Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

வறட்சி சமாளிக்க ரூ.14 கோடி

Print PDF
தினமலர் 05.05.2010

வறட்சி சமாளிக்க ரூ.14 கோடி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட வறட்சியை சமாளிக்க 14 கோடி ரூபாய் தேவை என மாவட்ட நிர்வாகம் அரசிடம் கேட்டுள்ளது.கலெக்டர் வள்ளலார் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் வறட்சியை சமாளிக்க அனைத்து ஆழ் துளை குழாய்களையும் சீரமைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. தவிர பி.டி.ஓ.,க்கள், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான குடிநீர் திட்ட விவரங்களை சேகரித்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 14 கோடி ரூபாய்க்கு வறட்சி நிவாரண திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள் ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Last Updated on Monday, 05 April 2010 06:19
 

திருப்பத்தூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் குறைப்பு

Print PDF

தினமலர் 01.04.2010

திருப்பத்தூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் குறைப்பு

திருப்பத்தூர்:திருப்பத்தூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள் ளது.திருப்பத்தூர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வைப்பு தொகை செலுத்தினால் தான் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. இதில், ஏழைகள் 5 ஆயிரம் ரூபாயை கட்ட முடியாமல் தவித்தனர். சிலர் சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு எடுத்து வந்தனர். இதனால் வைப்பு தொகையை குறைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. அதேபோல் குடிநீர் இணைப்புகளுக்கு மாதம் ஒன்றுக்கு 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் பட்டது. இதனையும் குறைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த நகராட்சி கூட்டத்தில் சேர்மன் சொக்கம்மாள், முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் நகராட்சியில் மாத குடிநீர் கட்டணத்தை 75 ரூபாயிருந்து 40 ரூபாயாக குறைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார்.

மேலும் புதிய குடிநீர் இணைப்பு வைப்பு தொகை 5 ஆயிரம் ரூபாயை, ஆயிரம் ரூபாயாக குறைப்பதாகவும் தீர்மானம் கொண்டுவந்தார். ஏற்கனவே வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு களுக்கு செலுத்தப்பட்ட வைப்பு தொகையில் மாற்றம் இல்லை எனவும் கட்டண குறைப்பு இன்று (1ம் தேதி) முதல் அமலுக்கு வருவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.இதன்படி அதிரடியாக வைப்பு கட்டணம் 4 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளதும், மாத குடிநீர் கட்டணம் 35 ரூபாய் குறைத்துள்ளதும் பொது மக்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Last Updated on Thursday, 01 April 2010 06:57
 

நீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய நீராதாரம் : குன்னூர் எம்.எல்.ஏ., தகவல்

Print PDF

தினமலர் 01.04.2010

நீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய நீராதாரம் : குன்னூர் எம்.எல்.., தகவல்

குன்னூர் : ''குன்னூர் நகர மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய, புதிய நீராதாரங்களை உருவாக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது; பேரூராட்சிப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீடுகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட உள்ளது,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.குன்னூர் எம்.எல்.., சவுந்தரபாண்டியன் கூறியதாவது:

குன்னூர் அட்டடி அருகேயுள்ள தனியார் எஸ்டேட் வழியாக வழிந்தோடி வரும் இயற்கை நீரை, செக்டேம் அமைத்து தேக்கினால், அட்டடி, புரூக்லேண்ட்ஸ் சுற்றுவட்டார மக்களுக்கு நீர் வினியோகிக்க முடியும். கன்னிமாரியம்மன் கோவில் பகுதியில் தனியார் பங்களா அருகேயுள்ள இயற்கை நீரூற்றில் இருந்து வழிந்தோடி வரும் நீரை தேக்கி, கன்னி மாரியம்மன், சித்தி மாரியம்மன் கோவில் வீதி, பஸ் ஸ்டாண்டு பகுதிகளுக்கு நீர் வினியோகிக்க முடியும்.

கிளண்டேல் எஸ்டேட் பகுதியில் வழிந்தோடி வரும் இயற்கை நீரூற்றை, செக்டேம் அமைத்து தேக்கி வைத்தால், காந்திபுரம், காட்டேரி பகுதியில் உள்ள மக்களுக்கு நீர் வினியோகிக்க முடியும். இத்திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க, குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் திட்ட அறிக்கை பெறப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்து நகர மக்களின் நீர் தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நடப்பாண்டு எம்.எல்.., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், குன்னூர் நகராட்சிக்கு மட்டும் 40 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.வெலிங்டன் கன்டோன்மென்ட் கட்டுப்பாட்டில் உள்ள ஜிம்கானா பகுதியில், கன்டோன்மென்ட் மக்களின் பயன்பாட்டுக்கு போக உபரியாக வரும் நீரை தேக்கி, ஆப்பிள் பி பகுதியில் குன்னூர் நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் சேகரித்து, ஆப்பிள் பி சுற்றுவட்டார மக்களுக்கு நீர் வினியோகிக்கும் திட்டம் இழுபறியில் உள்ளது.

இத்திட்டத்துக்காக கடந்த 2009ம் ஆண்டு எம்.எல்.., தொகுதி நிதியில் இருந்து 15 லட்சம் மதிப்பில் குழாய்கள் வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.திட்டத்தில் உள்ள பிரச்னை குறித்து மாவட்ட நிர்வாகம் தெளிவாக கேட்டறிந்து நீரை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. திட்டத்தில், கன்டோன்மென்ட் நிர்வாகம் கூறும் இடத்தில் செக்டேம் அமைத்தால், நீரை பம்ப் செய்ய கூடுதல் செலவாகும் என்பதால், மாற்று இடத்தில் செக்டேம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த சிக்கல் தீர்ந்தவுடன் பணிகள் துவங்கும்.குன்னூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றதன் விளைவாக, குன்னூர் நகராட்சி, கோத்த கிரி, உலிக்கல், ஜெகதளா பேரூராட்சிப் பகுதிகளில் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் வீடு கட்ட இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. இவ்வாறு, எம்.எல்.., சவுந்தரபாண்யன் கூறினார்.

Last Updated on Thursday, 01 April 2010 06:31
 


Page 279 of 390