Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நெல்லையில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க வார்டுக்கு 3 போர்வெல், 3 மினி தொட்டி: வயர்லெஸ் மூலம் கமிஷனர் கண்காணிப்பு

Print PDF

தினமலர் 06.04.2010

நெல்லையில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க வார்டுக்கு 3 போர்வெல், 3 மினி தொட்டி: வயர்லெஸ் மூலம் கமிஷனர் கண்காணிப்பு

திருநெல்வேலி:நெல்லையில் கோடை குடிநீர் பிரச்னையை சமாளிக்க வார்டுக்கு 3 போர்வெல், 3 மினி குடிநீர் தொட்டி அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.கோடை காலம் துவங்கியுள்ளதால் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவருகிறது. ஆற்றிலும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் நெல்லையில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கோடை காலம் நிலவி வருவதால் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து, தலைமை நீரேற்று நிலையங்களில் நீருந்து செய்யப்படும் குடிநீரின் அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வீட்டின் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.நெல்லை கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பாளை., தியாகராஜநகர், என்.ஜி..காலனி, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னை அதிக அளவில் இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் கோடை கால வறட்சிகளை சமாளிப்பது குறித்து மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் மாநகராட்சியில் நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் பாஸ்கரன், மண்டல தலைவர்கள் சுப.சீதாராமன், முகம்மதுமைதீன், சுப்பிரமணியன், நகரப் பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர் மற்றும் உதவிக்கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளிலும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி வார்டுக்கு 3 போர்வெல் அமைக்கவும், 3 மினி ஓ.எச்.டி.குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர பழுதடைந்த இயங்காத அடிபம்புகளை கணக்கெடுத்து அவற்றை உடனடியாக சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மாநகராட்சி உள்ள 6 லாரிகள், ஒரு டிராக்டர் மூலம் எந்தெந்த வார்டுகளுக்கு எத்தனை மணிக்கு தண்ணீர் சப்ளை செய்யவேண்டும் என லாரி டிரைவர்களுக்கு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோடை காலம் முடியும் வரை தனியார் நிறுவனங்கள் பணம் செலுத்தினாலும் தண்ணீர் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வயர்லெஸ் கருவிகள்மூலம் கண்காணிப்பு:நெல்லை மாநகராட்சி பணியாளர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வயர்லெஸ் கருவிகள் குடிநீர் நீரேற்று நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. தினந்தோறும் இரவு நேரங்களில் ஆற்றில் தண்ணீரின் அளவு, நீரேற்று நிலையத்தில் ஏற்றப்பட்டுள்ள குடிநீரின் அளவு, மின்வெட்டு பிரச்னை, மோட்டர்கள் எவ்வளவு நேரம் இயங்குகிறது, அதில் உள்ள குறைபாடுகள் என்ன என்பதை மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் வயர்லெஸ் கருவி மூலம் அவ்வப்போது பணியாளர்களிடம் தகவல்களை கேட்டு குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறார்.

Last Updated on Tuesday, 06 April 2010 06:12
 

திருச்சி மாநகரின் ஒரு பகுதியில் விநியோகம் ரத்து

Print PDF

தினமணி 05.05.2010

திருச்சி மாநகரின் ஒரு பகுதியில் விநியோகம் ரத்து

திருச்சி, ஏப். 4: திருச்சி குடமுருட்டி அருகே பிரதான குடிநீர்க் குழாயில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட உடைப்பால், மாநகரின் ஒரு பகுதியில் திங்கள்கிழமை ஒரு நாள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தெரிவித்ததாவது: "குடமுருட்டி அருகேயுள்ள பிரதான குடிநீர்க் குழாயில் எதிர்பாராத விதமாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உறையூர், மரக்கடை, விறகுப்பேட்டை ஆகிய மூன்று இடங்களிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றுவது தடைபட்டுள்ளது.

குழாய் உடைப்பைச் சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, திங்கள்கிழமை மரக்கடை, பெரிய கடைவீதி, வளையல்காரத்தெரு, பூலோகநாதர் கோயில் தெரு, மதுரை சாலை, பாலக்கரை, கீழரண் சாலை, பெரிய செüராஷ்டிர தெரு, விறகுப்பேட்டை, வரகனேரி, எடத்தெரு, தாராநல்லூர், காமராஜ் நகர், உறையூர், நவாப்தோட்டம், பாண்டமங்கலம், கோணக்கரை, திருத்தாந்தோனி சாலை, பாளையம்பஜார், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, நாச்சியார்பாளையம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. செவ்வாய்க்கிழமை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்' என்றார் பால்சாமி.

 

மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் 'கட்'

Print PDF

தினமலர் 05.05.2010

மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் 'கட்'

திருச்சி: குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று ஒரு நாள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

திருச்சி மாநகராட்சி குடமுருட்டி அருகே பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. உறையூர், மரக்கடை, விறகுபேட்டை ஆகிய இடங்களிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் இன்று (5ம் தேதி) ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. குடிநீர் வினியோம் நிறுத்தும் பகுதிகள்: மரக்கடை, பெரியகடைவீதி, வளையல்காரர் தெரு, பூலோகநாத ஸ்வாமி கோவில் தெரு, மதுரை ரோடு, பாலக்கரை, .பி., ரோடு, பெரிய சவுராஷ்டிரா தெரு, விறகுபேட்டை, வரகனேரி, எடத்தெரு, தாராநல்லூர், காமராஜ் நகர், உறையூர், நவாப் தோட்டம், பாண்டமங்கலம், கோணக்கரை, திருத்தாந்தோணி ரோடு, பாளையம் பஜார், ஹவுஸிங் யூனிட், கல்நாயக்கன் தெரு, மேட்டுத்தெரு, நாச்சியார் பாளையம். இப்பகுதிகளில் நாளை முதல் வழக்கம் போல் குடிநீர் வினியோம் செய்யப்படும் என திருச்சி மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தெரிவித்துள்ளார்.

Last Updated on Monday, 05 April 2010 06:45
 


Page 278 of 390