Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

திருத்தணி நகராட்சி சார்பில் கூடுதல் குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி 24.04.2010

திருத்தணி, ஏப். 23: திருத்தணி நகராட்சி ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி வைத்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்துக்குள் இன்னும் கூடுதலாக குடிநீர் வழங்கப்பட உள்ளதாக திருத்தணி நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

÷திருத்தணி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. தற்போது திருத்தணி வாசிகளுக்கு தினசரி 75 லட்சம் லிட்டர் குடிநீர், நகரின் 21 வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. மேலும் மின்தடை, மோட்டார்கள் பழுது, குடிநீர் குழாய் பைப்புகள் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாலாற்று படுகையிலிருந்து வரும் குடிநீர் கிடைப்பதில் அவ்வப்போது சிக்கல் ஏற்படுகிறது.

÷இதனால், திருத்தணி நகரில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் உத்தரவின் பேரில் திருத்தணி நகரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையம், தாலுக்கா அலுவலகம், திருத்தணி நகராட்சி அலுவலகம், கமலா தியேட்டர் பஸ் நிலையம், பஸ்

பணிமனை உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் திருத்தணியில் உள்ள 21 வார்டுகளிலும் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் புதிதாக வைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம்.

கரூர் நகராட்சியில் ரூ. 25 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்

Print PDF

தினமணி 24.04.2010

கரூர் நகராட்சியில் ரூ. 25 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்

கரூர், ஏப். 23: கரூர் நகராட்சிக்கு ரூ. 25 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தின் தலையிடமாக கரூர் நகராட்சி உள்ளது. சுமார் 5.96 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இந்த நகராட்சியில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 76,336 பேர் வசித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 85 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

அமராவதி கரையில் கரூர் அமைந்துள்ள போதிலும், இதன் குடிநீர் ஆதாரமாக காவிரியே விளங்கி வருகிறது. எனினும், மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் 7 நாள்கள் முதல் 10 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, பெருகியுள்ள மக்கள் தொகை மற்றும் பெருகி வரும் மக்கள் தொகையைக் கணக்கிட்டு, நகராட்சியின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க புதிய திட்டம் தீட்டப்பட வேண்டிய நிலை உருவானது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாக ஆணையத்துக்கு கரூர் நகராட்சி வேண்டுகோள் விடுத்தது. இதனடிப்படையில், ஃபிஷ்னர் இந்தியா என்ற நிறுவனத்தை ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் கரூர் நகராட்சி நிர்வாகம் ஈடுபடுத்தியது. இந்த நிறுவனம் தயாரித்த திட்ட அறிக்கையை நகராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை விளக்கியது.

இதற்கான கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நகர்மன்றத் தலைவர் பி.சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் வடிவேல், நிர்வாகப் பொறியாளர் அ. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் ஏ. ராஜாஜெயச்சந்திரபோஸ், வடிவமைப்புப் பொறியாளர் ஜெ. சரவணன் ஆகியோர் திட்ட அறிக்கை குறித்து விளக்கினர்.

இதன்படி, புதிய குடிநீர்த் திட்டமானது ரூ. 25.45 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு பராமரிப்புச் செலவு ரூ. 1.75 கோடி. 2040-ம் ஆண்டு வரையிலான மக்கள் தொகை பெருக்கத்தையும், தனிநபர் குடிநீர் பயன்பாட்டையும் கணக்கிட்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, நெரூரில் தற்போது நகராட்சிக்காக இயங்கி வரும் நீர் சேகரிப்பு கிணறு மற்றும் புதியதாக கட்டப்பட்டுள்ள நீர்உறிஞ்சு கிணறுகளுக்கு இடையில் புதிய நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்படும். அதிலிருந்து உறிஞ்சப்படும் நீர், புதிய தொட்டியில் சேகரிக்கப்படும். சீரான குடிநீர் விநியோகத்துக்காக 12 குடிநீர் பகிர்மானங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் போது தனிநபருக்கு ஒரு நாளைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 90 லிட்டர் தண்ணீர் 135 லிட்டராக உயர்த்தப்படும். மேலும், தினமும் குடிநீர் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விளக்கமளிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமெனில், நகராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன் பின்னர், நகராட்சி நிர்வாக ஆணையரகத்துக்கு தீர்மானம் அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும். இந்தத் திட்டத்துக்கான நிதி ஆதாரம் குறித்து தமிழ்நாடு ஊரக உள்கட்டமைப்பு நிதி நிர்வாகத்தினர் ஆய்வு நடத்தி அரசு நிதியுடன் திட்டத்தைச் செயல்படுத்துவதா அல்லது தனியார் மற்றும் கடன் தொகை பெற்று செயல்படுத்துவதா என்று முடிவெடுக்கும்.

அதன்பின்னர், இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்படும். திட்டம் தொடங்கி முடிவுக்கு வர ஒராண்டு காலமாகும். எனவே, இந்தத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமென கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் இ. முத்துசாமி, எம். ராஜலிங்கம், என். ராஜேஸ்வரி, க. சுப்பன், ஆர். ராஜகோபால், ஆர்.சி. ஜெகந்நாதன், நல்லமுத்து கருணாநிதி, அ. சாந்தி, சி. சகுந்தலா, பி. பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Page 256 of 390