Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஓரிரு நாளில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அதிகாரி தகவல்

Print PDF

தினத்தந்தி               14.08.2013

ஓரிரு நாளில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அதிகாரி தகவல்

 

 

 

 

 

 

சென்னை குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து ஓரிரு நாளில் குழாய் மூலம் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வீராணம் ஏரி

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. காவிரியில் வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடி திறந்துவிடப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது. உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வழியாக கடந்த 7–ந் தேதி கீழணை வந்து சேர்ந்தது. கீழணை நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீர் கொள்ளிடம் ஆற்றிலும், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கும் திறந்துவிடப்பட்டது.வீராணம் ஏரி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகில் உள்ளது. சென்னையில் இருந்து 235 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஏரி அமைந்திருக்கிறது. இங்கிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக குழாய் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரி வறண்டதால், கடந்த ஜனவரி மாதம் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

நீர்மட்டம் 43.80 அடி

இப்போது கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் கடந்த 7 நாட்களாக வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரி நீர்மட்டம் 43.80 அடி. இந்த ஏரியில் 47.50 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி. தற்போது 570 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.,வினாடிக்கு 2290 கனஅடி வந்து கொண்டிருந்தது. இதுபோல தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தால் ஒருவாரத்திற்குள் ஏரி நிரம்பிவிடும். வழக்கமாக இந்த ஏரியில் இருந்து பாசனத்திற்காக ஆவணி மாதம் தண்ணீர் திறக்கப்படும்.

சென்னைக்கு ஓரிரு நாளில் தண்ணீர் திறப்பு

வீராணம் ஏரியில் 42 அடி நீர் இருப்பு இருந்தாலே சென்னை குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பலாம். இப்போது 43 அடிக்கு மேல் தண்ணீர் இருக்கிறது. இருந்தாலும், சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் குழாய்களில் பராமரிப்பு பணி நடந்து கொண்டிருப்பதால் உடனடியாக தண்ணீர் அனுப்பப்படவில்லை.‘‘ஓரிரு நாளில் பராமரிப்பு பணி முடிவடைந்ததும், வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும்’’ என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.                   
 

குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை

Print PDF

தினகரன்            08.08.2013

குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் மக்களை தேடி மாநகராட்சி திட்டத்தின்கீழ் நேற்று 120 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் இந்த பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மல்லிகா பரமசிவம் தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மக்களை தேடி மாநகராட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டம் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நேற்று முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

மாநகராட்சி 11வது வார்டு அசோகபுரத்தில் நேற்று மக்களை தேடி மாநகராட்சி திட்டத்தில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கி பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவிதொகை, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 120 மனுக்கள் பெறப்பட்டது.

இதில் 100 மனுக்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஆழ்குழாய் பழுதடைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆழ்குழாய் கிணற்றை தூர்வாரவும் தண்ணீர் கிடைக்காவிட்டால் புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மல்லிகா பரமசிவம் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து மேயர் மல்லிகா பரமசிவம் கூறுகையில், 11வது வார்டு பகுதியில் 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தீரன் சின்னமலை வீதி, சுக்கிரமணியவலசு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. பொது நிதி மூலமாக நேதாஜி வீதி, வைராபாளையம்ரோடு ஆகிய பகுதிகளில் 4.25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் போர்வெல் அமைத்தல் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அசோகபுரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 4.90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம், கழிப்பிடங்கள் மராமத்து பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு பொது நிதியில் இருந்து லட்சுமிநகர் பகுதியில் புதியதாக ஆழ்குழாய் கிணறுகள் 3.50 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலும், விசாலாட்சி வேபிரிட்ஜ், கலைமகள் வீதி, லட்சுமிநகர் ஆகிய பகுதிகளில் மழைநீர்வடிகால் கட்டவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, ஆணையாளர் விஜயலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் ஆறுமுகம், வார்டு கவுன்சிலர் ஜெயராஜ்(எ)முனுசாமி, உதவி ஆணையர் சண்முகவடிவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் ரத்து

Print PDF

தினமணி           07.08.2013

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் ரத்து

சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும்  பகுதிகளில் ஆக.7, 8 தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

  ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில், திருச்சியில் உள்ள தலைமை நீரேற்று  நிலையம் மற்றும் ஒன்றாம் தொகுப்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நகராட்சிப் பகுதி, திருப்பத்தூர், காளையார்கோவில், கல்லல், இளையான்குடி, நெற்குப்பை ஆகிய ஊர்களில் ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 


Page 31 of 390