Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

5 இடங்களில் ஆழ்துளை கிணறு: பேரூராட்சி முடிவு

Print PDF

தினமலர் 03.03.2010

5 இடங்களில் ஆழ்துளை கிணறு: பேரூராட்சி முடிவு

ஸ்ரீபெரும்புதூர் :ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் செல்வமேரி அருள்ராஜ் தலைமையில், கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. துணைத் தலைவர் மதன் ராஜ் முன்னிலை வகித் தார்.பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 15 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் பிரச்னையை சமாளிக்க 19 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய மன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.பேரூராட்சிக்குட்பட்ட குடிநீர் குளமான இளநீர் குளத்தை புராதன நகர மேம்பாடு திட்டத்தின் கீழ் சீரமைப்பது, குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து நடைபாதை அமைக்க 19 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்குவது, சிவன்தாங்கல் குளக்கரை, திருமங்கையாழ்வார் குளக்கரை, வீராசாமிபிள்ளை ஏரிக்கரை, இளநீர் குளக்கரை மற்றும் பட்டுநூல் சத்திரம் பகுதியில் தலா, நான்கு லட்சத்து 85 ஆயிரம் செலவில் காரிய மேடை அமைப்பது என்பது உட்பட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கவுன்சிலர் வரதன் நன்றி கூறினார

Last Updated on Wednesday, 03 March 2010 06:54
 

கோடை எதிரொலி: குடிநீர்ப் பிரச்னை மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த ஆட்சியர் உத்தரவு

Print PDF

தினமணி 02.03.2010

கோடை எதிரொலி: குடிநீர்ப் பிரச்னை மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த ஆட்சியர் உத்தரவு

நாமக்கல், மார்ச் 1:கோடை காலம் என்பதால் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக வழங்கப்படும் மனுக்கள் மீது அந்தந்த அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. இக் கூட்டத்துக்கு ஆட்சியர் சகாயம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கி. சாந்தி முன்னிலை வகித்தார். பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 339 மனுக்கள் பெறப்பட்டன. பெரும்பாலானவை முதியோர் உதவித் தொகை, ஆதரவற்றோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை, போக்குவரத்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, கல்வி கடன் கோரி வந்திருந்தன.

இந்த மனுக்கள் அனைத்தும் அந்தந்த துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து 15 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என ஆட்சியர் சகாயம் அறிவுறுத்தினார். மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தையும் மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும். புதிய குடும்ப அட்டை கோரிய மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து உடனடியாக குடும்ப அட்டை வழங்க வேண்டும். குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக மனுக்கள் வரப்பெறறால் அவற்றின் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் சகாயம் உத்தரவிட்டார்.

இக் கூட்டத்தில், மனம் திருந்தி வாழும் மதுவிலக்கு குற்றவாளிகளின் மறுவாழ்வு உதவியாக 8 நபர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டது.

11 நபர்களுக்கு இலவச தையல் எந்திரம், ஊனமுற்ற மாணவர்கள் 2 பேருக்கு தலா ரூ. 3 ஆயிரம் கல்வி உதவித் தொகை, மற்றொரு நபருககு மோட்டார் பொருத்திய 3 சக்கர சைக்கிள், காதுகேளாத இருவருக்கு காதொளி கருவியும் இலவசமாக வழங்கப்பட்டது.

Last Updated on Tuesday, 02 March 2010 10:03
 

குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க திட்டங்கள்... தயார்:ரூ.7.74 கோடியில் செயல்படுத்த முடிவு

Print PDF

தினமலர் 01.03.2010

குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க திட்டங்கள்... தயார்:ரூ.7.74 கோடியில் செயல்படுத்த முடிவு

தேனி:தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, ரூ.7.74 கோடியில் புதிதாக குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தேனி மாவட்டத்தில் காலனி மற்றும் விரிவாக்க பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பேரூராட்சிகளில் ரூ.6 கோடியே 48 லட்சத்து 40 ஆயிரத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தேனி ஒன்றியத்திலுள்ள கோட்டூர் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.1.81 லட்சத்திலும், தப்புக்குண்டு ஆதிதிராவிடர் காலனியில் ரூ.3.64 லட்சத்திலும், கொடுவிலார்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.7.85 லட்சத்திலும் தனி மின்விசைத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன.

பெரியகுளம் ஒன்றியத்தில், டி.வாடிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.5.75 லட்சத்திலும், எருமலைநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.2.27 லட்சத்திலும், வடபுதுப்பட்டி ராதாகிருஷ்ணன் நகரில் ரூ.5.07 லட்சம், வடபுதுப்பட்டி எம்.ஜி.ஆர்.,நகரில் ரூ.6.82 லட்சம், ஜல்லிபட்டி மீனாட்சிபுரம் காலனியில் ரூ.5.60 லட்சத்திலும் தனி மின்விசைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. சின்னமனூர் ஒன்றியத்தில், முத்துலாபுரம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.2.19 லட்சத்திலும், முத்துலாபுரம் எம். பெருமாள்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.2 லட்சத்திலும், கன்னிசேர்வைபட்டி கிழக்கு காலனியில் ரூ.3.32 லட்சத்திலும், உத்தமபாளையம் ஒன்றியத்தில் கோகிலாபுரம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.2.49 லட்சத்திலும், மேலசிந்தலைச்சேரி காலனியில் ரூ.3.07 லட்சத்திலும், லட்சுமி நாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.5.99 லட்சத்திலும் மின்விசைத்திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கம்பம் ஒன்றியத்தில் குள்ளப்பகவுண்டன்பட்டி தெற்கு மற்றும் வடக்கு காலனிகளில் ரூ.8.94 லட்சம் செலவிலும், ஆங்கூர்பாளையம் திருவள்ளுவர்பட்டி காலனியில் ரூ.8.91 லட்சத்திலும், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பிச்சம்பட்டி நாகேந்திரபுரத்தில் ரூ.4.52 லட்சம், மொட்டனூத்து முத்துசங்கிலிப்பட்டியில் ரூ.4.31 லட்சம், குன்னூர் தெற்கு காலனியில் ரூ.6.17 லட்சம் செலவில் மின்விசைத்திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடமலை ஒன்றியத்தில் தும்மக் குண்டு தண்டையார்குளம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.79 ஆயிரத்திலும், கடமலைக்குண்டு கரட்டுபட்டி தெற்கு காலனியில் ரூ.3.16 லட்சத்திலும், மேலப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.2.84 லட்சத்திலும், மந்திச் சுனையின் ரூ.4.75 லட்சத்திலும், பழியர் குடியிருப்பில் ரூ.3.50 லட்சத்திலும், கடமலை-பூமலைக் குண்டு ஆதிதிராவிடர் காலனியில் ரூ.7.68 லட்சத்திலும், பாலூத்து புதிய காலனியில் ரூ.7 லட்சத்திலும் தனிமின்விசை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 01 March 2010 06:51
 


Page 295 of 390