Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பெரியகுளத்தில் குடிநீர் சப்ளைக்கு ஜெனரேட்டர் தேவை

Print PDF

தினமலர் 25.02.2010

பெரியகுளத்தில் குடிநீர் சப்ளைக்கு ஜெனரேட்டர் தேவை

பெரியகுளம் : பெரியகுளம் குழாய்தொட்டி பகுதியில், மின்தடை காலங்களில் குடிநீர் சேகரிப்புக்கு, ஜெனரேட்டர் வாங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல் வனத்துறைக்கு உட்பட்ட பேரிஜம்ஏரியிலிருந்து பெரியகுளம் நகராட்சி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அங்கிருந்து வரும் நீர் சோத்துப்பாறை அணைவழியாக குழாய்தொட்டியில் சேகரமாகிறது. இங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் மின் மோட்டார் மூலம் தென்கரை, வடகரை பகுதிகளிலில் உள்ள தலா 10 லட்சம் கொள்ளளவு உடைய தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. மின்தடை ஏற்படும் காலங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்படைகிறது. இதை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் அதிக திறன் கொண்ட ஜெனரேட்டர் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும்.

 

Last Updated on Thursday, 25 February 2010 07:00
 

சேலம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

Print PDF

தினமலர் 25.02.2010

சேலம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நேற்று சீரான குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான லோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்திரகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், சேலம் மாநகராட்சி, ஆத்தூர் உள்ளிட்ட நகராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகள், ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் எந்தெந்த பகுதியில் சீராக உள்ளது, எந்த பகுதியில் பிரச்னைகள் உள்ளது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கலெக்டர் சந்திரகுமார் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் 13 ஒன்றிய பகுதிகளுக்கு வழங்கப்படும் கூட்டு குடிநீர் திட்டத்தில் மோட்டார்களை 24 மணி நேரமும் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உடனடியாக எடுத்து நான்கு அல்லது ஐந்து நாட்களில் 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் கூடுதல் குடிநீர் பம்ப் செய்யப்படுவதால், கிராமப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க முடியும். சேலம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் லாரிகள் மற்றும் டிராக்டர் மூலம் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுமதியின்றி போடப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டாலோ, மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினாலோ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் தற்போதுள்ள ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்க வேண்டும்.

Last Updated on Thursday, 25 February 2010 06:51
 

குடிநீரில் ப்ளோரைடு பாதிப்பால் நோய் அதிகரிப்பு: அமைச்சர் தகவல்

Print PDF

தினமலர் 24.02.2010

குடிநீரில் ப்ளோரைடு பாதிப்பால் நோய் அதிகரிப்பு: அமைச்சர் தகவல்

கிருஷ்ணகிரி: ""தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீரில் ப்ளோரைடு பாதிப்பால் அதிக நோய் தாக்கி வருகிறது, '' என, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் காப்பீடு திட்ட மண்டல ஆய்வு கூட்டம் நடந்தது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசியதாவது: உயிர் காக்கும் உயர் சிகிச்சை காப்பீடு திட்டத்துக்கு மாவட்ட கலெக்டர்கள் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். ஏழை, எளிய மக்களை திட்டம் குறித்த தகவல்கள் சென்றடைய சுகாதார துறை இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் மற்றும் பணியாளர்கள் திறமையாக பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள 5, 536 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பான மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 32 லட்சம் மக்கள் பயன் பெற்றுள்ளனர். இருதயம், சிறுநீரகம், எலும்பு மற்றும் மூளை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க முடியாத நிலையில், அவர்களுக்கு உயர் சிகிச்சை காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற பரிந்துரை செய்யலாம். காப்பீடு திட்டத்தில் இது வரை 41,920 பேருக்கு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இதற்காக, 135 கோடியே 53 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதில் கோவை மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் இரண்டாம் இடத்திலும், திணடுக்கல் மாவட்டம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி 44 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்து, அடையாள அட்டைகள் பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 500 குடும்பங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 945 குடும்பங்களும், சேலம் மாவட்டத்தில் 7 லட்சத்து 31 ஆயிரத்து 645 குடும்பங்களும் பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 595 குடும்பங்களும், வேலூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 418 குடும்பங்களும் பதிவு செய்துள்ளனர். காப்பீடு திட்ட பயனாளிகளை பதிவு செய்வதில், வேலூர் மாவட்டம் 113 சதமும், சேலம் மாவட்டம் 109, கிருஷ்ணகிரி மாவட்டம் 108, தர்மபுரி மாவட்டம் 70, திருவண்ணாமலை மாவட்டம் 68 சதம் பணிகள் முடித்துள்ளனர். காப்பீடு திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 2,545 பேர் 9 கோடியே 34 லட்சத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரத்து 144 பேர் 5 கோடியே 13 லட்சத்திலும், வேலூர் மாவட்டத்தில் 931 பேர் 4 கோடியே 64 லட்சத்திலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 685 பேர் இரண்டு கோடியே 90 லட்சத்திலும், தர்மபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 96 பேர் 4 கோடியே 48 லட்சத்திலும் பயன் பெற்றுள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குடிநீரில் ப்ளோரைடு பாதிப்பால் கை, கால் வளைந்தும், மூடடு வலி, பல் வியாதிகள் அதிகளவில் வருகிறது. இதற்காக சுத்தமான குடிநீர் வழங்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Last Updated on Wednesday, 24 February 2010 07:19
 


Page 296 of 390