Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் ஆதாரங்கள் கணக்கெடுப்பு பற்றாக்குறையை போக்க அரசு தீவிரம்

Print PDF

தினமலர் 08.04.2010

குடிநீர் ஆதாரங்கள் கணக்கெடுப்பு பற்றாக்குறையை போக்க அரசு தீவிரம்

சிவகங்கை : கோடையில் பற்றாக்குறையை போக்க, குடிநீர் ஆதாரங்களின் நிலை குறித்த கணக்கெடுக்குமாறு கலெக்டர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பொய்த்தது. கோடையின் தாக்கத்தால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது. பற்றாக்குறையை தவிர்க்கும் முயற்சியில், அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.கணக்கெடுப்பு: இதன்படி குடிநீர் திட்டங்கள், ஆதாரங்கள், செயலற்று கிடப்பவை குறித்த விபரங்களை அனுப்ப கலெக்டர்களுக்கு, முதல்வரின் செயலர் (கண்காணிப்பு) சோமநாதன் அறிவுறுத்தியுள்ளார். ''கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது, என்பதில் முதல்வர் தனிக்கவனம் செலுத்துகிறார். இதன் முதற்கட்டமாக, உள்ளாட்சி, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டங்கள்; ஆழ்துளைகளில் நீரின் மட்டம்; பழுதடைந்துள்ள ஆழ்துளைகள்; மேல்நிலை, தரைமட்ட தொட்டிகளின் நிலை குறித்து, துல்லியமாக வழங்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.
மும்முரம்: இதையடுத்து, உள்ளாட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குடிநீர் ஆதாரங்களின் நிலை குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இரு நாட்களுக்குள் அறிக்கை வழங்குமாறு, முதல்வரின் செயலர் உத்தரவிட்டுள்ளார். இதை ஆய்வு செய்து, கோடையில் குடிநீர் பற்றாக்குறையை போக்க, அரசு நிதி ஒதுக்கும்,'' என்றார்.

Last Updated on Thursday, 08 April 2010 06:56
 

வைகையில் மதுரை குடிநீருக்குத் தேவையான தண்ணீர் உள்ளது

Print PDF

தினமணி 07.04.2010

வைகையில் மதுரை குடிநீருக்குத் தேவையான தண்ணீர் உள்ளது

மதுரை, ஏப். 6: குடிநீர் விநியோகத்துக்கு வைகை அணையில் மே மாதம் வரை தேவையான தண்ணீர் இருப்பில் உள்ளது. மேலும் மதுரையில் குப்பைகளை விரைவில் அகற்றுவதற்காக 400 தாற்காலிகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு தாற்காலிகப் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகரில் குப்பைகளை உடனே அகற்றும் பணிக்காக 400 தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் 80 குடிநீர்த் தொட்டிகளும், திருவிழாவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட உள்ளன.

குடிநீர் விநியோகத்துக்கு வைகை அணையில் மே மாதம் வரையில் தேவையான தண்ணீர் இருப்பில் உள்ளது. கரிமேடு மீன் மார்க்கெட் ஏலதாரருக்கு மாநகராட்சி நிர்ணயம் செய்த கட்டணத்தை வசூலிக்க அது குறித்த விவரத்தை எழுதி வைக்க வேண்டும். எனவே மீன் கடைகளைத் திறக்க வேண்டும்.

அதேபோல் மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் ஆண்டுதோறும் தண்ணீர் நிரப்ப ரூ.46 லட்சம் மதிப்பீடு செய்துள்ள நிலையில், அதில் மாநகராட்சி சார்பில் ரூ.20 லட்சம் வழங்கவும், மீதத் தொகை கோயில் நிர்வாகம் வழங்குமாறும் கடிதம் அனுப்பினர்.

அதற்குக் கோயில் நிர்வாகம் கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்குமாறு கோரி உள்ளனர். இக்கடிதத்தின் மீது மாமன்றக் கூட்டத்தில் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 07 April 2010 09:31
 

திட்டக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு மின் தடை நேரத்தில் மாற்றம் தேவை

Print PDF

தினமலர் 07.04.2010

திட்டக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு மின் தடை நேரத்தில் மாற்றம் தேவை

திட்டக்குடி: திட்டக்குடியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மின்நிறுத்த நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். திட்டக்குடி தாலுக்காவின் தலைமையிடமான திட்டக்குடி நகர்ப்புறத்திலுள்ள 18 வார்டுகளிலும் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு எதிர் புறம் 4.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட் டுள்ளது. இது தவிர இளமங்கலத்தில் 30 ஆயிரம் மற்றும் ஒரு லட்சத்திலும், பெரியார் நகரில் ஒரு லட்சத்திலும், வதிஷ்டபுரத்தில் 2.5 லட்சத்திலும், கோழியூரில் ஒரு லட்சத்திலும் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மோட்டார் இணைப்புடன் இயங்கி வருகின்றன. இந்நீர்தேக்கத் தொட்டிகள் மூலம் காலை 6 முதல் 8 மணி வரைக்கும் மாலை 4 முதல் 5 மணி வரைக்கும் முறையே தண்ணீர் விநியோகிக்கப்பட்டு, குடிநீர் சப்ளை வழங்கப்பட்டு வருகின்றது.

இதில் திட்டக்குடி நகர்ப்புறத்திலுள்ள 4.5 லட் சம் கொள்ளளவுடைய நீர்த் தொட்டிக்கு மட்டும் ராட் சத ஜெனரேட்டர் பொருத் தப்பட்டு, மின்இணைப்பு இல்லாத நேரத்திலும் தண் ணீர் வழங்கப்படுகிறது. மற்ற குடிநீர் தொட்டிகள் ஜெனரேட்டர் வசதியின்றி மின்இணைப்பு இல்லாத நேரத்தில் தண் ணீரை மேலேற்ற முடியாமல், உரிய நேரத்தில் குடிநீர் சப்ளை வழங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், திட்டக்குடியில் மதியம் 12 முதல் 3 மணி வரையிலும் மின்இணைப்பு துண்டிக்கப்படுவதால், மாலை வேளையில் நகர்ப்புற மக்களுக்கே குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மின்துண்டிப்பு நேரத்தை காலை 8 முதல் 11 மணி வரை மாற்றியமைத்தால் காலை மற்றும் மாலை வேளைகளில் தடையின்றி குடிநீர் சப்ளை வழங்க முடியும்.

Last Updated on Wednesday, 07 April 2010 06:29
 


Page 274 of 390