Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குழாய் சீரமைப்பு பணி குடிநீர் சப்ளை பாதிப்பு

Print PDF

தினமலர் 23.04.2010

குழாய் சீரமைப்பு பணி குடிநீர் சப்ளை பாதிப்பு

திண்டுக்கல்:திண்டுக்கல் நகராட்சி கமிஷனர் அறிக்கை: 'யானைத்தெப்பம் பகுதியில், புதிதாக பாலம் கட்டும் பணி நடக்கிறது. இப்பகுதியில் ஆத்தூர் குடிநீர் திட்ட குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து மேட்டுப் பட்டி, சவேரியார்பாளையம், அசனாத்புரம், நத்தர்ஷாதெரு, ஜமால்தெரு, அன்னை நகர், குள்ளனம்பட்டி, மரியநாதபுரம், ஒய்.எம்.ஆர்., பட்டி, அசோக் நகர், .பி., காலனி, சவுராஷ்டிரபுரம், நாகல்புதூர், இந்திராநகர், டி.எம்.எஸ்.,புரம் பகுதிகளுக்கு, இன்று(ஏப். 23) முதல் நான்கு நாட்களுக்கு குடிநீர் வழங்க இயலாது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.'இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* பழநியின் குடிநீர் ஆதாரங்களில் கோடைகால நீர்த் தேக்கமும் ஒன்று. கொடைக்கானல் மழையில் கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால் நீர்த் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. நேற்றைய நீர்மட்டம் 3 அடியாக இருந்தது. இதையடுத்து பழநிக்கு 6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை என்ற நிலை மாறியுள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்வதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Last Updated on Friday, 23 April 2010 06:34
 

குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Print PDF

தினமணி 22.04.2010

குடிநீர் விநியோகம் நிறுத்தம்

ராமேசுவரம், ஏப். 21: ராமேசுவரம் நகராட்சியின் மூலம் தெருக் குழாயில் குடிநீர் விநியோகம் செய்யாததால், கடந்த 4 நாள்களாக பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

ராமேசுவரம் நகராட்சியில் 21 வார்டுகளில் சுமார் 600 குடிநீர் தெருக் குழாய்கள் உள்ளன. இக் குழாய்களுக்கு கடந்த காலங்களில் நம்பு கோயில், செம்மடத்தில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவந்தது. ஆனால், காவிரி கூட்டுக் குடிநீர் வருகையால், மேற்கண்ட பகுதியில் குடிநீர் எடுப்பதை நகராட்சி நிர்வாகம் நிறுத்தியது.

இதனால் இயற்கையாக நகராட்சிக்குக் கிடைத்த நல்ல குடிநீரை இழக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. இந் நிலையில் 4,5,6,7,8,9 ஆகிய வார்டுகளில் உள்ள புது ரோடு, நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், வேர்கோடு, முத்துராமலிங்கத் தேவர் நகர், இந்திரா நகர், கரையூர், முனியசாமி கோயில் தெரு, பழைய மார்க்கெட் தெருவில் உள்ள சுமார் 300 தெருக் குழாய்களுக்கு கடைசியாக ஏப்ரல் 17-ல் காவிரி குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

தற்போது ஒரு குடம் ரூ.2-க்கு வாங்கி வருகின்றனர். இத் தெருக்களுக்கு ஏற்கெனவே நம்பு கோயிலில் இருந்து குடிநீர் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ராமேசுவரம் நகராட்சி ஆணையர் போஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி குடிநீர் விநியோகத்தால் மற்ற நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் எடுப்பது இல்லை. இதன் மூலம் மின்சாரச் செலவு மிச்சப்படுகிறது. தற்போது ராமேசுவரம் வரும் காவிரி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குறிப்பிட்ட சில தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த உடைப்பு சரிசெய்யப்பட்டு வருவதால், ஓரிரு தினங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.'

Last Updated on Thursday, 22 April 2010 09:44
 

தேக்கடியில் நீர் எடுத்து குமுளிக்கு சப்ளை செய்ய புதிய திட்டம்

Print PDF
தினமலர் 22.04.2010

தேக்கடியில் நீர் எடுத்து குமுளிக்கு சப்ளை செய்ய புதிய திட்டம்

கூடலூர் : தேக்கடி ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து குமுளிக்கு சப்ளை செய்ய புதிய குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.கேரள மாநிலம், குமுளிக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக தேக்கடி ஏரியில் குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. குமுளி, தேக்கடி சுற்றுலாத்தலம் ஆக இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டினரின் வருகையும் அதிகரித்துள்ளது. '

இது மட்டுமின்றி குடியிருப்புகளும் அதிகமாகியுள்ளன. ஏற்கனவே உள்ள குடிநீர் திட்டத்தில் எடுக் கப்படும் நீர், பற்றாக்குறையானதை தொடர்ந்து மேலும் ஒரு குடிநீர் திட் டம் வேண்டும் என குமுளி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி தேக்கடி ஏரியில் தண்ணீர் எடுத்து குடிநீர் சப்ளை செய்யும் வகையில் ஒரு புதிய குடிநீர் திட்டத்தை கேரள அரசு அண்மையில் அறிவித்தது. இந்த பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ராட்சத பைப்புகள் குமுளியில் இருந்து தேக்கடி செல்லும் ரோட்டில் இறக்கி வைத்துள்ளனர்.

இந்த ரோடு வனப்பகுதியாக இருப்பதால் பைப் லைன் பதிக்க வனத்துறையின் அனுமதியை கோரியுள்ளனர். இதுவரை அனுமதி கிடைக்காததால் குடிநீர் பைப்புகள் பல நாட் களாக தேக்கடி ரோட்டில் அப்படியே கிடக்கின்றன. இன்னும் சில தினங்களில் வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் குடிநீர் பைப் பதிக்கும் பணி துவங்கும் என குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 22 April 2010 07:39
 


Page 260 of 390