Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பழனியில் 3 நாளுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி 17.03.2010

பழனியில் 3 நாளுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

பழனி, மார்ச் 16: பழனி நகரில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்து தெரிவித்துள்ளதாவது: பழனிக்கு குடிநீர் வழங்கும் கோடைகால நீர்த்தேக்கம் மற்றும் பாலாறு அணையில் குடிநீர் இருப்பு தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது.

இந்த காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழனி நகருக்கு வரும் 17-ம் தேதி முதல் 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 17 March 2010 10:34
 

கோபியில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Print PDF

தினமணி 17.03.2010

கோபியில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோபி, மார்ச் 16: கோபி நகராட்சிப் பகுதியில் ஒரு வாரத்திற்கு குடிநீர் சப்ளை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

÷கோபி நகராட்சிப் பகுதியில் ரூ.4.69 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது கோபி பார்க் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் நிலத்தடி குடிநீர் குழாய்கள், பகிர்மானக் குழாய்கள் பதிக்கும் பணிகள் மார்ச் 17-ம் தேதி முதல் துவங்குகிறது.

÷எனவே, பார்க் தொட்டியின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு மார்ச் 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். மேலும், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டப் பகுதிகளுக்கு கோபி நகராட்சி மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

÷எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை கோபி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

 

3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை

Print PDF

தினமலர் 17.03.2010

3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை

பழநி : பழநி நகராட்சி பகுதியில் இதுவரை ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. நீர் ஆதாரங்களான கோடை கால நீர்த்தேக்கம், பாலாறு பொருந்தலாறு அணையில் நீர்மட்டம் குறைந்துவிட் டது. இதையடுத்து நாளை முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட உள்ளதாக கமிஷனர் (பொறுப்பு) சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

 

Last Updated on Wednesday, 17 March 2010 06:50
 


Page 289 of 390