Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நகரப்பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி : நகராட்சி அதிகாரிகள் தீவிரம்

Print PDF

தினமலர் 19.03.2010

நகரப்பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி : நகராட்சி அதிகாரிகள் தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் குடிநீர் குழாய்களில் வால்வு பொறுத்தி, பழைய மற்றும் புதிய குடிநீர் குழாய்களை இணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.பொள்ளாச்சி நகராட்சிக்கு பழைய குடிநீர் திட்டம் மற்றும் முதல், இரண்டாம் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அனைத்து குடிநீர் திட்டத்தின் மூலமும் மார்க்கெட் ரோடு பூஸ்டர் ஹவுஸ்க்கு தண்ணீர் வந்ததும், அந்தந்த பகுதியில் உள்ள மேல்நிலைத்தொட்டிக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.தற்போது, 7.75 கோடி ரூபாயில் குடிநீர் திட்டம் விஸ்தரிப்பு செய்யும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கடைவீதியில் நேற்று பழைய மற்றும் புதிய குடிநீர் குழாய்களை இணைக்க வால்வு பொறுத்தும் பணி நடந்தது. ஜேசிபி வாகனம் மூலம் வால்வு பொறுத்தும் இடத்தில் குழி தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாயில் இருந்த தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.வெயில் சுட்டெரிக்கும் போது ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். சுமார் 30 நிமிடம் தண்ணீர் வெளியேறிய பிறகு, குடிநீர் குழாய்களை இணைத்து வால்வு பொறுத்தும் பணி துவங்கியது.நகராட்சி பொறியாளர் மனோகரன் கூறியதாவது:பொள்ளாச்சியில் குடிநீர் திட்டத்தில் நீர் குழாய்களுக்கு வால்வு பொறுத்தும் பணிகள் நடக்கிறது. மொத்தம் 45 இடங்களில் வால்வு பொறுத்த வேண்டும். தற்போது 20 இடங்களில் வால்வு பொறுத்தப்பட்டுள்ளது.

இன்னும், 25 இடங்களில் வால்வு அமைத்ததும் குடிநீர் வினியோகம் துவங்கப்படும்.ஜோதிநகர் சுற்றுப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் சீராக இல்லை. அதனால், கடைவீதியின் பிரதான குழாயில் வால்வு பொறுத்தி ஜோதிநகர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடைவீதியில் சந்திரம் ரோடு இணைப்பில் வால்வு பொறுத்திய போது குழாயில் தேங்கியிருந்த தண்ணீர் வெளியேறியது.திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 7.75 கோடி ரூபாயில், இதுவரை ஐந்து கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வால்வு பொறுத்தும் பணிகள் முடிந்ததும், மே மாதம் முதல் குடிநீர் வினியோகம் துவங்கப்படும். இவ்வாறு, நகராட்சி பொறியாளர் தெரிவித்தார்.

Last Updated on Friday, 19 March 2010 06:18
 

குடிநீர்ப் பற்றாக்குறை பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி 18.03.2010

குடிநீர்ப் பற்றாக்குறை பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்

கோவை, மார்ச் 17: குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று, கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை விடுத்த செய்தி:

÷கோவை மாநகராட்சி பகுதிகளில் எதிர்வரும் கோடைக்காலத்தில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான புதன்கிழமை ஆலோசிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

÷மின்தடை, குழாய் உடைப்பு, குடிநீர்க் கசிவு உள்பட பல்வேறு பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்யவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சிறுவாணி அணையில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

÷பில்லூர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் மேயர்.

Last Updated on Thursday, 18 March 2010 11:32
 

மார்ச் 22 முதல் இரு தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி 18.03.2010

மார்ச் 22 முதல் இரு தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்

மதுரை, மார்ச் 17: மழை அளவு குறைவு மற்றும் கோடை காலத்தையொட்டி மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மார்ச் 22 முதல் இரு தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என, மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்துக்கான நீர், பெரியாறு மற்றும் வைகை அணையிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. தற்சமயம் கோடை காலமாக உள்ளதாலும், இந்த ஆண்டு மழை அளவு குறைந்துள்ளதாலும் பொதுப்பணித் துறை சார்பில் 12.3.2010-ல் மாநகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. நாள்தோறும் தற்போது எடுக்கும் 69 மில்லியன் கன அடி நீரை 30 மில்லியன் கன அடியாகக் குறைத்து எடுக்குமாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளது.

எனவே, நிர்வாக நலன் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, இதுவரை தினந்தோறும் வழங்கப்பட்டு வந்த குடிநீர், வரும் 22}ம் தேதி முதல் ஒரு நாள் விட்டு ஒருநாள் விநியோகிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால், தங்களுக்கு ஏற்படும் அசெüகரியத்தை பொருள்படுத்தாமல் மாநகராட்சிக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Last Updated on Thursday, 18 March 2010 11:30
 


Page 286 of 390