Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் தொட்டி பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர் 15.02.2010

குடிநீர் தொட்டி பணிகள் துவக்கம்

சங்கராபுரம்:சங்கராபுரத்தில் 64 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் திட்ட பணிகள் துவங்கியது.சங்கராபுரம் பகுதியில் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.பேரூராட்சி தலைவர் முனுசாமி கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி புதிதாக 3 கிணறு அமைத்து தரும்படி கேட்டிருந்தார். தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 65 லட் சம் ரூபாய் செலவில் சங் கராபுரம் ஏரிக் கரையில் 2 கிணறுகள், சமத்துவபுரம் நரிக்குறவர் காலனியில் ஒரு கிணறும், சங்கராபுரம் மேட்டுத் தெருவில் 2 லட்சம் லிட்டர் கொள் ளளவில் ஒரு மேல் நிலை நீர் தேக்க தொட்டி, நரிக் குறவர் காலனியில் ஒரு மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது.

சங்கராபுரம் ஏரிக்கரை அருகில் புதிய கிணறு தோண்டும் பணி துவங் கியது. பேருராட்சி தலைவர் முனுசாமி தலைமை தாங்கி பணிகளை துவக்கி வைத்தார். விழுப்புரம் குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் அமல்ராஜ், உதவி செயற்பொறியா ளர் ராஜேந்திரன், உதவிப் பொறியாளர் வடிவழகன், பேருராட்சி கவுன்சிலர்கள் தஸ்தகீர்,சேகர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 15 February 2010 06:41
 

நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில்கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

Print PDF

தினமலர் 15.02.2010

நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில்கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

திசையன்விளை:நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் சுனாமி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் ஆய்வு செய்தார்.நெல்லை மாவட்டத்தில் உள்ள 113 சுனாமி குடியிருப்பு பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கவதற்காக 26.68 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திட்டம் நிறைவேற்றப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. இத்திட்டத்தின்படி முழுமையான தண்ணீர் தங்கள் ஊர் வாட்டர் டேங்க்களுக்கு வருவதில்லை எனவும், குடிநீர் பைப்புகளில் உடைப்புகள் ஏற்படுவதாகவும் இப்பகுதி பஞ்., தலைவர்கள் மாவட்ட கலெக்டரிடமும், அப்பாவு எம்.எல்..,விடமும் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளான இடையன்குடி, விமனங்குடி, கூடுதாழை, டாடா குடியிருப்பு, கூட்டப்பனை, கரைச்சுத்து உவரி, உவரி மற்றும் ஊர்களில் உள்ள குடிநீர் டேங்க்குகள், சம்புகள் ஆகியவற்றை நெல்லை மாவட்ட கலெக்டர் ஜெயராமன், அப்பாவு எம்.எல்.., ஆகியோர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கடற்கரை கிராம மக்கள் தங்களது ஊர்களில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தினர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-""நெல்லை மாவட்டத்தில் உள்ள 113 சுனாமி குடியிருப்பு ஊர்களுக்கு பாதுகாக்கப்பட்ட தாமிரபரணி தண்ணீர் வழங்குவதற்காக கடந்த 2007ம் நவம்பர் மாதத்தில் தமிழக அரசு 26.68 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இப்பொழுது முடிவடையும் தருவாயில் உள்ளதாக இங்கு வருகை புரிந்துள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.நானும், அப்பாவு எம்.எல்..,வும் குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர் உட்பட அத்தனை அலுவலர்களும் காலை முதல் இந்த 113 குடியிருப்புகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதா? சென்றுள்ளதா? என்பதை பார்வையிட்டு வருகிறோம்.உவரியில் பார்வையிடும் போது இந்த பகுதிக்கு அந்த தண்ணீர் இன்னும் வந்து சேரவில்லை. அதற்கான நடவடிக்கை எடுத்துக் கொண்டிருகிறோம். மேலும் சில கிராமங்களில் மேடான பகுதிக்கு சம்ப் அமைத்தும் தண்ணீர் சென்றடையவில்லை. அதற்கான மீட்டரும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் தாமிரபரணி தண்ணீர் வரவில்லை என்று மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே அதனை முழுமையாக ஆய்வு செய்து அத்தனை கிராமங்களுக்கும் திட்ட மதிப்பீட்டின்படி தண்ணீர்வர நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறோம். மிகப்பெரிய மீனவ கிராமங்களான உவரி, இடிந்தகரை, கூந்தன்குழி ஆகிய பகுதிகளுக்கு தூண்டில் வளைவு வேண்டும் என்றும் அவ்வாறு அமைந்தால் தான் மீன்பிடி தொழிலை செய்ய முடியும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இன்று இங்கு வந்துள்ள மீன்வளத்துறை இணை இயக்குநர், உதவி செயற் பொறியாளர்கள், பொதுப்பணி துறையினர் ஆகியோரை அழைத்து ஆய்வு செய்து, திட்ட மதிப்பீடு தயார் செய்ய அறிவுரை வழங்கியுள்ளேன். அதன்பிறகு அரசுக்கு அனுப்பி முறையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.நிகழ்ச்சியில் உவரியில் கலெக்டர் ஆய்வு செய்தபோது பஞ்.,தலைவர் அந்தோணி, "எங்கள் ஊருக்கு சுனாமி கூட்டு குடிநீர் ஒரு சொட்டு கூட வரவில்லை' என புகார் கூறினார். இதனையடுத்து கலெக்டர் மற்றும் எம்.எல்.., அப்பாவு அங்கு சென்று பார்வையிட்டு அதிகாரிகளை கண்டித்தனர்.நிகழ்ச்சியில் ரைமண்ட், ராயர், ராய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 15 February 2010 06:38
 

கோவில்பட்டி 2-வது பைப் லைன் குடிநீர்த் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறும்

Print PDF

தினமணி 12.02.2010

கோவில்பட்டி 2-வது பைப் லைன் குடிநீர்த் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறும்

கோவில்பட்டி, பிப். 11: இந்த ஆண்டு இறுதிக்குள் கோவில்பட்டி நகர மக்களின் முக்கியத் தேவையான குடிநீருக்கான 2-வது பைப் லைன் திட்டம் நிறைவேறும் என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியதாக கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் (அதிமுக) ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து, கோவில்பட்டி எம்.எல்.. அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

கோவில்பட்டி தொகுதி பின்தங்கிய நிலையில் உள்ளது. தொழில் வளர்ச்சி, தண்ணீர் பிரச்னை மற்றும் சாலை வசதி உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் குறைவாக உள்ளது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், முதல்வரை சந்தித்து குறைகளை எடுத்துக் கூறுவதற்கு முன்னர், மத்திய அமைச்சர் அழகிரியை மதுரையில் அண்மையில் சந்தித்து மனு அளித்தேன்.

அந்த மனுவில் கோவில்பட்டி பகுதிக்கு தொழிற்சாலை வர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். இதை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் அழகிரி, தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைவதற்கு நடவடிக்கை எடுத்துவரும் இந்த சூழ்நிலையில், தங்கள் கோரிக்கைகளையும் முறையாக ஆய்வு செய்து குறைகளை நீக்குவேன் என்றார். மேலும், தொகுதி வளர்ச்சிப் பிரச்னை குறித்து முதல்வரிடம் கூறுமாறு அறிவுறுத்தினார்.

அதையடுத்து, முதல்வரை சந்தித்து கோவில்பட்டியில் நிலவும் குடிநீர் பிரச்னை, சாலை வசதி உள்ளிட்ட குறைகளை கூறினேன். தென் மாவட்டத்தில் கோவில்பட்டி பின்தங்கிய நிலையில் உள்ளது. குறிப்பாக, தீப்பெட்டித் தொழில் நசிவடைந்து வருகிறது. பஞ்சாலைத் தொழிலிலும் முன்னேற்றம் இல்லை. விவசாயிகளுக்கு மழைக் காலங்களை தவிர, மற்ற நேரங்களில் பணி கிடைக்க வேண்டும் என்றேன்.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி, கோவில்பட்டியில் தண்ணீர் பிரச்னை தீர்வதற்கு கலைமணி காசியின் பெரும் முயற்சியினால், 2 ஆண்டில் முடிவடைய வேண்டிய பணி ஓராண்டில் நிறைவு பெற்று, சுமார் 34 ஆண்டுகளாக குடிநீர் வழங்கி வருகிறோம்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள மக்கள் தொகை மற்றும் பைப் லைனின் முதிர்வு காலத்தினால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு கிடைக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

மேலும், உள்ளாட்சித் துறையின் கோரிக்கைகளை துணை முதல்வரிடம் எடுத்துரைக்குமாறு கூறியதையடுத்து, துணை முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்தேன். அப்போது கோவில்பட்டி மக்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றேன். உடனே அதிகாரிகளை அழைத்து, அந்த திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

அதற்கு, அதிகாரிகள், மத்திய அரசிடம் இதற்கான திட்டம் குறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும், அதில் சிறு தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள், துணை முதல்வரிடம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, இந்த ஆண்டு பட்ஜெட்டில் இதுகுறித்து அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், கோவில்பட்டியிலுள்ள ஓடைகள் தூர்வாரப்படாமல், மழைக் காலங்களில் ஓடைத் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து, சாலைகளை சேதப்படுத்துவது குறித்தும் கூறினேன் என்றார்.

முன்னதாக கோவில்பட்டி நகர திமுக செயலர் ராமர், ஒன்றியச் செயலர் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றியப் பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாறன், ராஜாராம், ஊராட்சித் தலைவர்கள் பச்சமால் (இனாம்மணியாச்சி), முருகன் (பாண்டவர்மங்கலம்), மாரீஸ்வரன் (மூப்பன்பட்டி) மற்றும் நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள், எம்.எல்.. ராதாகிருஷ்ணனை சந்தித்து சால்வை அணிவித்தனர்

Last Updated on Friday, 12 February 2010 11:48
 


Page 302 of 390