Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பற்றாக்குறையை சமாளிக்க குடிநீர் அளவை குறைக்க முடிவு?

Print PDF

தினமலர் 22.03.2010

பற்றாக்குறையை சமாளிக்க குடிநீர் அளவை குறைக்க முடிவு?

கோவை : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கோவை மாநகராட்சிக்கு, அன்றாடம் வழங்கி வந்த குடிநீரின் அளவை குறைத்துள்ளது. மாநகரப்பகுதியில் குடிநீர் வினியோகத்தில் மாற்றம் செய்வது குறித்து மாநகராட்சி யோசித்து வருகிறது.

கோவை மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் கோடையில் கொளுத்தும் வெய்யிலிற்கு குறைந்து வருகிறது. குடிநீருக்கு பஞ்சம் வராமல் தடுக்க, குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சிக்கு வழங்கும் குடிநீரின் அளவை குறைத்துள்ளது. கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்க சிறுவாணி அணையிலிருந்து, தினமும் 9.8 கோடி லிட்டர் குடிநீரை குடிநீர் வடிகால் வாரியம் வழங்கியது. மாநகராட்சிக்கு தினமும் வழங்கப்படும் குடிநீர் அளவு, நாள் ஒன்றுக்கு 8.6 கோடி லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு 7.1 கோடி லிட்டர் தண்ணீரும், வழியோர கிராமங்கள் மற்றும் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் நகராட்சிகளுக்கு நாளொன்றிற்கு 1.5 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படும். இதே முறை பின்பற்றினால் ஜூன் 20 ம் தேதி வரை, அணையில் இருக்கும் குடிநீரை கொண்டு சமாளிக்கலாம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும். சிறுவாணி அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். 'குடிநீர் பிரச்னை ஏற்படாது' என, குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகின்றனர்.கோவை மாநகரில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் முறையை மாற்றி அமைக்கலாமா என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் யோசித்து வருகிறது

Last Updated on Monday, 22 March 2010 10:25
 

ஒண்டிப்புலி நீர்த் தேக்கத்திலிருந்து அதிக குடிநீர் எடுக்க யோசனை

Print PDF

தினமணி 19.03.2010

ஒண்டிப்புலி நீர்த் தேக்கத்திலிருந்து அதிக குடிநீர் எடுக்க யோசனை

விருதுநகர், மார்ச் 18: விருதுநகரில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, இங்குள்ள ஒண்டிப்புலி நீர்த் தேக்கத்திலிருந்து தினசரி அதிக அளவு தண்ணீரை நகருக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நகர் நல அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் நிர்வாகிகள் டாக்டர் எஸ்.எம். ரத்தினவேல், மேனகைக் கண்ணன் மற்றுóம் பல்வேறு தரப்பினர், இரு தினங்களுக்கு முன்பு ஒண்டிப்புலி நீர்த் தேக்கத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

பினனர் மாவட்ட ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யனை நகர் நல அமைப்பு நிர்வாகிகள் சந்தித்து, இது குறித்து மனு அளித்தனர். அதில் ஒண்டிப்புலி நீர்த் தேக்கத்திலிருந்து தினசரி சுமார் 8 லட்சம் லிட்டர் தண்ணீர் பெற முடியும். தற்போது அங்கிருந்து 2 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்து வரப்படுகிறது.

விருதுநகர் மக்களின் தேவையைச் சமாளிக்கும் விதத்தில் ஒண்டிப்புலியிலிருந்து கூடுதல் தண்ணீர் எடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Last Updated on Friday, 19 March 2010 10:53
 

திண்டிவனத்தில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமலர் 19.03.2010

திண்டிவனத்தில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு

திண்டிவனம்: திண்டிவனத்தில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத் தாத வரின் குழாய் இணைப்பு துண் டிக்கப்பட்டது.திண்டிவனம் நகராட்சியில் தீவிர வரி வசூல் பணிகள் நடந்து வருகிறது. நீண்ட கால வரி நிலுவை வைத்துள்ள வர்களின் வீடு, நிறு வனம், கடைகள் ஜப்தி செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட நக ராட்சி அலுவலக பணியாளர்கள் அடங் கிய குழுவினர் கிடங்கல்-1 பகுதியில் பிள் ளையார் கோவில் தெருவில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை நீண்ட காலமாக செலுத் தாதவரின் வீட்டின் குழாய் இணைப்பை துண்டித்தனர்.

Last Updated on Friday, 19 March 2010 06:39
 


Page 285 of 390