Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட முதல் கட்டப் பணிகள் தொடக்கம்

Print PDF

தினமணி 22.02.2010

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட முதல் கட்டப் பணிகள் தொடக்கம்

தருமபுரி, பிப். 21: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 5 கட்டப் பணிகளில் தற்போது முதல் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையொட்டி பென்னாகரம் அருகேயுள்ள மடம் பகுதியில் தரைமட்ட நீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 6,755 குடியிருப்புகளைச் சேர்ந்த 31.43 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,928.80 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் முதல் கட்டப் பணிகள் கடந்த மாதம் டெண்டர் விடப்பட்டு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி காவிரி ஆற்றுப் படுகையில் 160 மில்லியன் லிட்டர் நீர் உறிஞ்சும் வகையில் கிணறு மற்றும் மோட்டார்கள் அமைக்கும் வகையில் கான்கிரீட் தளங்கள் அமைப்பதற்காக காவிரி ஆற்று நீரின் ஒரு பகுதியை மாற்றுதிசைக்கு திருப்பும் பணி நடந்துவருகிறது. மேலும் மடம் பகுதியில் 240 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத நீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்காக குழி தோண்டும் பணியும் நடந்துவருகிறது.

 

குடிநீர் குழாய் அடிக்கடி பழுது: பேரூராட்சி தலைவர் புகார் : நடவடிக்கை எடுக்க கலெக்டர் உறுதி

Print PDF

தினமலர் 22.02.2010

குடிநீர் குழாய் அடிக்கடி பழுது: பேரூராட்சி தலைவர் புகார் : நடவடிக்கை எடுக்க கலெக்டர் உறுதி

கிணத்துக்கடவு : குடிநீர் திட்ட குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் நெகமம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக இப்பேரூராட்சியினர் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, நடவடிக்கை எடுக்க கோவை கலெக்டருக்கும் மனு அளித்துள்ளனர்.

நெகமம் பேரூராட்சி தலைவர் சபரிகார்த்திகேயன் தலைமையில் கவுன்சிலர்கள் கோவை கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு : நெகமம் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரிய நெகமம், காளியப்பம்பாளையம், சின்னேரிபாளையம், ரங்கம்புதூர் போன்ற கிராமங்களும் சேர்ந்துள்ளது. சூளேஸ்வரன் பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம், குடிநீர் வடிகால் வாரியம் தினமும் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கி வந்தது.

இந்த தண்ணீரை 30 பிரிவுகளாக பிரித்து வாரம் ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டது. சில மாதங்களாக பொள்ளாச்சியில் இருந்து நெகமம் செல்லும் ரோடு அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் செய்தனர். அப்போது, நெடுஞ்சாலைத்துறையினர் குழிதோண்டும் போது, பல இடங்களில் குடிநீர் குழாய் மெயின் பைப்களில் உடைப்பு ஏற்பட்டது. நெகமம் பேரூராட்சிக்கு தினமும் ஒன்றரை லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் போர்வெல்லை பயன்படுத்தி தண்ணீர் எடுத்து வருகின்றனர்.தற்போது, கோடை காலம் துவங்கியதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. நெகமம் பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனுவை பெற்ற கலெக்டர், உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு, மூன்று லட்சம் செலவில் புதிய போர்வெல்களை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார். சூளேஸ்வரன்பட்டி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய்களை மாற்றி புதிய குழாய் அமைக்க வரைவு திட்டம் தயார் செய்ய பட்டு உடனடியாக நிறைவேற்ற உறுதியளித் திருப்பதாக பேரூராட்சி தலைவர் தெரிவித்தார்.

Last Updated on Monday, 22 February 2010 06:15
 

குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் : தஞ்சை நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமலர் 21.02.2010

குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் : தஞ்சை நகராட்சி எச்சரிக்கை

தஞ்சாவூர்: நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறி யிருப்பதாவது:தஞ்சை நகராட்சிக்கு நீண்டகாலமாக குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று நகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளை கண்டறிய நகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழுவினர் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மானோஜியப்பா வீதியில் நீண்டகாலமாக குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 


Page 297 of 390