Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கி.கிரிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 16.04.2010

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கி.கிரிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 2 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என, தமிழக முதன்மை செயலர் ஸ்ரீபதி கலெக்டர் சண்முகத்திடம் வீடியோ கான்ஃபரசிங் மூலம் தெரிவித்தார். தமிழகத்தில் கோடை காரணமாகவும், வெப்பம் அதிகம் உள்ளதாலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு வரைவு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசின் முதன்மை செயலர் ஸ்ரீபதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆய்வு நடத்தினார். 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 337 பஞ்சாயத்துகளில் 97 பஞ்சாயத்துகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஆகிய யூனியன்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகம் உள்ளது.

அந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய மினி பம்ப் அமைக்க வேண்டும்' என கலெக்டர் சண்முகம் தெரிவித்தார். ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் பணிகளை மேம்படுத்த 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணியை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்,'' என, தலைமை செயலர் தெரிவித்தார்.

Last Updated on Friday, 16 April 2010 06:32
 

ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிகள் இயக்குனர் ஆய்வு

Print PDF

தினமலர் 16.04.2010

ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிகள் இயக்குனர் ஆய்வு

தர்மபுரி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஸ்வரண் சிங் ஆய்வு செய்தார். பென்னாகரம் அடுத்த மடத்தில் கட்டப்பட்டு வரும் பிரதான நீர் சேகரிப்பு கட்டுமான பணிகளை பார்வையிட்டார். ஒகேனக்கல்லில் தலைமை பணியிடத்தில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்த அவர், திட்ட பணிகளை விரைந்து முடிக்க கேட்டு கொண்டார். திட்ட மேலாண்மை ஆலோசனை குழு தலைவர் டபிள்யூ கிளார்க், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட தலைமை பொறியாளர் வெங்கடேசன், மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணன், நிர்வாக பொறியாளர் திருமூர்த்தி, மாவட்ட வன அலுவலர் இக்ரம் முகமதுஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Friday, 16 April 2010 06:29
 

கோடை வறட்சியிலும் வற்றாத அக்காமலை : 'செக்டேம்' வால்பாறைக்கு வராது குடிநீர் பஞ்சம்

Print PDF

தினமலர் 16.04.2010

கோடை வறட்சியிலும் வற்றாத அக்காமலை : 'செக்டேம்' வால்பாறைக்கு வராது குடிநீர் பஞ்சம்

வால்பாறை : வால்பாறையில் வறட்சி நிலவியபோதும் பொது மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை 'செக் டேம்' நிரம்பிய நிலையிலேயே உள்ளது. வால்பாறை டவுன் பகுதி மக்களுக்கு 8 கி.மீ., தொலைவில் உள்ள அக்காமலை செக் டேமிலிருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கருமலை எஸ்டேட்டிலிருந்து வால்பாறை வரை குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடையில்லாமல் மூலிகை மணம் நிறைந்த குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.வால்பாறையில் குடிநீர் தட்டுப் பாட்டை போக்கும் வகையில் 2.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாவது குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டு தற்போது புதிய இணைப்புக்கள் கொடுக்கும் பணியும் வேகமாக நடக்கிறது. இந்நிலையில் வால்பாறையில் கடந்தாண்டு பெய்த தென் மேற்குப்பருவ மழையால் அக்காமலை செக் டேம் நிரம்பியது. இதனையடுத்து சோலையாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தற்போது, சில மாதங்களாக மழைப் பொழிவு முற்றிலுமாக குறைந்த நிலையில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்துவருகிறது. ஆனால், வால்பாறை டவுன் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை செக் டேம் மட்டும் நிரம்பிய நிலையிலேயே உள்ளது. எனவே, இந்த ஆண்டு வால்பாறையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Last Updated on Friday, 16 April 2010 06:26
 


Page 269 of 390