Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பயணிகள் குடிநீரால் வியாபாரிகளுக்கு பலன்

Print PDF

தினமலர் 01.04.2010

பயணிகள் குடிநீரால் வியாபாரிகளுக்கு பலன்

தர்மபுரி: தர்மபுரி நகர பஸ் ஸ்டாண்டில் பயணிகள் குடிக்க வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து வியாபாரிகள் தண்ணீர் எடுத்து செல்வதால், வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் தண்ணீருக்கு பரிதவிக்கும் நிலையுள்ளது.தர்மபுரி நகர பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தண்ணீர் பருக வசதியாக நகராட்சி சார்பில் தொட்டி கட்டப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பி பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொட்டிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றியுள்ள வியாபாரிகள் அதிக அளவில் குடங்களை வைத்து தண்ணீர் பிடித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

வெயில் உக்கிரம் அதிகரித்துள்ள நிலையில் பஸ்சுக்காக காத்திருக்கும் கிராம பகுதி மக்கள் பகல் நேரங்களில் தொட்டிகளில் வியாபாரிகள் தண்ணீர் பிடிப்பதால், தண்ணீர் குடிக்க முடியாத நிலையுள்ளது. இதனால், காசு கொடுத்த தண்ணீர் பாக்கெட்களை பொதுமக்கள் வாங்கி பருகும் நிலையுள்ளது. நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் கட்டி வழங்கிட வேண்டும்.

சேவை அமைப்புகள் மூலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பயணிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என பயணிகள் எதிர்பார்க்கின்றனர

Last Updated on Thursday, 01 April 2010 06:25
 

குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற எளிமையான முறை

Print PDF

தினமலர் 01.04.2010

குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற எளிமையான முறை

சென்னை : குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற எளிமையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: குடிநீர் மற்றும் கழிவுநீர் விண்ணப்பப் படிவங்கள் அனைத்து பணிமனைகளிலும், பகுதி அலுவலகங்களிலும், தலைமை அலுவலகத்திலும், குடிநீர் வாரிய இணைய தளத்தில் இருந்தும் இலவசமாக பெறலாம். இதை எளிதாக பூர்த்தி செய்யலாம். படிவத்தை கட்டட உரிமையாளரோ, அவரது உரிமை பெற்றவரோ சமர்ப்பிக்கலாம். இதில் பிளம்பர், பொறியாளர் கையெழுத்திட தேவையில்லை.விண்ணப்பங்களை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலக பதிவு முகப்பில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்கப்பட்ட பின், அதற்குரிய தொகையை மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு ஒப்புகை சீட்டு வழங்கப் படும். விண்ணப்பத்தை பதிவு செய்த ஏழு நாட்களுக்குள், இணைப்புக் கான ஒப்பளிப்பு வழங்கப்படும். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய, சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள செயற்பொறியாளர் (பதிவுப் பிரிவு) / தகவல் மற்றும் உதவி அலுவலரை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசியில் 044 - 28451300 விரிவாக்கம் 304, 369, 335 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 01 April 2010 06:20
 

குடிநீர் தொட்டி திறப்பு

Print PDF

தினமலர் 31.03.2010

குடிநீர் தொட்டி திறப்பு

வால்பாறை : வால்பாறை டவுன் காந்திசிலை வளாகம் தற்போது பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. ஆயிரக்கணக்கான பயணிகளும், பள்ளி மாணவர்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து செல் லும் இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு தாகத்திற்கு குடிக்க கூட குடிநீர் கிடைக்காமல் தவித்தனர். இதை சுட்டிகாட்டி காந்திசிலை வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப் பட்டது. இதனையடுத்து, வால்பாறை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அதிரடியாக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதற்கான விழா நகராட்சி செயல்அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. நகராட்சித்தலைவர் கணேசன் புதிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். சுகாதார ஆய்வாளர் கருணாகரன், கவுன்சிலர்கள் குசலவன், வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர

Last Updated on Wednesday, 31 March 2010 06:38
 


Page 280 of 390