Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பிரதான குழாயில் உடைப்பு: இன்றும், நாளையும் குடிநீர் நிறுத்தம்

Print PDF

தினமணி 12.04.2010

பிரதான குழாயில் உடைப்பு: இன்றும், நாளையும் குடிநீர் நிறுத்தம்


நாகர்கோவில், ஏப். 11: பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், நாகர்கோவில் நகராட்சியில் திங்கள், செவ்வாய்க்கிழமை குடிநீர் விநியோகம் இருக்காது.

இதுதொடர்பாக நகர்மன்ற ஆணையர் ஜானகி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையில் மழை இல்லாததால் நீர்மட்டம் 2 அடியாக உள்ளது. இதையடுத்து, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் அனந்தனாறு கால்வாய் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முக்கடலிலிருந்து நாகர்கோவில் வரும் பிரதான குழாயில் நாவல்காடு அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், திங்கள், செவ்வாய்க்கிழமை நகரப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, கிடைக்கும் நீரை பொதுமக்கள் சேமித்து வைத்து பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Last Updated on Monday, 12 April 2010 09:53
 

மீறுசமுத்திரம் கண்மாய் தண்ணீர் இனி குடிநீருக்கு

Print PDF

தினமலர் 12.04.2010

மீறுசமுத்திரம் கண்மாய் தண்ணீர் இனி குடிநீருக்கு

தேனி : தேனி மீறு சமுத்திரம் கண்மாயில் ஆறு அடி தண்ணீரை இனிமேல் குடிநீருக்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தேனி உழவர்சந்தை அருகே உள்ள மீறு சமுத்திரம் கண்மாயில் நீர் தேங்கினால் நகர் பகுதியில் நிலத் தடி நீர் மட்டமும் உயரும். இந்த கண்மாயில் மீன்பிடிக்க கூடாது என கலெக் டர் தடை விதித்துள்ளார். தற்போது எப்போதும் மீறு சமுத்திரம் கண்மாயில் ஆறு அடி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு கரைகளையும், நீர் வழிந் தோடியினையும் உயர்த் திக்கட்ட பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேங்கி நிற்கும் ஆறு அடி தண்ணீரும் குடிநீருக்கு மட்டும் பயன்படுத்தப்படும். கரையோரங்களில் போர்வெல் அமைத்து அடிநீர் தொட்டி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆறு அடிக்கு மேல் உள்ள தண்ணீர் மட்டுமே பாசனத் திற்கு பயன்படுத்த முடியும். இத்திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் பொதுப்பணித்துறையினர் இறங்கியுள்ளனர

Last Updated on Monday, 12 April 2010 06:42
 

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவேற்ற வேண்டுகோள்

Print PDF

தினமலர் 12.04.2010

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவேற்ற வேண்டுகோள்

தர்மபுரி: 'தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், ' என்று வன்னியர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்ட வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க துணை தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மாது முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வஜ்ஜரவேலு வரவேற்றார். வன்னியர் சங்க தலைவர் குரு பேசினார். மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி நடக்கும் வன்னியர் இளைஞர் சித்திரை முழு நிலவு பெருவிழாவில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொறுப்பாளர்கள் வேடி, பாலு, முருகேசன், கவிதா செல்வராஜ், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Last Updated on Monday, 12 April 2010 06:14
 


Page 272 of 390