எனத் தெரிகிறது.

Last Updated on Monday, 03 May 2010 10:24
 

பெருங்குளம் டவுன் பஞ்.,சில் புதிய வாட்டர் டேங்க் திறப்பு விழா

Print PDF

தினமலர் 03.05.2010

பெருங்குளம் டவுன் பஞ்.,சில் புதிய வாட்டர் டேங்க் திறப்பு விழா

சாயர்புரம் : பெருங்குளம் டவுன் பஞ்.,சில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வாட்டர் டேங்க்குகளை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பெருங்குளம் டவுன் பஞ்.,குட்பட்ட பண்ணைவிளையில் ரூ.3 லட்சம் மதிப்பில் ஒரு வாட்டர் டேங்க்கும், பெருங்குளத்தில் 4 லட்சம் மதிப்பில் ஒரு வாட்டர் டேங்க்கும் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆர்.டி..,குருதேவி தலைமை வகித்தார். பெருங்குளம் டவுன் பஞ்.,தலைவர் சிவகுமார் வரவேற்றார். எம்.எல்.., சுடலையாண்டி மற்றும் டவுன் பஞ்., துணைத் தலைவர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிதாக கட்டப்பட்டுள்ள வாட்டர் டேங்க்குகளை தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். விழாவில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய திமுக.,செயலாளர் மெய்யழகன், திமுக.,பொதுகுழு உறுப்பினர் முருகானந்தம், போப் கல்லூரி ஓய்வு பெற்ற அலுவலர் தேவசகாயம், கவுன்சிலர் மந்திரம், பண்டாரவிளை திமுக., நிர்வாகிகள் சொர்ணபாண்டி, சினோபால், மாற்கு, சேர்ந்திராஜன், கிறிஸ்டோபர், மண்டல துணை தாசில்தார் காளிதாஸ், ஆர்..அண்ணாமலை, ஒன்றிய பொறியாளர் மணி, ஏரல் நகர காங்.,தலைவர் பாக்கர்அலி, வட்டார காங்.,தலைவர் கந்தசாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் திமுக.,மற்றும் காங்.,தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 03 May 2010 07:00
 

கலங்கலான குடிநீர் கூடலூரில் சப்ளை

Print PDF

தினமலர் 03.05.2010

கலங்கலான குடிநீர் கூடலூரில் சப்ளை

கூடலூர் : கூடலூரில் குடிநீர் கலங் கலாக சப்ளை செய்யப் பட்டு வருகிறது. பெரியாற்று நீரை லோயர் கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பம்ப் செய்து கூடலூர், கம்பம் உட்பட பகுதிகளுக்கு சப்ளை செய்கின்றனர். சில தினங்களாக பெய்த கன மழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வெளியேறும் மழை நீர் பெரியாற்றில் கலந்து கலங்கலாகியுள்ளது. கலங்களை முழுமையாக பில்டர் செய்யும் அளவுக்கு இந்த குடிநீர் திட்டத்தில் தொழில்நுட்ப வசதிகள் இல்லை.

எனவே சுகாதாரத்துறையினர், 'திடீரென கலங்கிய நிலையில் வரும் நீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குளோரினேசன் செய்து குடிநீர் சப்ளை செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்' என்றனர்.

Last Updated on Monday, 03 May 2010 06:56
 


Page 245 of 390