Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சுத்திகரிக்கப்படாத குடிநீர் விற்றால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி

Print PDF

தினமணி 13.01.2010

சுத்திகரிக்கப்படாத குடிநீர் விற்றால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி

சென்னை, ஜன.12: சுத்திகரிக்கப்படாத குடிநீரை பொதுமக்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.. காலனியில் சுத்திகரிக்கப்படாத குடிநீரை குறிப்பிட்ட நிறுவனம் விற்பனை செய்வதாக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறைக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து உதவி சுகாதார அலுவலர் டாக்டர் ரேவதி ரோஸ்லின் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குறிப்பிட்ட நிறுவனம் திறந்த வெளியில் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து, சீல் வைத்தனர்.

Last Updated on Wednesday, 13 January 2010 09:34
 

குடிநீர் சிக்கனம் விளம்பர படத்தில் சச்சின்

Print PDF

தினகரன் 12.01.2010

குடிநீர் சிக்கனம் விளம்பர படத்தில் சச்சின்

மும்பை : குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும் விளம்பர படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நடித்தார். இந்த படத்தை மும்பை மாநகராட்சி தயாரித்துள்ளது.

மும்பையில் குடிநீர் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், வீணாக்காமல் அதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மும்பை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக விளம்பர படம் ஒன்றை எடுத்தது. இதில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ளார். ‘தண்ணீரை சேமியுங்கள்Õ என்ற தலைப்பிலான இந்த விளம்பர பிரசார படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முன்தினம் பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடந்தது. இந்த விளம்பரத்தில் கிரிக்கெட் சீருடையில் டெண்டுல்கர் தோன்றுகிறார். தண்ணீரை வீணாக்காமல் சேமித்து மும்பையை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்களை இந்தி மற்றும் மராத்தியில் டெண்டுல்கர் பேசுகிறார்.

30 விநாடிகள் ஓடும் இந்த விளம்பரப்படம் இன்னும் 10 தினங்களில் டிவிகள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஒளிபரப்பாகும். போஸ்டர்களும் தயாராகின்றன என்று மாநகராட்சி பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். தண்ணீர் சிக்கனம் குறித்து டெண்டுல்கர் கூறுகையில், ‘‘தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் எண்ணத்தில் நான் ஷவரில் குளிப்பதற்கு பதிலாக வாளியில் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறேன்Ó என்றார்.

Last Updated on Tuesday, 12 January 2010 10:44
 

சேதமடைந்த குடிநீர்க் குழாய் சீரமைக்கும் பணி ஆய்வு

Print PDF

தினமணி 12.01.2010

சேதமடைந்த குடிநீர்க் குழாய் சீரமைக்கும் பணி ஆய்வு

திண்டுக்கல், ஜன. 11: திண்டுக்கல் நகரில் இருவேறு இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், அவற்றைச் சீரமைக்கும் பணியை துரிதப்படுத்தும் வகையில், நகர்மன்றத் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் நகருக்கு ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து, குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில், திண்டுக்கல் பெரிய கடைவீதிப் பகுதியில் பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்டிருந்த இடத்தில் குழாய் உடைந்தது. இதேபோல, பெரியார் சிலை அருகே உள்ள குடிநீர்க் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால், நகரில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சேதமடைந்த குழாய்களைச் சீரமைக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகளை திங்கள்கிழமை நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன், நகராட்சி ஆணையர் அர. லட்சுமி, பொறியாளர் ராமசாமி ஆகியோர் பார்வையிட்டு விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினர்.

Last Updated on Tuesday, 12 January 2010 09:49
 


Page 314 of 390