Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தூர்வாரும் பணி முடிந்து மகாமக குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது

Print PDF

தமிழ் முரசு             07.08.2013

தூர்வாரும் பணி முடிந்து மகாமக குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கும்பகோணம்:கும்பகோணம் மகாமகம் குளம் தூர்வாரி சீரமைப்பட்டதை தொடர்ந்து குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியது.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடுவது வழக்கம். 5 ஏக்கர் பரப்புள்ள இக்குளம் கடும் வறட்சியின் காரணமாக 2 மாதங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதையடுத்து நகராட்சி சார்பில் இந்து சமய அறநிலைய துறையிடம் அனுமதி பெற்று, சிட்டி யூனியன் வங்கியின் நன்கொடை மூலம் ரூ.15 லட்சத்தில் மகாமக குளம் தூர் வாரப்பட்டது.

இதன் மூலம் குளம் முழுவதும் 2 அடி ஆழத்துக்கு மண் அப்புறப்படுத்தப்பட்டு ஒரு அடி அளவில் ஆற்று மணல் நிரப்பப்பட்டது. நேற்று மாலை மணிக்கூண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அறநிலைய துறை ஆணையர் தனபால், தண்ணீரை திறந்து வைத்து பூக்களை தூவினார். காசி விஸ்வநாதர் கோயில் சார்பில், மகாமக குளம் இனி வற்றாமல் இருக்க வேண்டும் என மகா சங்கல்பம் செய்து கொண்டனர்.

பின்னர் விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, நவநதி பூஜை செய்தனர். அப்போது வேத விற்பன்னர்கள் ருத்ரம், சமகம், ஜபம் பாராயணம் செய்தனர். நிகழ்ச்சியில் இந்து அறநிலைய துறை இணை ஆணையர் சுவாமிநாதன், உதவி ஆணையர் மாரியப்பன், முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன், நகர மன்ற தலைவர் ரத்னாசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குளத்தின் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் இருந்து தற்போது தண்ணீர் விடப்படுகிறது. அரசலாற்றில் இருந்து வழக்கமாக மகாமக குளத்துக்கு தண்ணீர் விடுவது வழக்கம். அரசலாற்றில் தண்ணீர் வந்ததும் வழக்கம் போல விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று குடிநீர்விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்

Print PDF
தினமணி       06.08.2013

இன்று குடிநீர்விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்


சோனியா விஹார் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக தெற்கு தில்லியின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம்  பாதிக்கப்படும் என்று தில்லி ஜல் போர்டு அறிவித்துள்ளது.

குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்:

தக்ஷணபுரி, ஷேக் சராய், மதன்கிரி, திக்ரி, கிரேட்டர் கைலாஷ், கிழக்கு கைலாஷ், சந்த் நகர், கைலாஷ் காலனி, பஞ்சீல் பார்க், பஞ்சீல் என்கிளேவ், உதய் பார்க், நீதி பாக், வசந்த் குஞ்ச், அப்பலோ மருத்துவமனை, ஓக்லா, சரிதா விஹார், சாகேத் மூல் சந்த், விக்ரம் விஹார், லாஜ்பத் நகர், ஜல் விஹார், சித்தார்த்தா என்கிளேவ், கிலோகரி, மான் பூங்கா, அமர் காலனி, பாரதி நகர், ஜோர் பாக்.
 

மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த முடிவு

Print PDF

தினமணி                31.07.2013 

மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட  பகுதிகளில் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த முடிவு

கோவை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சட்டவிரோதமான குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  கோவை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் 40 வார்டுகள் உள்ளன. பேரூராட்சிகளாகவும் ஊராட்சிகளாகவும் இருந்த பகுதிகள் மாநகராட்சி வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

  கோவை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் மொத்தம் 2.25 லட்சம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில் சுமார் 80 ஆயிரம் இணைப்புகள் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன. இது தவிரப் பெரும்பாலான இணைப்புகள் உரிய அனுமதியின்றி பெறப்பட்டுள்ளன.

  எனவே, விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளர்களைக் கொண்டு குடிநீர் இணைப்புகளைச் சோதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

  இதன் மூலம் சட்டவிரோதமான குடிநீர் இணைப்புகளைக் கண்டறிந்து அவற்றைத் துண்டிக்கலாம். இதனால் கூடுதலாகத் தண்ணீர் கிடைக்கும். மேலும் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும்போது மாநகராட்சிக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

  இதனால் வரும் வாரங்களில் மாநகரின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு தொடர்பாக திடீர் சோதனை நடத்தப்படும் என்று மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

 


Page 32 of 390