Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

படப்பை அருகே இரண்டு இடங்­களில் பாலாறு குழாய் உடைப்பு மீண்டும் குடிநீர் வினி­யோகம் பாதிப்பு

Print PDF

தினமலர்             03.10.2013

படப்பை அருகே இரண்டு இடங்­களில் பாலாறு குழாய் உடைப்பு மீண்டும் குடிநீர் வினி­யோகம் பாதிப்பு

தாம்­பரம்:படப்பை அருகே கேபிள் புதைக்­கப்­பட்ட போது, பாலாறு குழாயில் இரண்டு இடங்­களில் ஏற்­பட்ட உடைப்பை சரி­செய்யும் பணி நடந்து வரு­கி­றது. இதனால், கடந்த மூன்று நாட்­களாக குடிநீர் வினி­யோகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

தாம்­பரம் பல்­லா­வரம் கூட்டுக் குடிநீர் திட்­டத்தின் மூலம், பாலாற்றில் பழைய சீவ­ரத்தில் ஆழ்­துளை கிணறு அமைத்து, தாம்­பரம், பல்லா­வரம், சிட்ல­பாக்கம், திரு­நீர்­மலை உள்­ளாட்சி பகு­திகள், சான­டோ­ரியம் ஏற்­று­மதி வளாகம் ‘மெப்ஸ்’, வண்­டலுார் உயி­ரியல் பூங்கா உள்­ளிட்ட இடங்­க­ளுக்கு குடிநீர் வினி­யோ­கிக்­கப்­படு­கி­றது.

அடிக்கடி உடைப்பு

அதற்­கான குழாய், வண்டலுார் வாலா­ஜாபாத், தாம்­பரம் முடிச்சூர் சாலைகள் வழியாக வருகி­றது. இந்த குழாய், பல ஆண்டு­க­ளுக்கு முன் பதிக்­கப்­பட்­டது என்­பதால், அடிக்­கடி உடைந்து விடுகிறது.

இதனால், சீரான குடிநீர் வழங்­கு­வதில் சிக்கல் ஏற்­பட்டு வருகிறது. இந்த நிலையில், வண்டலுார் வாலா­ஜாபாத் சாலை ஓரத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம், தனியார் நிறு­வ­னத்­தினர் கேபிள் புதைத்தனர்.

அப்­போது, வஞ்­சு­வாஞ்­சேரி மற்றும் செரப்­ப­ணஞ்­சேரி பகு­தி­களில் மூன்று இடங்­களில், குழாயை உடைத்­தனர்.

இதில், 11 குழாய்கள் சேதம் அடைந்­தன. இதனால், 15 நாட்­க­ளுக்கு மேல் குடிநீர் வினி­யோகம் பாதிக்­கப்­பட்டது.

அதி­கா­ரிகள், 10 நாட்கள் இரவு, பக­லாக போராடி உடைப்பை சரி­செய்­தனர்.

இந்த நிலையில், ஏற்­க­னவே குழாய் உடைக்­கப்­பட்ட இடத்­திற்கு அருகே, கடந்த 30ம் தேதி, இரண்டு இடங்­களில் தண்ணீர் அதிக அளவு வெளி­யே­றி­யது.

ரூ. 15 லட்சம் அபராதம்

அங்கு தனியார் நிறு­வனம் கேபிள் புதைக்கும் போது, குழாய் உடைந்தது தெரி­ய­வந்­தது.
இதை­ய­டுத்து, உடைப்பை சரி­செய்யும் பணி தீவி­ர­மாக நடந்து வரு­கி­றது. இதனால், கடந்த மூன்று நாட்­க­ளாக குடிநீர் வினி­யோகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இதுகுறித்து, குடிநீர் வாரிய அதி­கா­ரி­க­ளிடம் கூறியதாவது:

இடங்­களில் குழாய் உடைத்­த­தற்கு, அப­ராத தொகை­யாக 15 லட்சம் ரூபாய் விதிக்­கப்­பட்­டு உள்ளது. அதை சம்­பந்­தப்­பட்ட நிறு­வனம் இது­வரை செலுத்­த­வில்லை.

இந்த நிலையில், கூடு­த­லாக இரண்டு இடங்­களில் உடைக்­கப்­பட்­டுள்­ளது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கும் அப­ராதம் விதிக்­கப்­படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

அரியநாயகிபுரம் குடிநீர் திட்டத்துக்கு ரூ.239 கோடி நிதி ஒதுக்கீடு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் விஜிலா சத்யானந்த் தகவல்

Print PDF

தினத்தந்தி           01.10.2013

அரியநாயகிபுரம் குடிநீர் திட்டத்துக்கு ரூ.239 கோடி நிதி ஒதுக்கீடு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் விஜிலா சத்யானந்த் தகவல்

 

 

 

 

 

நெல்லை மாநகர பகுதி மக்களுக்காக அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து கொண்டு வரப்படும் புதிய குடிநீர் திட்டத்துக்கு ரூ.239 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என நெல்லையில் நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் மேயர் விஜிலா சத்யானந்த் தெரிவித்தார்.

மாநகராட்சி கூட்டம்

நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் விஜிலா சத்யானந்த் தலைமையில் நேற்று மாலை நடந்தது. துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், ஆணையாளர் த.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கிய தொடங்கி உடன் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மேயர் படித்தார். அப்போது அவர் பேசும் போது, “அம்மா குடிநீர் திட்டத்தையும், தமிழகத்தில் குடிசை மாற்று வாரியத்தால், பழுதடைந்த அடுக்குமாடி கட்டிடத்தை இடித்து விட்டு ரூ.280 கோடியில் புதிய அடுக்கு மாடி கட்ட உத்தரவிட்டதற்கும் முதல்–அமைச்சருக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது“ என்று கூறினார்.

தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–

நிதி பற்றாக்குறை

பிரான்சிஸ் (தி.மு.க.):– மாநகராட்சியில் எப்போது இல்லாத அளவுக்கு தற்போது நிதி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. மாநகராட்சி பணிகளை முடித்த ஒப்பந்தகாரர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. சுமார் 6 கோடி வரை பணம் பட்டுவாடா செய்ய முடியாத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் இருக்கிறது என ஒப்பந்தக்காரர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறைக்கு காரணம் என்ன?

மேயர்:– சொத்துவரி, குடிநீர் வரி போன்றவைகள் வசூல் செய்ய வேண்டியது இருக்கிறது. மேலும் பொதுநிதி கடந்த 4 மாதங்களாக சரியாக வசூல் செய்ய முடியவில்லை. சுமார் ரூ.40 கோடி வரை வசூல் செய்ய வேண்டியது உள்ளது. பாராளுமன்ற தேர்தல் பணிக்காக மாநகராட்சி பணியாளர்கள் சென்று வருகிறார்கள். 6 மணி நேரம் தேர்தல் பணியையும், 2 மணி நேரம் மாநகராட்சி பணியையும் கவனித்து வருகிறார்கள். நிதி வசூல் செய்வதில் தேக்கம் ஏற்பட்டு உள்ளது. பற்றாக்குறை என்று சொல்ல முடியாது.

பிரா£ன்சிஸ்:– மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டாத அம்மா உணவகங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரு மாதத்துக்கு ரூ.36 லட்சம் வரை ஒதுக்கப்படுகிறது. தொடர் செலவீனங்களுக்காக நிதி ஒதுக்கும் போது பற்றாக்குறை ஏற்பட தானே செய்யும்.

ரூ.239 கோடி நிதி ஒதுக்கீடு

மேயர்:– முதல்–அமைச்சர் ஜெயலலிதா நெல்லை மாநகராட்சிக்கு தேவையான நிதியை ஒதுக்கி தருகிறார். அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து நெல்லை மாநகர பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் புதிய திட்டத்தை முதல்–அமைச்சர் சட்டசபையில் அறிவித்தார். தற்போது அந்த திட்டத்துக்காக ரூ.239 கோடியை நிதி ஒதுக்கி உள்ளார்.

மேலும், பாளையங்கோட்டை இலந்தை குளத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ரூ.19 கோடியும், நயினார் குளத்தை சீரமைத்து அபிவிருத்தி செய்ய ரூ.4½ கோடியும் ஒருங்கிணைந்த நகர்புற திட்டத்தில் முழு மானியமாக நிதி ஒதுக்கி உள்ளார். இதுபோல் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி தந்து இருக்கிறார். நெல்லை மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக மாற்றக் கூடிய திட்டங்களை அறிவித்து இருக்கிறார்.

தி.மு.க. வெளிநடப்பு

பிரான்சிஸ், பேசுவதற்கு எழுந்தார். அனுமதி மறுக்கப்பட்டது. உடனே தி.மு.க. கவுன்சிலர்கள் மேயர் முன் இருக்கையில் இருந்து பேசினார்கள். அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து பேச அனுமதிக்காததை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.

ஆயிஷா பானு (அ.தி.மு.க) பேசும் போது, “நெல்லை டவுன் காட்சி மண்டபத்தில் இருந்து ரெயில்வே கேட் வரையிலும் உள்ள சாலையை காயிதே மில்லத் சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்“ என்றார்.

ஆதரவற்றோர் தங்கும் விடுதி

பரணி சங்கரலிங்கம்:– நெல்லை சிந்துபூந்துறை சாலைத்தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிழக்கு பகுதியில் உள்ள பழைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை இடித்து விட்டு ரூ.30 லட்சம் மதிப்பில் தெருக்களில் சுற்றித் திரியும் ஆதரவற்றோர் தங்கும் விடுதிகளை கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விடுதிக்கு எங்கள் வார்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனவே அங்கு ஆதரவற்றோர் தங்கும் விடுதி கட்டக் கூடாது. எனது வார்டு பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.

மேயர்:– நெல்லை சந்திப்பு குறுக்குத்துறையில் மாநகராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த கட்டிடம் உள்ளது. அங்கு ஆதரவற்றோர் தங்கி விடுதியை கட்டலாம்.

இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது. தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

மானாமதுரையில் ரூ.8.60 லட்சம் செலவில் குழாய்கள் பதிக்கும் பணி

Print PDF

தினமணி             27.09.2013

மானாமதுரையில் ரூ.8.60 லட்சம் செலவில் குழாய்கள் பதிக்கும் பணி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் குடிநீர் திட்ட குழாய்கள் உடைந்துபோய் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.8.60 லட்சம் செலவில் புதிய குழாய்கள் பதித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

   மானாமதுரை நகர் குடிநீர் திட்டம் அருகேயுள்ள ராஜகம்பீரம் வைகையாற்று பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து குழாய்களில் குடிநீர் கொண்டு வரப்பட்டு மானாமதுரை நகரில் பல்வேறு இடங்களிலுள்ள மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி அதன்பின் குழாய் இணைப்புகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

   இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மானாமதுரை சோணையா சுவாமி கோயில் முதல் வேதியரேந்தல் விலக்கு பகுதி வரை சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கியது.

அப்போது நகரில் கன்னார்தெரு மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் இணைப்புகள் சேதப்படுத்தப்பட்டன.

   இதனால் இந்த மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியாமல் கன்னார்தெரு பகுதியில் உள்ள 3 வார்டு பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இதையடுத்து இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் டேங்கர் லாரிகள் மூலம் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

   ஆனாலும் இப் பகுதியில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் கன்னார் தெரு பகுதி மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில் மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் மூலம் கன்னார்தெரு பகுதி குடிநீர் மேல்நிலைத்தொட்டிக்கு குடிநீர் கொண்டுசெல்ல புதிய குழாய்கள் அமைப்பதற்காக பேரூராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.8.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

   இதற்கான பணி இன்னும் ஒருசில நாள்களில் தொடங்கி விரைவில் முடிக்கப்பட்டு கன்னார்தெரு பகுதி மக்களுக்கு குழாய்களில் குடிநீர் சப்ளை செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 


Page 26 of 390