Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சிறுவாணி குடிநீர் வினியோகம் பாதியாக குறைப்பு: மாநகராட்சி அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 31.03.2010

சிறுவாணி குடிநீர் வினியோகம் பாதியாக குறைப்பு: மாநகராட்சி அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

கோவை : 'கோவை மாநகராட்சியில், குடிநீர் வினியோக நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இனி, ஒருநாள் விட்டு ஒருநாள் நான்கு மணி நேரத்திற்கு மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படும்' என்று மாநகராட்சி அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவானது.

கோவை மாநகராட்சியிலுள்ள நான்கு மண்டலத்திற்குட்பட்ட 72 வார்டுகளில் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. மேற்கு,தெற்கு மண்டலப்பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சிறுவாணி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு மண்டல பகுதிகளில் நான்கு நாட்களுக்கொருமுறை பில்லூர் குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி பொதுமக்களிடம் உறுதியளித்தது. ஆனால், ஆறு நாள் முதல் எட்டு நாட்களுக்கொருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் 10 நாட்களிலிருந்து 12 நாட்களுக்கொருமுறையே குடிநீர் வினியோகம் நடக்கிறது. மாநகராட்சி கூட்டங்களில் கிழக்கு, வடக்கு மண்டல பகுதி கவுன்சிலர்கள் அடிக்கடி குடிநீரை பற்றிதான் புகார் கூறுகின்றனர். இது வரை கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் சரிசெய்யவுமில்லை;முறைப்படுத்தவும் இல்லை.

கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் மற்றும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இருப்பில் உள்ள குடிநீரை கொண்டு வினியோகத்தை சரியான முறையில் மேற்கொள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

சிறுவாணி அணை பராமரிப்பு இன்ஜினியர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது: சிறுவாணி அணையிலிருக்கும் குடிநீர் ஜூன் மாதம் வரை தாக்குபிடிக்கும். அது வரை வழக்கம் போல் மாநகராட்சிக்கு சிறுவாணி குடிநீர் வழங்க தயாராக இருக்கிறோம்.

பில்லூர் அணை இன்ஜினியர் சுப்ரமணியம்: பில்லூர் அணையிலிருந்து குடிநீர் தற் போது வழக்கம் போல் வினியோகிக்கிறோம். மின்தடை ஏற்பட்டால் எதுவும் சொல்ல முடியாது. ஒரு மோட்டார் இயங்கி அடுத்த 10வது நிமிடத்தில் அடுத்த மோட்டார் இயங்கும். அடுத்த 10வது நிமிடத்தில் மற்றொரு மோட்டார் இயங்கும். நான்கு மோட்டார் இயங்கினால்தான் பில்லூர் குடிநீர் போதுமான அளவு பம்ப் செய்து நகருக்கு வந்து சேரும். மின்தடையில்லாமல் இருந்தால் எந்த தடங்கலும் இல்லாமல் குடிநீரை கொடுக்க இயலும். போதுமான அளவு நீர் உள்ளது. அதோடு அணைக்கு குடிநீர் வரத்தும் உள்ளது.

கல்யாணசுந்தரம்: அணையிலிருந்து நகருக்கு சரியான முறையில் குடிநீர் வந்து சேருகிறது. மாநகராட்சிப்பகுதிக்குள் வினியோகம் செய்யும் முறையில் நிறைய மாற்றம் செய்ய வேண்டும். மாநகராட்சி பணியாளர் மற்றும் அதிகாரிகள் செய்யும் குளறுபடிகளால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சாதாரண, நடுத்தர மக்கள் மட்டுமே குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். மருத்துவமனை, ஓட்டல், ரெஸ்டாரன்ட், லாட்ஜ் வி..பி., வீடுகள் போன்றவற்றில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதில்லை. இதை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் ஒரு குழு அமைக்க வேண்டும். அந்த பகுதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயின் அளவு என்ன, வினியோகிக்கும் கால அளவு என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பத்மநாபன்: மூன்று மாதங்களாக வடக்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. புகார் தெரிவித்து பலனில்லை. பில்லூரிலிருந்து வழக்கமாக கொடுக்கும் 65 எம்.எல்.டி., அளவை குறைக்க வேண்டாம். சில நேரங் களில் 60 ஆக குறைவதால் உயரமான பகுதிகளுக்கு குடிநீர் வினி யோகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கூடுதலாக சிறுவாணியிலிருந்து எட்டு எம்.எல்.டி., கொடுக்க வேண்டும்.

உதயகுமார்: கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் தீர்க்கப்படாத பிரச்னைகளில் குடிநீர் முக்கியமானது. எத்தனையோ கூட்டங்களில் பல முறை புகார் தெரிவித்துவிட்டோம்; எந்த பலனுமில்லை. குடிநீர் அவசியமான ஒன்று, அதை வழங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த காரணமும் சொல்லக்கூடாது. சீரான குடிநீர் வினியோகத்திற்கு வழி செய்யவேண்டும். அதற் கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

மேயர் வெங்கடாசலம்: கிழக்கு, வடக்கு மண்டல பகுதியில் எட்டு எம்.எல்.டி., குடிநீர் வழங்கப்படும். தெற்கு,மேற்கு மண்டல பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் நாட்களில் மாற்றம் செய்யப்படும்.

கமிஷனர் அன்சுல்மிஸ்ரா: கிழக்கு, வடக்கு மண்டல பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு மாநகராட்சிக்கு வரும் சிறுவாணி குடிநீரிலிருந்து எட்டு எம்.எல்.டி., நீர் வினியோகிக்கப்படும். அதை சரிக்கட்ட தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் வழக்கமாக குடிநீர் வினியோகிக்கப்படும் நேரம் குறைக்கப்படும். இது குறித்து மாநகராட்சி குடிநீர் வினியோகம் செய்யும் இன்ஜினியர் ஒருவர் கூறுகையில்,'எட்டு எம்.எல்.டி., குடிநீர் பகிர்ந்து கொடுப்பதால், அதை சரிகட்ட எட்டு மணி நேரம் விடப்பட்ட குடிநீரின் அளவு நான்கு மணி நேரமாக குறைக்கப்படும்' என்றார்.

Last Updated on Wednesday, 31 March 2010 06:36
 

பாளை., சக்திநகர், சேந்திமங்கலம்பகுதிக்கு சீரான குடிநீர் வசதி தேவை: மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை

Print PDF

தினமலர் 31.03.2010

பாளை., சக்திநகர், சேந்திமங்கலம்பகுதிக்கு சீரான குடிநீர் வசதி தேவை: மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை

திருநெல்வேலி:பாளை., சக்திநகர், சேந்திமங்கலம் மக்கள் குடிநீர் வசதி செய்து தரக்கோரி மேயரிடம் மனுக் கொடுத்தனர்.நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. இதில் பாளை., மண்டலம் 14வது வார்டு சக்திநகர் பெண்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:பாளை., சக்திநகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் சீராக வரவில்லை. இதனால் குடிநீருக்காக மக்கள் சிரமப்படுகின்றனர். நிலத்தடி நீரும் பயன்படுத்தக் கூடிய வகையில் இல்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி மூலம் சீரான குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.சேந்திமங்கலம் மக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் நல்ல தண்ணீர் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே மக்களின் நலன் கருதி ஆற்றுத் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்'.

இதுதவிர ரோடு வசதி, லைட் வசதி, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் மேயரிடம் மனுக் கொடுத்தனர். மக்கள் கொடுத்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.மக்கள் குறைதீர்க்கும் நாளில் கமிஷனர் பாஸ்கரன், துணை மேயர் முத்துராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 31 March 2010 06:16
 

நல்லூர் நகராட்சியில் அனல் பறந்த குடிநீர் பிரச்னை

Print PDF

தினமலர் 31.03.2010

நல்லூர் நகராட்சியில் அனல் பறந்த குடிநீர் பிரச்னை

திருப்பூர் : நல்லூர் நகராட்சி அவசர கூட்டத் தில் குடிநீர் பிரச்னை அனல் பறந்தது. நல்லூர் நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது; நகராட்சி தலைவி விஜயலட்சுமி தலைமை வகித்தார். வரும் 2010-11ம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீடு; மாநகராட்சியோடு இணைக்கும் திட்டம்; எதிர்கால உள்கட்டமைப்பு வளர்ச்சி பணிக்கான கருத்துருவை அனுமதித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறின.

கூட்ட விவாதம்: சாந்தி (தி.மு..,): மணியகாரம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வழிவகை செய்ய வேண்டும். சாக் கடை அடைப்பை அகற்ற பெண் களை மட்டும் அனுப்பாமல், ஆண்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும். மணியகாரம்பாளையத்தில் உள்ள சுடுகாட்டுக்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.விஜயகுமார் (.தி.மு..,): நகராட்சியில் ஏற்கனவே செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. அப்பணிகளை நிறைவு செய்த பின், எதிர்காலத்துக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தலாம். எட்டாவது வார்டில் தேங்கிக் கிடக் கும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். மாநகராட்சியோடு இணையும் நகராட்சியை எதற்காக தரம் உயர்த்த வேண்டும்.தெய்வாத்தாள் (.கம்யூ.,): குடிநீரை முறைப்படி வினியோகிப்பதில்லை. சில பகுதிகளுக்கு மட்டும் அதிகளவில் வழங்கப்படுகிறது. செரங்காடு பகுதியில் உள்ள போர் வெல்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.சுரேஷ் (.தி.மு..,): மேட்டுப்பாளையம் குடிநீரை முறையாக வினியோகிப்பதில்லை. நகராட்சிக்கு வரும் குடிநீர் அளவையும், வார்டுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவையும் தெரியப்படுத்த வேண் டும். என்.பி., நகரில் உள்ள ஆழ்குழாய் கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஒருமுறை குடிநீர் வினியோகிக்கும் போது, ஒரு இணைப்புக்கு இரண்டு ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது என்பதை நிரூபிக்க வேண்டும்.சுப்ரமணியன் (மா.கம்யூ.,): குடிநீர் பிரச்னையை எழுப்பும் போது, அதிகாரிகள் பதில் மட்டும் கூறுகின்றனர்; குடிநீர் தட்டுப்பாட்டுக்கு இன்னும் தீர்வு வரவில்லை. குடிநீர் கிடைப்பதற்கான மாற்று வழியை ஆய்வு செய்ய வேண்டும். குடிநீர் கிடைக்கும் வரை அனைத்து கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபடலாம். குறைவான சம்பளம் வழங்குவதால், சுகாதார பணியில் புதிதாக ஆட்கள் சேர்வதில்லை.

சுகாதார பணியாளர்களுக்கு அதிமான கூலி உயர்வை அளிக்க வேண்டும். நகராட்சி குப்பையை கொட்டுவதற்காக நிரந்தர இடம் தேர்வு செய்ய வேண்டும். சில பகுதிகளுக்கு மட்டும் அதிகமான குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.நாகராஜ் (தி.மு..,): குடிநீர் வினியோகிப்பதில் அதிகளவிலான முறைகேடுகள் நடக்கின்றன. புதிதாக உருவான நகர்களுக்கு முறையாக குடிநீர் சப்ளை செய்வதில்லை. பழைய கிராமங்களுக்குத்தான் குடிநீர் அதிகமாக வழங்கப்படுகிறது. காய்கறி தோட்டங்களுக்கும், தென்னை மரங்களுக்கும் குடிநீர் பாய்ச்சுகின்றனர். நகராட்சியின் சில பகுதிகளில் குடிக்கக்கூட குடிநீரின்றி தவிக்கின்றனர்.

நகராட்சி தலைவி விஜயலட்சுமி பதிலளித்ததாவது: குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள் ளது. சுகாதார பணியாளர்களை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்படும். வார்டுகளுக்கு உரிய குடிநீரை வழங்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது, 'ஈகிஸ்' நிறுவனம் பரிந்துரைத்துள்ள திட்டங்கள் செயல் பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புள்ளது. மாநகராட்சியோடு நகராட்சி பகுதிகள் இணைந்தாலும், திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும், என்றார்.கூட்டத்தில், 2010-11ம் நிதியாண் டின் திட்ட மதிப்பீடு தாக்கல் செய்யப்பட்டது. மொத்த வரவு 847.83 லட்சம்; மொத்த செலவினம் 885.27 லட்சம்; நிதி பற்றாக்குறை 37.44 லட்சம்.செயல் அலுவலர் சண்முகம், நகராட்சி பொறியாளர் சண்முகம், துணை தலைவர் நிர்மலா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 31 March 2010 06:03
 


Page 281 of 390