Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர்ப் பிரச்னை மனுக்கள் மீது தனி கவனம்

Print PDF

தினமணி 09.02.2010

குடிநீர்ப் பிரச்னை மனுக்கள் மீது தனி கவனம்

நாமக்கல், பிப். 8: குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக வழங்கப்படும் மனுக்கள் மீது அந்தந்த அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது.

இக் கூட்டத்துக்கு ஆட்சியர் சகாயம் தலைமை வகித்தார். தனித்துணை ஆட்சியர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 415 மனுக்கள் பெறப்பட்டன. பெரும்பாலானவை முதியோர் உதவித் தொகை, ஆதரவற்றோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை, போக்குவரத்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, கல்வி கடன் கோரி வந்திருந்தன. இந்த மனுக்கள் அனைத்தும் அந்தந்த துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து 15 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என ஆட்சியர் சகாயம் அறிவுறுத்தினார். மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தையும் மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

புதிய குடும்ப அட்டை கோரிய மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து உடனடியாக குடும்ப அட்டை வழங்க வேண்டும். குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக மனுக்கல் வரப்பெறறால் அவற்றின் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் சகாயம் உத்தரவிட்டார்.

இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தின் சார்பில் நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற கிரீன்பார்க் பள்ளி 5-ம் வகுப்பு மாணவி ஜனனிக்கு ரூ. 300-ம், 2-வது இடம் பெற்ற குமாரபாளையம் நேரு நினைவு சம்பூர்ணியம்மாள் உடல் ஊனமுற்றோர் பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் கௌரிசங்கருக்கு ரூ. 200-ம் பரிசாக வழங்கப்பட்டது.

Last Updated on Tuesday, 09 February 2010 07:08
 

நவம்பர் வரை குடிநீர் பிரச்னை இருக்காது

Print PDF

தினகரன் 08.02.2010

நவம்பர் வரை குடிநீர் பிரச்னை இருக்காது

சென்னை : சென்னையில் தண்டை யார்பேட்டை, வண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர், ஜார்ஜ்டவுன், பூங்காநகர், சேத்துப்பட்டு, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திரு வல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, பெசண்ட்நகர், திருவான் மியூர் ஆகிய பகுதிகள் மணற்பாங்கானவை.

கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, பெரம் பூர், வில்லிவாக்கம், கொளத் தூர், செம்பியம், பெரியார் நகர், அயனாவரம், கீழ்ப்பாக் கம், புரசைவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக் கம், தியாகராயர் நகர், சைதாப்பேட்டை, மாம் பலம், கே.கே.நகர் ஆகிய பகுதிகள் களிமண் தன்மை கொண்டவை.

கிண்டி, கோட்டூர்புரம், பரங்கிமலை, வேளச்சேரி, தரமணி ஆகிய பகுதிகள் கடினப்பாறைப் பகுதிகள்.
வடகிழக்குப் பருவகாலம் டிசம்பர் வரைதான் இந்த முறை மழை பெய்தது. ஜனவரியில் லேசாக மட் டுமே மழை பெய்தது.

பருவகாலத்துக்கு முன்பு, தரையிலிருந்து நீர்மட்ட ஆழம் மணற்பகுதியில் 5 மீட்டராகவும் களிமண் பகுதியில் 5.5 மீட்டராகவும் பாறைப்பகுதியில் 5.1 மீட்டராகவும் இருந்தது. இதுவே மழைக்குப் பிறகு, டிசம்பரில் முறையே 2.7 மீ, 1.6 மீ, 1.8 மீ என நீர்மட்டம் மேலே வந்தது.

பருவகாலம் முடிந்து, மீண்டும் ஆய்வு செய்யப்பட் டது. இதில், கோடம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சராசரியாக 2 மீட்டர் ஆழத்தில் நீர்மட்டம் உள்ளது. ராயபுரம், வண் ணாரப்பேட்டை, பூங்காநகர் ஆகிய பகுதிகளில் 3.7 மீட்டர் ஆழத்துக்கு நீர்மட் டம் சென்றுவிட்டது கண்டறியப்பட்டுள்ளது.

நகரில் கடந்த ஆண்டை விட நீர்மட்டம் 0.38 மீட்டர் அதாவது 1.25 அடி குறைந்துவிட்டது என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் சென்னைக்கு குடிநீர் வழங் குவதில் பிரச்னை இருக் காது என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின் றனர். சென்னையின் ஒரு நாள் குடிநீர்த் தேவை 30 மில்லியன் கன அடி குடிநீர். நேற்றைய நிலவரப்படி, நான்கு குடிநீர் ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 6,691 மில் லியன் கன அடி நீர் உள்ளது. இதை வைத்து வரும் நவம்பர் வரை சென்னையின் குடி நீர்த் தேவையை சமாளிக்க முடியும் என்று குடிநீர் வாரிய தலைமைப்பொறி யாளர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

Last Updated on Monday, 08 February 2010 11:24
 

குடிநீர் இணைப்பு முறைப்படுத்தல்

Print PDF

தினமலர் 08.02.2010

குடிநீர் இணைப்பு முறைப்படுத்தல்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் முறைகேடாக இணைப்பு வழங்கப்பட்ட 549 குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தி உத்தரவு வழங்கும் விழா நடந்தது.

ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முறைகேடாக 549 குடிநீர் இணைப்புகள் வழங்கப் பட்டது. இவர்கள் தங்களுடைய குடிநீர் இணைப்பை முறைப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி எம்.எல். . சக்கரபாணியிடம் கோரிக்கை விடுத்தனர். துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இவர்களுக்கு முறையான இணைப்பு எண் வழங்கப் பட்டது.

இதற்கான உத்தரவு வழங்கும் விழா ஒட் டன்சத்திரம் பேரூராட்சியில் நடந்தது. பேரூராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். துணை தலைவர் வனிதா முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜெயக்கொடி வரவேற்றார். அரசு கொறடா சக்கரபாணி 549 பேருக்கும் குடிநீர் இணைப்பு எண் உத்தரவை வழங்கி பேசினார். பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமராஜ், ஆனந்தன், மயிலாத்தாள், ஜின்னா, சின் னம்மாள், கிட்டான், முருகேசன், நாட்ராயன், சந்திரமோகன், திருமலைசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஜோதீஸ்வரன், பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் கண்ணன், முன் னாள் கவுன்சிலர்கள் ஆறுமுகம், பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 08 February 2010 05:54
 


Page 305 of 390