Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் வடிகால் வாரியம் ஒத்துழைப்பில்லை : கலெக்டரிடம் திண்டுக்கல் நகராட்சி புகார்

Print PDF

தினமலர் 07.04.2010

குடிநீர் வடிகால் வாரியம் ஒத்துழைப்பில்லை : கலெக்டரிடம் திண்டுக்கல் நகராட்சி புகார்

திண்டுக்கல்: குடிநீர் வடிகால் வாரியம் சரியாக ஒத்துழைக்கவில்லை என கலெக்டரிடம் திண்டுக்கல் நகராட்சி தலைவர், கமிஷனர் புகார் செய்தனர். திண்டுக்கல்லில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சப்ளை செய்யப்பட்ட காவிரி குடிநீர் திட்ட குடிநீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட தரையடி மெயின் குழாய்களுக்கு மற்ற குழாய்கள் மூலம் இணைப்பு வழங்கப்படவில்லை. வால்வுகள் சரிசெய்யப்படவில்லை.இதனால் குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இது குறித்து வடிகால் வாரியத்திடம் நகராட்சி நிர்வாகம் நேரடியாக கேட்டும் பலன் இல்லை. நகராட்சி தலைவர் நடராஜன், கமிஷனர் லட்சுமி , அதிகாரிகள் கலெக்டர் வள்ளலாரை நேரில் சந்தித்து குடிநீர் வடிகால் வாரியத்தின் மெத்தன போக்கு குறித்து புகார் செய்தனர்.

Last Updated on Wednesday, 07 April 2010 06:26
 

மணப்பாறை நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை குளித்தலை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்: கவுன்சிலர்கள் நேரில் ஆய்வால் பரபரப்பு

Print PDF

தினமலர் 07.04.2010

மணப்பாறை நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை குளித்தலை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்: கவுன்சிலர்கள் நேரில் ஆய்வால் பரபரப்பு

குளித்தலை: மணப்பாறை நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை காரணம் அறிய, குளித்தலை காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களை கவுன்சிலர்கள் ஆய்வு செய்தனர். மணப்பாறை நகராட்சி மற்றும் 59 கிராமங்களுக்கு குளித்தலை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிகாலத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டது. கடந்த 1994 ஃபிப்., அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை துவக்கி வைத்தார். திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் ஒரு தொட்டி அமைக்கப்பட்டு ஒன்பது மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு 59 கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

படிப்படியாக தண்ணீர் விநியோகம் குறைந்து கடந்த ஆறு மாதங்களாக மணப்பாறை பகுதியில் வாரம் ஒருமுறை வினியோகம் செய்யப்பட்டு வந்தது. குடிநீர் கிடைக்காமல் மணப்பாறை பகுதியில் பிரச்னை வலு த்தது. நகராட்சி முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களிலும் மக்கள் ஈடுபட்டனர். உண்மை நிலை அறிய மணப்பாறை நகராட்சி அ.தி.மு.., கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, ராமன், சி.பி.., கவுன்சிலர் சவுகத் அலி, காங்கிரஸ் கவுன்சிலர் சங்கர் மற்றும் பலர் குளித்தலை காவிரியில் தண்ணீர் எடுக்கும் நீரேற்று நிலையத்தை பார்வையிட்டனர்.

கவுன்சிலர் ராமமூர்த்தி கூறியதாவது: மணப்பாறையில் குடிநீர் தட்டுப்பாடு தீர்க்க நகராட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவுன்சிலர்கள் மீது மக்கள் சந்தேகிக்கின்றனர். இதனால் பிரச்னை குறித்து நேரில் ஆய்வு செய்தோம். தண்ணீர் தொட்டியில் ஒன்பது மோட்டார் இருந்தும், எட்டு பம்புகளில் மணல் அடைத்து தண்ணீர் எடுக்க முடியாத நிலையில் உள்ளன. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் கண்டுகொள்ளாமல் மின்தடையை பொய்யாக காரணம் கூறிவருகிறது. மின்வெட்டு பிரச்னை ஒருபுறம் இருக்க, தற்போதுள்ள குடிநீர் திட்ட ஏற்பாடுகளை பராமரிக்காமல் குடிநீர் வடிகால் வாரியம் அலட்சியமாக உள்ளது.

மணப்பாறை நகராட்சி கமிஷனர் அருணாசலம், நகராட்சி தலைவர் சரோஜா ஆகியோர் பிரச்னை குறித்து கண்டுகாணாமல் உள்ளது ஆய்வில் தெரிகிறது. நகராட்சி நிர்வாகம் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் குடிநீர் வரி மக்களிடம் வசூல் செய்கிறது. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. இந்நிலை தொடர்ந்தால் மணப்பாறையில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மணப்பாறை நகராட்சி கமிஷனர் அருணாசலம் கூறியதாவது: காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வழங்குவது குடிநீர் வடிகால் வாரியத்துக்குரியது. நகராட்சி குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் வந்தால் தான் நகராட்சிக்கு உரியதாகும். காவிரியின் தரை மட்டத்தில் தண்ணீர் குறைந்துவிட்டது. நான் அரசு விதிமுறைகளின் படிதான் செயல்பட முடியும். மணப்பாறை பகுதி குடிநீர் தட்டுபாட்டை லாரி தண்ணீர் மூலம் வழங்கி தீர்த்து வருகிறோம். கவுன்சிலர்கள் ஆய்வு செய்தது எனக்கு தெரியாது. குடிநீர் சப்ளை பிரச்னை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய பொறியாளரிடம் தெரிவித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Last Updated on Wednesday, 07 April 2010 06:23
 

கோடையில் மழை வந்தால் குடிநீருக்கு திண்டாட்டமில்லை

Print PDF

தினமலர் 07.04.2010

கோடையில் மழை வந்தால் குடிநீருக்கு திண்டாட்டமில்லை

ஊட்டி: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட நீர்த்தேக்கங்களில் கடந்தாண்டை விட குறைந்தளவு நீர் இருப்பு உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. கோடை காலம் துவங்கிவிட்டதால் அனைத்து பகுதிகளிலும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமவெளி பகுதிகளில் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால், விடுமுறை நாட்களில் கோடை வாசஸ்தலங்களை நோக்கி மக்கள் 'படையெடுத்து' வருகின்றனர். மலை மாவட்டமான நீலகிரியில் கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் கோடையின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அணைகளில் கோடை வெப்பத்தின் காரணமாகவும், மின் உற்பத்திக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பார்சன்ஸ் வேலி, மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலை, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா, மேல் கோடப்பமந்து, கீழ் கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி மற்றும் கிளன் ராக் நீர் தேக்கங்களில் கடந்தாண்டை விட இந்தாண்டு தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. இதனால் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீலகிரியில் மழை பெய்து வருவது மக்களுக்கு பெரும் ஆறுதலாக உள்ளது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மழை தொடரும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களில் நீர் வரத்து அதிகரித்து குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு பாதிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Wednesday, 07 April 2010 06:08
 


Page 275 of 390