Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

வேலூர் மாநகருக்கு 2 நாட்கள் குடிநீர் 'கட்'

Print PDF

தினமலர் 10.03.2010

வேலூர் மாநகருக்கு 2 நாட்கள் குடிநீர் 'கட்'

வேலூர்:மேல்விஷாரத்தில் பொன்னை யாற்று குடிநீர் மெயின் பைப் உடைந்ததால், இரண்டு நாட்கள் வேலூருக்கு குடிநீர் சப்ளை கிடையாது என மாநகராட்சி அறிவித்துள்ளது.வேலூருக்கு குடிநீர், பாலாறு மற்றும் பொன்னை ஆற்றுப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக சப்ளை செய்யப்படுகிறது. இதில் பொன்னை ஆற்றிலிருந்து குடிநீர் வரும் மெயின் பைப், மேல்விஷாரம் அருகே நேற்று மாலை உடைந்து விட்டது. இதனால் வேலூருக்கு இன்னும் இரு நாட்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி பொறியாளர் தேவக்குமார் கூறுகையில், உடைந்த பைப் லைன் சரிசெய்ய இரு நாட்களாகும். எனவே பொதுமக்கள், குடிநீரை வீணாக செலவழிக்காமல், சிக்கனமாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமென கூறினார்.

Last Updated on Wednesday, 10 March 2010 06:51
 

பில்லூர் குடிநீர் திட்டத்துக்கு நிலம் தர அங்கீகாரம்

Print PDF

தினமலர் 09.03.2010

பில்லூர் குடிநீர் திட்டத்துக்கு நிலம் தர அங்கீகாரம்

காரமடை : பில்லூர் 2ம் குடிநீர் திட்டத்திற்காக 1.85 ஹெக்டேர் நிலத்தை கோவை மாவட்ட வனத்துறை, கோவை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அங்கீகாரம் வழங்கியது.கோவை மாநகராட்சி சார்பில் பில்லூர் 2ம் குடிநீர் திட்டத்தில் நீர் சுத்தீகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் காரமடை அருகே வெள்ளியங்காட்டில் நடந்து வருகிறது. நீர் உறிஞ்சும் கிணறு பில்லூர் டேம் நீர் தேக்கத்தில் கெம்மாரம்பாளையம் ஊராட்சி நெல்லிமரத்தூர் மலைகிராமத்தில் 1.85 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது.

வனத்துறைக்கு சொந்தமான இந்த நிலத்தில், 11 குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலத்தை கையகப்படுத்தி, கோவை மாநகராட்சியிடம் ஒப்படைக்க சிறப்பு கிராம சபா கூட்டம் கெம்மாரம்பாளையம் ஊராட்சி தலைவர் வெள்ளிங்கிரி தலைமையில் நெல்லிமரத்தூரில் நடந்தது. கூட்டத்தில் நெல்லிமரத்தூர் ஒதுக்கக்காடுகள் பகுதியில் 1.85ஹெக்டேர் நிலத்தை கோவை வனத்துறை, கோவை மாநகராட்சிக்கு பரிவர்த்தனை அடிப்படையில் உரிமை மாற்றம் செய்ய அங்கீகரிக்கப்பட்டது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்து வந்த 11 பேருக்கு கல்வி அடிப்படையில், கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன், கோவை மாநகராட்சி அலுவலர்கள், வனத்துறை, மின்சார வாரிய அதிகாரிகள், கெம்மாரம்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் செல்வன், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 09 March 2010 06:41
 

மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை போக்க ரூ.200 கோடியில் திட்டம்

Print PDF

தினமலர் 06.03.2010

மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை போக்க ரூ.200 கோடியில் திட்டம்

ராஜபாளையம் : மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், சீரான குடிநீர் வழங்கும் வகையில், 200 கோடி ரூபாயில் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். ராஜபாளையத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிஜி தாமஸ், கணேசன் டி.ஆர்.ஓ., முன்னிலை வகித்தனர். கலெக்டர் சிஜி தாமஸ் பேசுகையில், ""மாவட்டத் தில் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. வறட்சியை சமாளிக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது. வைகை, தாமிரபரணியிலிருந்து தண்ணீர் பெறுவதுடன், வேறு சில திட்டங்களையும் கொண்டு வர உள்ளோம். மாவட்டத்தை பசுமையாக மாற்ற வரும் ஜூன் 5ம் தேதி, 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் மரக்கன்றுகளை மக்கள் ஒத்துழைப்புடன் நட்டு வளர்க்க திட்டமிடப்பட் டுள்ளது'' என்றார்.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:குடிசைகளே இல்லாத வகையில் அனைத்து வீடுகளையும் கான்கிரீட்டாக மாற்ற 1,800 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்திற்கு அதிக நிதி பெற, முயற்சி செய்து வருகிறேன். இந்த மாவட் டத்தில் நடப்பாண்டில் 10 ஆயிரம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க இலக்கு நிர்ணயித்துள் ளோம். தாமிரபரணியிலிருந்து மாவட்டத் தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் சப்ளை செய்வதற்கு 200 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

ராஜபாளையம் நகராட்சி துணைத் தலைவர் சுப்பராஜா, ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் இந்திரா, அருப்புக் கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பராஜ் கலந்து கொண்டனர். "கோரிக்கை நிறைவேறுகிறதோ இல்லையோ, வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவிற்காவது பணம் கிடைத்ததே' என மனுதாரர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

இன்ப அதிர்ச்சி : மதியம் 2.30 மணிக்கு கூட்டம் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பலர், முற்பகலிலேயே மண்டபத்திற்கு வந்து காத்திருந்தனர். ஆனால், மாலை 5 மணிக்கு தான் கூட்டம் துவங்கியது. இதனால் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மக்கள் விரக்தியடைந்திருந்தனர். இந்நிலையில், இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அனைவருக்கும் தலா 50 ரூபாய் வழங்கப் பட்டது.

Last Updated on Saturday, 06 March 2010 10:16
 


Page 292 of 390