Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு

Print PDF

தினமணி 28.04.2010

குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு

திருச்சி, ஏப். 27: திருச்சி மாநகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மாநகர மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு கம்பரசம்பேட்டை நீர் பணி நிலையம், பொன்மலைக் கூட்டுக் குடிநீர், பிரதான குடிநீர் சேகரிக்கும் கிணறு, தலைமை நீர்ப் பணி நிலையம், கீதாபுரம் நீர்ப் பணி நிலையம் மற்றும் பிராட்டியூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் நாளொன்ருக்கு நபர் ஒன்றுக்கு 110 லிட்டர் வீதம் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியின் காரணமாக கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையப் பகுதியான காவிரியாற்றின் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க, காவிரியாற்றின் வடகரையோரம் செல்லும் நீரை கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம் அருகே தென்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர் சேகரிக்கும் கிணறுகளுக்கு அருகே வாய்க்கால் அமைத்தும், தடுப்புகள் அமைத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப் பணிகளை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன், நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, கோட்டத் தலைவர்கள் த. குமரேசன் ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கோடை காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய முடியும் என்றும், எனினும் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் குடிநöரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மேயர், ஆணையர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

 

குடிநீர் தொட்டி திறப்பு

Print PDF

தினமலர் 28.04.2010

குடிநீர் தொட்டி திறப்பு

காரைக்குடி: காரைக்குடி நகராட்சி 1 வது வார்டு கழனிவாசல் அழகப்பன் தெருவில், 6.50 லட்ச ரூபாயில் அமைக்கப் பட்ட குடிநீர் தொட்டி திறப்பு விழா நடந்தது. சுந்தரம் எம்.எல்.., திறந்து வைத்தார். நகராட்சி தலைவர் முத்துத்துரை முன் னிலை வகித்தார். பொறியாளர் மணி, உதவி பொறியாளர் வேலுச்சாமி, கவுன்சிலர்கள் ராமசாமி, கதிரேசன் பங்கேற்றனர்

Last Updated on Wednesday, 28 April 2010 06:39
 

புதிய குடிநீர் திட்டம் அனுமதி தி.மலையில் பட்டாசு வெடிப்பு

Print PDF

தினமலர் 28.04.2010

புதிய குடிநீர் திட்டம் அனுமதி தி.மலையில் பட்டாசு வெடிப்பு

திருவண்ணாமலை:தி.மலை நகருக்கு புதிய குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டதால், நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.திருவண்ணாமலை நகரில் 36.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நேற்று காலை திருவண்ணாமலையில் நகராட்சி தலைவர் ஸ்ரீதரன், துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும், நகராட்சி முன்பாக பட்டாசுகள் வெடிக்கப் பட்டன.இந்நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் சேகர், இன்ஜினியர் சந்திரன், கவுன்சிலர்கள் குணசேகரன், புகழேந்தி, ஷாஜகான், ராஜாங்கம், மோகன், சரவணன், ஜமீலாபீவி, மாலிக் பாஷா, முன்னாள் கவுன்சிலர் சேட்டு முருகேசன், பிரியா விஜயரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 28 April 2010 06:29
 


Page 252 of 390