Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சுகாதாரமான தண்ணீருக்கு உறுதி

Print PDF

தினமலர் 28.01.2010

சுகாதாரமான தண்ணீருக்கு உறுதி

கூடலூர் : ""மேல் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு, சுகாதாரமான தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என கூடலூர் ஆர்.டி.., தெரிவித்தார்.மேல் கூடலூர், கே.கே., நகர், குறிஞ்சி நகர், நடுகூடலூர், ஹெல்த்கேம், தோட்டமூலா பகுதி மக்களுக்கு, மேல்கூடலூர் கல்லடி ஆற்று நீர் வினியோகிக்கப்பட்டது. ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால், தடுப்பணைக்கு கீழ் வழிந்தோடும் ஆற்று நீரை ரப்பர் குழாய் மூலம் உறிஞ்சி, மேல்கூடலூர், கே.கே., நகர் பகுதிக்கு செல்லும் குழாயுடன் இணைக்கப்பட்டது. குழாய் இணைக்கப்பட்ட பகுதி சுத்தப்படுத்தப்படாமல் இருந்ததால், பயன்படுத்தும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

நேற்று மாலை, கூடலூர் ஆர்.டி.., ஹரிகிருஷ்ணன், தாசில்தார் ரெங்கநாதன், வி..., வேலாயுதம், உதவியாளர் சந்திரபோஸ், இப்பகுதியை ஆய்வு செய்தனர்; நகராட்சி ஊழியர்களும் உடனிருந்தனர்.ஆர்.டி.., ஹரிகிருஷ்ணன் கூறுகையில், ""தடுப்பணை அருகேயுள்ள நீர் சுத்திகரிக்கும் இரு தொட்டிகளை சுத்தம் செய்யவும், தொட்டி மேல் கம்பி வலை, கொசு வலை அமைத்து, சுகாதாரமான தண்ணீர் வினியோகிக்க நகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கம்பி வேலி, அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த ஆண்கள் பயன்படுத்த கழிப்பிடம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Last Updated on Thursday, 28 January 2010 06:23
 

குடிநீர் குழாய்கள் 'கட்': மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர் 28.01.2010

குடிநீர் குழாய்கள் 'கட்': மாநகராட்சி நடவடிக்கை

மதுரை : மதுரையில் பலர், குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் துவங்கி உள்ளனர். நேற்று கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காமராஜர்புரம், குயவர்பாளையம், அனுப் பானடி பகுதிகளில் உதவி கமிஷனர் அங்கயற்கண்ணி தலைமையில் உதவி பொறியாளர்கள் காமராஜ், அஷ்ரப் அலி மற்றும் ஊழியர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.குழாய் வரி செலுத்தாத 40 வீடுகளுக்கான இணைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் துண்டித்தனர். "உடனடியாக பொதுமக்கள் குடிநீர் வரியை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் இணைப்புகள் துண்டிக்கப் படும்' என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Last Updated on Thursday, 28 January 2010 06:19
 

ஸ்ரீவிலி.யில் குடிநீர் தொட்டி திறப்பு விழா

Print PDF

தினமணி 25.01.2010

ஸ்ரீவிலி.யில் குடிநீர் தொட்டி திறப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 24: ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற 21-வது வார்டில் குடிநீர்த் தொட்டி திறப்பு விழா நகராட்சி ஆணையாளர் முத்துக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டியை திறந்து வைத்து மடவார்வளாகம் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் மாயாண்டி பேசினார். அவர் பேசுகையில், திமுக அரசு நெசவாளர்களுக்கு அமுல்படுத்தியுள்ள நலத் திட்டங்களை விளக்கினார்.

மேலும் கருணாநிதி, ஏழைகள், நெசவாளர், மேலும் தேவையில் உள்ள மக்களின் வாழ்வாதரத்தை பெருக்கும் வகையில் ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். மாவட்டத்தில் உள்ள இரு அமைச்சர்களும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், நகரின் வளர்ச்சிக்காவும் திட்டங்களை நிறைவேற்றி வருவதாயும் மாயாண்டி கூறினார்.

நிகழ்ச்சியில் திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் கு.வெங்கட்ராமன், நகராட்சி பொறியாளர் பெரியசாமி மற்றும் முதலியார்பட்டித் தெருவின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 25 January 2010 06:46
 


Page 312 of 390