Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கருமத்தம்பட்டி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு '2வது திட்டம்' மார்ச்சில் துவக்க முடிவு

Print PDF

தினமலர் 05.02.2010

கருமத்தம்பட்டி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு '2வது திட்டம்' மார்ச்சில் துவக்க முடிவு

சோமனூர் : கருமத்தம்பட்டி பேரூராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இரண்டாவது குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிததாக எட்டு இடங்களில் மேல்நிலைத் தொட்டிகளை கட்ட, பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கருமத்தம்பட்டி பேரூராட்சியில் இரண்டாவது குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்படவுள்ளன. இதற்கான, மண் பரிசோதனைக்கு, மாதிரி சேகரிக்கப்பட்டது. சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டியை உள்ளடக்கிய கருமத்தம்பட்டி பேரூராட்சியில், பில்லூர் - அத்திக்கடவு திட்டத்தில் குடிநீர் சப்ளை நடக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் குடிநீரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இரண்டாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, திட்ட பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இது குறித்து, கருமத்தம்பட்டி பேரூராட்சித் தலைவர் மகாலிங்கம் கூறிய தாவது:

பேரூராட்சி பகுதியில் தினமும் 12 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், குடிநீர் பற்றாக்குறையால் ஒன்பது முதல் 10 லட்சம் லிட்டர் மட்டுமே குடிநீர் சப்ளை நடக்கிறது. குடிநீர் தேவையை கருதியும், பற்றாக்குறையை சமாளிக்கவும் மேலும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் பெறும் வகையில் இரண்டாவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, எட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன. சோமனூர் நொய்யல் ஆற்றுப்பாலம் அருகேயுள்ள 13 சென்ட் நிலத்தை சென்னிமலை, பாலசுப்பிரமணியம், அருணாசலம், சென்னியப்பன் ஆகியோர் பேரூராட்சிக்கு தானமாக வழங்கியுள்ளனர். இந்த இடத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்படுகிறது.

அதே போன்று, கிருஷ்ணாபுரத்திலும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், ராயர்பாளையம் முதல் மற்றும் 18 வது வார்டில் இந்திரா காலனி, செகுடந்தாளி புதூர் பகுதிகளில் தலா 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகளும், ஆத்துப்பாளையம், விராலிக்காடு பகுதிகளில் தலா 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலைத் தொட்டிகளும் கட்டப்படவுள்ளன. இதற்காக, மண் பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு முடிவு கிடைத்தவுடன் தொட்டிகள் கட்டும் பணி துவங்கும். இத்திட்ட பணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாத இறுதிக்குள் துவங்கும். இவ்வாறு, மகாலிங்கம் தெரிவித்தார்.

Last Updated on Friday, 05 February 2010 06:32
 

மார்ச் 1 முதல் தடையின்றி குடிநீர் வழங்கப்படும்

Print PDF

தினமணி 04.02.2010

மார்ச் 1 முதல் தடையின்றி குடிநீர் வழங்கப்படும்

ராமநாதபுரம், பிப். 3: ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மார்ச் 1 ஆம் தேதி முதல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என ஆட்சியர் த.. ஹரிஹரன் புதன்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான பணிகளை பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி, கடலாடி ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் புதன்கிழமை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

பரமக்குடி நகர் எமனேசுவரத்தில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தைப் பார்வையிட்டு, அங்கிருந்து ஜீவா நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதையும் பார்வையிட்டார். இந்த நீரேற்று நிலையம் மூலம் பரமக்குடி நகராட்சிப் பகுதிகளுக்கு நாள்தோறும் 62.34 லட்சம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருதல் தொடர்பான செயல்முறைகள் குறித்து விசாரித்தார்.

பார்த்திபனூரில் அமைந்துள்ள 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, அச்சங்குளத்தில் செயல்பட்டு வரும் நீரேற்று நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். கமுதி ஒன்றியம் கோவிலாங்குளத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்துள்ளதால், அதனை இடித்து புதிதாக மற்றொரு தொட்டி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்ட அதற்கான கருத்துரு தயாரிக்க ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

கடலாடி ஒன்றியம், காணிக்கூர் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து நீர் வழங்கும் குழாய்கள் அமைக்கப்படாமல் உள்ளதால், அவற்றை விரைவில் அமைத்து மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி ஊராட்சி மன்றத் தலைவருக்கு அறிவுரை வழங்கினார்.

மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து மார்ச் 1 ஆம் தேதி முதல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆட்சியருடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் நாகநாதன்,திருமலைக்குமார்,உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள்,உதவிப் பொறியாளர் சூரிய நாராயணன்,இளநிலைப் பொறியாளர் செல்லமுத்து உள்பட அதிகாரிகள் பலரும் வந்திருந்தனர்.

Last Updated on Thursday, 04 February 2010 11:24
 

குடிநீரின்றி தவிக்கும் மாநகராட்சி 41வது வார்டு மக்கள்

Print PDF

தினமணி 04.02.2010

குடிநீரின்றி தவிக்கும் மாநகராட்சி 41வது வார்டு மக்கள்

திருப்பூர், பிப்.3: லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் நிறுத்தப்பட்டதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட மாநகராட்சி 41வது வார்டு பொதுமக்கள் திருப்பூர் தாராபுரம் சாலையிலுள்ள நீரேற்று நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி 41வது வார்டுக்கு உட்பட்ட கோம்பைத்தோட்டம் பகுதியில் 250க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளா உள்ளதால் இப்பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் செய்துதரப்படாததுடன், லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில், கடந்த 5 நாட்களுக்கும் மேலாக இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்ததால் அப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிப்படைந்தனர்.

மேலும், அப்பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை பணிகளும் முறையாக செய்துதரப்படாமலும் உள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்துக்கு வலியுறுத்தியும் இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கோம்பைத்தோட்டம் பொதுமக்கள் புதன்கிழமை தாராபுரம் சாலையிலுள்ள நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று முற்றுகைப் போராட்ட த்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு நடத்தினர்.

முறைப்படி லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும் என்றும், விரைவில் கோம்பைத்தோட்டம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

Last Updated on Thursday, 04 February 2010 11:06
 


Page 307 of 390