Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

வீராணம் ஏரி நிரம்பியது கோடையில் சென்னைக்கு குடிநீர் பிரச்னை வராது

Print PDF

தினகரன் 04.02.2010

வீராணம் ஏரி நிரம்பியது கோடையில் சென்னைக்கு குடிநீர் பிரச்னை வராது

காட்டுமன்னார்கோவில்: வீராணம் ஏரி 12 மாதங்களுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர் பிரச்னை வராது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த டிசம்பரில் பெய்த பருவ மழை காரணமாக வீராணம் ஏரி நிரம்பத் தொடங்கியது. வெள்ள அபாயத்தை தவிர்க்க முழு கொள்ளளவான 47.5 அடியை தேக்க வேண்டாம் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். அதன்படி, பொதுப்பணித்துறையினர் தண்ணீரை குறைந்த அளவில் தேக்கி வெள்ளத்தால் கிராமங்கள் பாதிக்காத வகையில் பாதுகாத்தனர். சென்னைக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் அனுப்பி வந்தனர்.

தற்போது மழை சீசன் முடிந்துவிட்டதால் ஏரியில் முழு கொள்ளளவு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009&ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2&ம் தேதி வீராணம் ஏரியில் முழு கொள்ளளவு நீரை பொதுப்பணித்துறையினர் தேக்கி வைத்தனர். 12 மாதங்களுக்கு பிறகு இப்போது ஏரி முழுமையாக நிரம்பியுத்து. இதனால் சென்னைக்கு கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாக உள்ளது. சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடிவீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

Last Updated on Thursday, 04 February 2010 07:57
 

பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: கம்பம் நகராட்சி முடிவு

Print PDF

தினமலர் 03.02.2010

பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: கம்பம் நகராட்சி முடிவு

கம்பம்: கம்பத்தில், நகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கிராமப்புறங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய அரசு, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கம்பம் நகராட்சிக்கு கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கம்பத்தில் தேரடி, தாத்தப்பன்குளம், பார்க் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் தற்போது கட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து அங்கு குடிநீர் சுத்திகரிப்பு மினி பிளாண்ட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பள்ளிகளில் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக் கும்.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கம்பம் பகுதியில் ஆனைமலையன்பட்டி உள்ளிட்ட சில ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்படும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு பிளாண்ட்டுகள் அமைக்கப்பட்டுள் ளது. அதைப் போன்று நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு மினி பிளாண்ட்டுகள் அமைக்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் சுத்தமான குடிநீர் மாணவ மாணவிகளுக்கு கிடைக்கும். இதன் மூலம் காய்ச்சல், தொற்று நோய்கள் பரவுவது கட்டுப்படுத்தப்படும். இதற்கான நிதியை கல்வி நிதியில் இருந்து ஈடுசெய்ய முடிவு செய்துள்ளோம் என்றனர்.

 

Last Updated on Wednesday, 03 February 2010 08:00
 

35 ஆண்டுகள் பழமையான பைப் குடிநீர் வினியோகத்தில் தொய்வு : 161 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் திட்டம்

Print PDF

தினமலர் 02.02.2010

35 ஆண்டுகள் பழமையான பைப் குடிநீர் வினியோகத்தில் தொய்வு : 161 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் திட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கூட்டுகுடிநீர் திட்டத்தில் வினியோகிக் கப்படும் குடிநீர் சப்ளை யில், 35 ஆண்டு கால பழைய பைப் காரணமாக பல இடங்களில் வினி யோகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகராட்சி யில் கூட்டுகுடிநீர் திட்டம் துவங்கியபின் குடிநீர் பிரச்னை முடிவுக்கு வரும் என பொது மக்கள் ஆவலோடு எதிர் பார்த் திருந்தனர். ஆனால் , நகராட்சியில் பல வார்டு களில் குடிநீர் சப்ளை சரிவர வரவில்லை என்ற புகார் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

குடிநீர் சப்ளையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து நகராட்சி ஒரு பதிலும் ,குடிநீர் வடிகால் வாரியம் ஒரு பதிலையும் தருவதால் பொது மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் நகராட்சி பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்படும் குழாய்கள் பதித்து 35 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டும், குழாய்களில் கசிவும் உள்ளதால் குடிநீர் சரியான முறையில் செல்லாமல் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. பற்றா குறைக்கு பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டியதில் பல இடங் களில் பழைய குழாய்கள் சேதமடைந் துள்ளன. இதனால் சில பகுதிக ளுக்கு குடிநீர் வராமல் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள் ளாகின்றன . குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தொடர் பிரச்னையை சமாளிக்க 35 ஆண்டுகள் பழமையான குழாய்களை மாற்றி 161 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் புதிய குழாய்கள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய குழாய்கள் அமைக்கும் பணி பெயரளவில் இல்லா மல் விரைந்து செயல்பட்டு குடிநீர் வினியோகத்தை சீராக்கினால்தான் பொது மக்கள் பிரச்னை முடிவுக்கு வரும். இல்லையேல் கோடை காலம் துவங்கி விட்டால் குடிநீர் பிரச்னை மேலும் பெரிதாகி குடிநீருக்காக மக்கள் அலைமோதும் நிலை ஏற்பட்டு விடும். கோடை தட்டுப்பாடு ஏற்படும் முன் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.

Last Updated on Tuesday, 02 February 2010 06:36
 


Page 308 of 390