Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

முழு வீச்சில் காவிரி குடிநீர் திட்டம் : புதிய இணைப்புகள் தயார்

Print PDF

தினமலர் 15.03.2010

முழு வீச்சில் காவிரி குடிநீர் திட்டம் : புதிய இணைப்புகள் தயார்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் பேரூராட்சியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு காவிரி குடிநீருக்காக ஆறு மேல்நிலை தொட்டிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், இங்கு 10 லட்சம் லிட்டர் அளவுள்ள மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டது. இதில் பழுது ஏற்பட்டதால், ஐந்து லட்சம் லிட்டர் மட்டுமே நீர் நிரப்பப்பட்டது. தற்போது பழுது நீக்கப்பட்டு, முழுமையாக நீர் நிரப்பப்படுகிறது. தம்பிபட்டி, தென்மாப்பட்டு, புதுப்பட்டி, கணேஷ்நகர், காளியம்மன் கோயில், அச்சுக்கட்டு பகுதிகளில் சிறிய மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டிருந்தன. இவை செயல்படாமல் இருந்தன. தற்போது அவற்றுக்கு தரைமட்ட தொட்டியில் இருந்து நீர் ஏற்றப்படுகிறது. தினமும் 13 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டிகளில் நிரப்பப்படுகிறது. இதனால், கடந்த பல ஆண்டுகளாக நிலவிய குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

பேரூராட்சியினர் கவனத்திற்கு: புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க பேரூராட்சியினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான மனுக்கள் பெறப்படுகின்றன. பணிகளை விரைவுபடுத்தி, இணைப்புகளை உடனடியாக வழங்க வேண்டும். இதற்கு போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். பழைய இணைப்புகளை இதுவரை முறைப்படுத்தவில்லை. பல இணைப்புகள் கணக்கில் வரவில்லை. வீடு, வணிக பயன்பாடு என இணைப்புகள் பிரிக்கப்படவில்லை. இவற்றில் பேரூராட்சியினர் கவனம் செலுத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் பெரும் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

Last Updated on Monday, 15 March 2010 07:15
 

ராமநாதபுரத்தில் கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நகராட்சி ரெடி பாதாள சாக்கடை திட்டமும் ஜரூர்

Print PDF

தினமலர் 12.03.2010

ராமநாதபுரத்தில் கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நகராட்சி ரெடி பாதாள சாக்கடை திட்டமும் ஜரூர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கோடை கால குடிநீர் தட்டப்பாட்டை தவிர்க்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துவிட்டதால் மே இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் நகராட்சிக்கு மட்டும் தினம் 32 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்வதில் குழாய்களில் ஏற்பட்ட பிரச்னைகளால் தடங்கள் ஏற்பட்டது. இதை சரிசெய்யும் பணி விரைவாக நடந்து வருகிறது. கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் முஜ்புர்ரஹ்மான் கூறியதாவது: குடிநீர் வினியோகத்தில் குழாய்களால் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்யவும்,புதிய குழாய்கள் அமைக்கவும் 1.61 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன. ஏற்கனவே தினமும் 32 லட்சம் லிட்டர் குடிநீர் ,மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப் பட்டு வினியோகம் செய் யப்படுகிறது. குழாய்கள் பிரச்னை உள்ள பகுதிகளில், குழாய் பதிக்கும் பணி முடிந்தபின் ,நகராட்சியில் குடிநீர் தன்னிறைவாக கிடைக்கும். மேலும் ,கோடை காலத்தில் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில், குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம். தற்போது, வீட்டு குடிநீர் இணைப்பு கேட்டவுடன் வழங்கப்படுகிறது.

5000
ரூபாய் டிப்பாசிட் மற்றும் சென்டேஜ் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் உடனடியாக இணைப்பு கொடுக் கப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 95 சதவீதம் முடிந்து மே மாதம்இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். பாதாள சாக்கடை திட்ட டிப்பாசிட் தொகையை மக்கள் முன்வந்து செலுத்த வேண்டும். ஒரு பகுதியில் வசிப்பவர் எண்ணிக்கையில் ஐம்பது சதவீதத்தினர் டிப்பாசிட் செலுத்திவிட்டால் அப்பகுதிக்கு உடனடியாக ரோடு வசதி செய்து தரப்படும், என்றார்.

Last Updated on Friday, 12 March 2010 06:46
 

‌பெரியô‌ற்றிலிரு‌ந்து குடிநீரு‌க்கôக மô‌ற்று‌ப் பô‌தை அ‌மை‌க்கு‌ம் பணி தீவிர‌ம்

Print PDF

தினமணி 11.03.2010

‌பெரியôற்றிலிரு‌ந்து குடிநீரு‌க்கôக மôற்று‌ப் பôதை அ‌மை‌க்கு‌ம் பணி தீவிர‌ம்

கம்பம், மார்ச் 10: தேனி மாவட்டத்தில் பெரியாற்றிலிருந்து குடிநீருக்காக மாற்றுப் பாதை அமைக்கும் பணியில் கூடலூர் நகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கம்பம், கூடலூர் நகராட்சிகளுக்கும், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, தேவாரம், உத்தமபாளையம், பண்ணைபுரம் ஆகிய பேரூராட்சிகள் உள்பட ஏராளமான ஊராட்சிகளுக்கும் லோயர் கேம்ப் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது.

பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரும் பகுதியான லோயர்கேம்பில் குடிநீர் வாரியத்தின் கீழ் தனித் தொட்டிகள் அமைத்து தண்ணீரை சுத்தப்படுத்தி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரியாறு அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் குடிநீருக்காக விநாடிக்கு 20 கன அடி தண்ணீர் மட்டும் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் குடிநீர் வாரிய சுத்திகரிப்புத் தொட்டிகளில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து லோயர் கேம்பில் பெரியாற்றை மறைத்து ஜே.சி.பி. இயந்திரத்தைக் கொண்டு கரை அமைத்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு நீரை மாற்றி விடும் பணியில் கூடலூர் நகராட்சித் தலைவர் ஜெயசுதா செல்வேந்திரன் தலைமையில், நகராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Last Updated on Thursday, 11 March 2010 09:26
 


Page 290 of 390