Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குமரி மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பாக புகார்களை பதிவு செய்ய ஏற்பாடு: ஆட்சியர்

Print PDF

தினமணி 29.04.2010

குமரி மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பாக புகார்களை பதிவு செய்ய ஏற்பாடு: ஆட்சியர்

நாகர்கோவில், ஏப். 28: கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை நேரில் சென்று பதிவேட்டில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குமரி மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 56 பேரூராட்சிகள் மற்றும் 99 கிராம ஊராட்சிகளிலுள்ள பொதுமக்கள் குடிநீர் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் புகார் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் சம்பந்தமான புகார்களை நேரில்சென்று புகார் பதிவேட்டில் பதிவு செய்யலாம்.

மேலும் சம்பந்தப்பட்ட அலுவலக தொலைபேசி மூலமாகவும் அலுவலக நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை பதிவுசெய்து பயன்பெறலாம்.

புகார்களை பதிவு செய்வதற்கான தொலைபேசி எண் மற்றும் இதர விவரங்களை ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ஹ்ஹந்ன்ம்ஹழ்ண்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம் என்றார் ஆட்சியர்

 

தேனியில் போர்வெல் குடிநீர்சப்ளை செய்யும் திட்டம் தாமதம்

Print PDF

தினமலர் 29.04.2010

தேனியில் போர்வெல் குடிநீர்சப்ளை செய்யும் திட்டம் தாமதம்

தேனி: தேனியில் நகராட்சி வார்டுகளில் போர்வெல் அமைத்து குடிநீர் சப்ளை செய்யும் திட்டத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு ஆகியும் பணிகள் நடக்கவில்லை.
தேனிக்கு அரப்படித்தேவன்பட்டியில் வைகை ஆற்றினுள் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள், பழனிசெட்டிபட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரைக்கிணறு, வீரப்ப அய்யனார் கோயில் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கோடை காலத்தில் முல்லை பெரியாற்றில் தண்ணீர் நிறுத்தப்படும் போது ஆறு வறண்டு விடுவதால் உறைகிணறுகளில் தண்ணீர் வருவதில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதே போல் மழைக்காலத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது உறைகிணறுகள் மூழ்கி விடுவதாலும், சேதமடைவதாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. நிரந்தர குடிநீர் திட்டம் இல்லாததே இதற்கு காரணம். இந்நிலையில் கடந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி சார்பில் 33 வார்டுகளிலும் தலா ஒரு போர்வெல் அமைத்து குடிநீர் சப்ளை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் நடக்கவில்லை. தற்போதுள்ள பழைய போர்வெல்களில் 50 சதவீதம் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளன. பல பகுதிகளில் மோட்டார் பழுதடைந்துள்ளன. குடிநீர் தேவையை போக்க போர்வெல்கள் அமைப்பது அவசியமானது. இதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் செயல்படுத்த வேண்டும்
.

Last Updated on Thursday, 29 April 2010 07:00
 

தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடம் முன்பு இரண்டு கலர்களில் செயற்கை நீருற்று சோதனை

Print PDF

தினமலர் 29.04.2010

தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடம் முன்பு இரண்டு கலர்களில் செயற்கை நீருற்று சோதனை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடத்தின் முன்பு இரண்டு வண்ண கலரில் செயற்கை நீரூற்று நேற்று சோதனை செய்யப்பட்டது. இதனால் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் அதனை பார்த்து ரசித்தனர்.தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக கட்டடம் 4 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று விட்டன. சிறிய வேலைகள் மட்டும் பாக்கியுள்ளது. அந்த வேலைகளும் முடியும் தருவாயை எட்டியுள்ளது. மிக விரைவில் துணை முதல்வர் ஸ்டாலின் இதனை திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.மாநகராட்சி கட்டடத்தின் முன்பகுதி முழுவதும் கூலிங் கிளாஸ் என்பதால் எதிர்பகுதி மெயின் ரோடு அதில் செல்லும் வாகனம் உட்பட அனைத்தும் கண்ணாடியில் பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. இந்நிலையில் மாநகராட்சி புதிய கட்டடத்தின் முன் பகுதியில் செயற்கை நீருற்று இரு கலரில் இரவு முழுவதும் தொடர்ந்து மிளிரும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் சுமார் 4 லட்ச ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. செயற்கை நீருற்றின் ரவுண்டானாவை சுற்றி பச்சை மற்றும் சிவப்பு கலர்களில் இவை அமைக்கப்பட்டுள்ளதால் மாறி, மாறி இவை இரவு எறிந்து, அணையும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இரண்டு கலர்களும் மாறி, மாறி செயற்கை நீருற்றாக எரிந்ததை அந்த பகுதி மக்கள் ரசித்து பார்த்தனர். பஸ் ஸ்டாண்ட் பகுதி என்பதால் பெரும் கூட்டமே வந்த இதனை பார்த்து ரசித்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

Last Updated on Thursday, 29 April 2010 06:58
 


Page 249 of 390