Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கொளத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு விஸ்வரூபம்: நீர் உறிஞ்சும் மோட்டாரை அகற்ற 15 நாள் கெடு

Print PDF

தினமலர் 18.02.2010

கொளத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு விஸ்வரூபம்: நீர் உறிஞ்சும் மோட்டாரை அகற்ற 15 நாள் கெடு

மேட்டூர்: கொளத்தூர் டவுன்பஞ்., குடிநீர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளதை தொடர்ந்து, டவுன்பஞ்., செயல் அலுவலர், தலைவர், பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேட்டூர் தாலுகா, கொளத்தூர் டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டு உள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி மொத்தம் 10 ஆயிரத்து 250 பேர் வசிக்கின்றனர். தற்போது டவுன் பஞ்., 250 பொது குடிநீர் இணைப்புகள், 2 ஆயிரத்து 25 வீட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளது. காவிரியில் இருந்து தினமும் எட்டு லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொளத்தூருக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தவிர கொளத்தூர் இரட்டை கிணற்றில் இருந்து தினமும் 5 லட்சம் லிட்டருக்கு மேல் உப்பு நீரும் விநியோகம் செய்யப்படும். கொளத்தூர் டவுன்பஞ்., வீதிகள் மேடு, பள்ளமாக இருப்பதால் குடிநீர் 44 கேட் வால்வுகள் அமைத்து ஒவ்வொரு பகுதிக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 500க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சு எடுத்து விடுகின்றனர். அதனால், கொளத்தூரில் தற்போது வாரம் ஒருநாள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கோடை துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு கொளத்தூர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, நேற்று மாலை குடிநீர் விநியோகம் குறித்த ஆலோசனை கூட்டம் கொளத்தூர் சமுதாய கூடத்தில் நடந்தது. கூட்டத்தில் டவுன்பஞ்., தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மாதையன், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து காண்டனர். ஆலோசனை கூட்டத்தின் முடிவில், காவிரி குடிநீர் திட்டத்தில் இருந்து தினமும் கூடுதலாக 2 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்ய குடிநீர்வடிகால் வாரியத்திடம் கோரிக்கை வைப்பது, ஹார்ஸ் பவர் அதிகமுள்ள மோட்டார்களை வைத்து கூடுதல் குடிநீர் விநியோகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.


வீட்டு உரிமையாளர் பலர் தங்கள் வீடுகளில் குடிநீரை உறிஞ்சுவதற்காக வைத்துள்ள மின்மோட்டார்களை இருவாரத்தில் அகற்ற வேண்டும். இல்லையேல் டவுன்பஞ்., மூலம் மின்மோட்டார்கள் அனைத்தையும் பொதுமக்கள் ஆதரவோடு பறிமுதல் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

Last Updated on Thursday, 18 February 2010 07:09
 

மேல்நிலை தொட்டி, வடிகாலுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் பூமி பூஜை

Print PDF

தினமலர் 18.02.2010

மேல்நிலை தொட்டி, வடிகாலுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் பூமி பூஜை

பள்ளிபாளையம்: ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, வடிகால் கட்ட பூமி பூஜை நடந்தது. "பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 4வது காந்தி நகர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியும், 14வது வார்டில் வடிகாலும் அமைக்க வேண்டும்' என, கோரிக்கைவிடப்பட்டது.

தொடர்ந்து எம்.பி.,யிடம் இது குறித்து மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி னது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்தார். மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்க 2.40 லட்சம் ரூபாய், 14வது வார்டு காட்டுக்காரர் வீதியில் வடிகால் கட்ட 1.60 லட்சம் என மொத்தம் 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கான பூமி பூஜை விழா ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் நடந்தது. டவுன் பஞ்சாயத்து சேர்மன் யுவராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் கோவிந்தராஜூ வரவேற்றார். எம்.எல்.., தங்கமணி முன்னிலை வகித்தார். எம்.பி., கணேசமூர்த்தி பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை தலைவர் தனசேகரன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 18 February 2010 07:08
 

குடிநீர்க் குழாய் சீரமைப்பு

Print PDF

தினமணி 17.02.2010

குடிநீர்க் குழாய் சீரமைப்பு

உத்தரமேரூர், பிப். 16: உத்தரமேரூரில் குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாக்கடை கலந்த குடிநீர் வரத்து குறித்த செய்தி "வயிற்றுப்போக்கால் மக்கள் அவதி' என்ற தலைபறப்பில் செவ்வாய்க்கிழமை "தினமணி'யில் வெளியானது.

இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். சுண்ணாம்புக்காரத் தெரு. கைலாசநாதர் கோவில் தெரு, கேதாரீஸ்வரர் கோவில் தெருக்களில் குடிநீர் குழாய்களை சீரமைத்தனர். தெருக்களையும் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்கும்பொருட்டு கொசு ஒழிப்பு புகையும் அடிக்கப்பட்டது.

Last Updated on Wednesday, 17 February 2010 09:13
 


Page 299 of 390