Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

அம்பத்தூர் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை : நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

Print PDF

தினமலர் 16.04.2010

அம்பத்தூர் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை : நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

அம்பத்தூர் : அம்பத்தூர் நகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கவுன்சிலர்கள் அனைவரும் புகார் தெரிவித்ததால், நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அம்பத்தூர் நகராட்சிக் கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் ஆஷிஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.., கவுன் சிலர்கள் பாலகுமார், சம்பத் எழுந்து, 'அம்பத்தூர் முழுவதும் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படுகிறது. லாரிகளில் குடிநீர் சப்ளையும் செய்யப்படுவதில்லை. எனவே, ஆழ்துளை குழாய் அமைக்க வேண்டும்' என்றனர்.சுந்தரி தி.மு..,: 'எங்கள் பகுதியில் குடிநீர் குழாய் சேதமடைந்து விட்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது' என்றார். இதற்கு பதிலளித்த தலைவர் சேகர்,'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க புழல் அருகில் உள்ள 3வது வார்டில் போர் வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

12வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மதி: 'வார்டில் தெரு நாய்கள் அதிகம் உள்ளது. அவற்றை ஒழிக்க வேண்டும்' என்றார். இவரது கருத்தை அனைத்து கவுன்சிலர் களும் ஆதரித்தனர். கூட்டத்தில், 132 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் 15 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Friday, 16 April 2010 06:22
 

ஏரி- குளங்களில் தூர்வாரும் பணி

Print PDF

மாலைமலர் 15.04.2010

ஏரி- குளங்களில் தூர்வாரும் பணி

துறையூர், ஏப்.15-

துறையூரில் நகராட்சி பகுதியில் காசிகுளம் மற்றும் பெரிய ஏரியில் நடுக்கிணறு ஆகிய நீர் ஆதாரங்கள் மூலம் பொதுமக்களுக்கு பயன்படும் விதத்தில் குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது கோடை காலமாக இருப்பதால் இந்த இருநீர் ஆதாரங்களும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

இதை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் பூபதி செல்லதுரை, நகர்மன்ற துணைத் தலைவர் மகாராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் வைத்த கோரிக்கையின்படி துறையூர் நகராட்சி மூலம் ஏரி- குளம்- கிணறு நீர் ஆதாரங்களை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணிகளை நகர்மன்ற தலைவர் பூபதி செல்லதுரை, நகர்மன்ற துணைத் தலைவர் மகாராஜன், ஆணையர்(பொ) ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Last Updated on Thursday, 15 April 2010 12:00
 

மூடப்பட்ட கிணறு சீரமைத்து குடிநீர் தொட்டிகள் திறப்பு

Print PDF

தினமலர் 15.04.2010

மூடப்பட்ட கிணறு சீரமைத்து குடிநீர் தொட்டிகள் திறப்பு

திருவண்ணாமலை: தி.மலை கோயில் அருகே மூடப்பட்ட கிணறு தூர் வாரப்பட்டு, குடிநீர் தொட்டிகள் திறக்கப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே தென்மாட வீதியில் உள்ள கிணறு, குப்பை மேடாக மாறி, நீண்ட காலமாக மூடப்பட்டு கிடந்தது. இதனால் அந்த இடத்தில் கிணறு இருப்பதே பலருக்கும் தெரியாமல் போனது. இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதையடுத்து, நகராட்சி சார்பில் இந்த கிணறு தூர் வாரி மராமத்து செய்து, மின்மோட்டார் பம்ப் அமைக்கப்பட்டது. மேலும், சுற்றிலும் கட்டடம் கட்டி 2 தொட்டிகள் கட்டப்பட்டன. இதன் மூலம், பொதுமக்கள் குடிநீர் வசதி பெறும் வகையில் நகராட்சி தலைவர் ஸ்ரீதரன் நேற்று திறந்து வைத்தார். துணைத்தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். நகராட்சி இன்ஜினியர் சந்திரன், கவுன்சிலர்கள் கார்த்திவேல்மாறன், குணசேகரன், முன்னாள் கவுன்சிலர் சேட்டு முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர

Last Updated on Thursday, 15 April 2010 08:46
 


Page 270 of 390