Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

உசிலம்பட்டியில் ரூ.3 லட்சத்தில் புதிய கட்டடம், குடிநீர்த் தொட்டி திறப்பு

Print PDF

தினமணி 31.12.2009

உசிலம்பட்டியில் ரூ.3 லட்சத்தில் புதிய கட்டடம், குடிநீர்த் தொட்டி திறப்பு

உசிலம்பட்டி, டிச. 29: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கவணம்பட்டியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைக்கான புதிய கட்டடம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான குடிநீர்த் தொட்டியையும் உசிலம்பட்டி எம்.எல்.. .மகேந்திரன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து இவை கட்டப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த நகரச்செயலாளர் பூமா ராஜா. ஒன்றியச் செயலாளர் அன்பு கே.சி.மாயன், அம்மா பேரவைத் தலைவர் ராஜேந்திரன், நகரசபை கவுன்சிலர்கள் சசிகலா போஸ், பாலகருப்பு, பொதுக்குழு உறுப்பினர் குலசேகர பாண்டி, வழக்கறிஞர் லட்சுமணன், சேதுராமன், நகராட்சி ஆணையாளர் அட்சயா, பொறியாளர் சரவணன், பில்டிங் ஆய்வாளர் செல்லபாண்டி, ஓவர்சீயர் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Wednesday, 30 December 2009 10:32
 

குடிநீர் கட்டணம் உயர்த்த மாமன்றத்தில் முடிவு

Print PDF

தினகரன் 30.12.2009

குடிநீர் கட்டணம் உயர்த்த மாமன்றத்தில் முடிவு

கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் 2ம் பில்லூர் குடிநீர் திட்டம் நிறைவேற்றிய பிறகு கட்டண உயர்வை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் 36 தீர்மானங்கள் மாமன்ற ஒப்புதலுக்கு முன் வைக்கப்பட்டன. இதில் குடிநீர் கட்டணம் உயர்த்துவது தொடர்பான தீர்மானம் முன் வைக்கப்பட்டது.

அதில், ஐவஹர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பில்லூர் 2வது தனி குடிநீர் திட்டப்பணிகள் ரூ.113.74 கோடி மதிப்பில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பணிகள் அடுத்தாண்டு 2010 இறுதியில் முடிவுயும் போது திட்டமதிப்பீட்டு தொகை ரூ.140 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்கென நிர்வாக ஒப்புதல் பெறப்பட்ட மதிப்பீட்டு தொகை ரூ.113.74 கோடியில் 70 சதவிகிதம் மானிய நிதி போக மீதமுள்ள 30 விழுக்காடு மாநகராட்சி பங்கு தொகை மற்றும் மதிப்பீட்டு தொகைக்கும் கூடுதலான ஒப்பந்த தொகையுடன் சேர்த்து மாநகராட்சி ரூ.50 கோடிக்கும் மேலாக மாநகராட்சி குடிநீர் நிதியில் இருந்து ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது.

பில்லூர் 2ம் குடிநீர் திட்டம் முடிவடைந்து மாநகருக்கு கூடுதல் குடிநீர் பெறப்பட்ட பின்பு மாநகர் முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என கூறப்பட்டிருந்தது. கவுன்சிலர்கள் விவாதத்திற்கு பிறகு, குடிநீர் கட்டண உயர்வுக்கு மாமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது குறித்து மேயர் பேசுகையில், ‘பில்லூர் இரண்டாம் குடிநீர் திட்டம் நிறைவேற்றிய பிறகு, மாநகருக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் துவங்கிய பிறகு தான் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும். பில்லூர் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற மாமன்ற ஒப்புதல் வழங்கினால் தான் மானியம் கிடைக்கும், மேலும் பணிகள் தொடர்ந்து நடக்கும் என்பதால், இத்தீர்மானத்திற்கு மாமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளதுஎன்றார்.

பெரு நகர திட்டத்தின் கீழ் உள்ளாட்சிகளின் நிலை உயர்த்துதல், 30 உள்ளாட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பான தீர்மானம் மன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. இத்தீர்மானம் நிறைவேற்ற அனைத்து கட்சி கவுன்சிலர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு செய்வது எனவும், அது வரை தீர்மானத்தை ஒத்திவைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

Last Updated on Wednesday, 30 December 2009 07:26
 

கோவையில் குடிநீர் கட்டணம் குபீர்: புதிய திட்டம் முடிந்த பின் அமல்

Print PDF

தினமலர் 30.12.2009

கோவையில் குடிநீர் கட்டணம் குபீர்: புதிய திட்டம் முடிந்த பின் அமல்

கோவை : கோவை மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுகிறது. இதற்கான தீர்மானத்துக்கு மாநகராட்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. கோவை மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் 113 கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பில் பில்லூர் 2வது குடிநீர்த் திட்டப்பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. அடுத்த ஆண்டில் இந்த பணி முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பணி முடியும்போது, திட்ட மதிப்பீடு 140 கோடி ரூபாயாக உயரும் என தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் பெற்ற 113 கோடியே 74 லட்ச ரூபாயில் 70 சதவீதத்தொகை, மத்திய அரசு (50%) மற்றும் மாநில அரசு (20%) மானியமாக வழங்குகின்றன. கட்டணம் உயர்வு: மீதமுள்ள தொகையில் 30 சதவீதத்தையும், கூடுதல் ஒப்பந்தத் தொகையுடன் சேர்த்து 50 கோடி ரூபாய்க்கும் மேலாக மாநகராட்சி குடிநீர் நிதியிலிருந்து திட்டத்துக்கு மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக, குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் மாநகராட்சி உள்ளது. இதற்காக, நகராட்சிகள் நிர்வாக தலைமைப் பொறியாளரால் குடிநீர் கட்டணம் மற்றும் டெபாசிட் தொகை திருத்தி வழங்கப்பட்டுள்ளது. புதிய கட்டண அட்டவணை, கவுன்சில் ஒப்புதலுக்காக நேற்று வைக்கப்பட்டது.

புதிய குடிநீர் கட்டண விபரம் (பழைய கட்டணம் அடைப்புக்குறிக்குள்): இதன்படி, வீட்டு உபயோகத்துக்கு 7500 லிட்டர் வரை ரூ.4.50 (ரூ.3.50) ஆகவும், 7501-10 ஆயிரம் லிட்டர் வரை, ரூ.6 (ரூ.4), 10 ஆயிரத்து ஒரு லிட்டரிலிருந்து ஒன்றரை லட்சம் லிட்டர் வரை ரூ.8 (ரூ.5), அதற்கும் அதிகமாக பயன் படுத்துவோருக்கு ரூ.11 (ரூ.6.50) ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பொது நிறுவனங்களுக்கு (20 எம்.எம்.விட்டம் அதிக அளவிலான குழாய் இணைப்புக்கு) 7500 லிட்டருக்கு தற்போது 3 ரூபாய் 50 பைசாகவுள்ள கட்டணம், 5 ரூபாய் 25 பைசாவாக உயர்கிறது. இதற்கும் அதிகமான அளவுக்கு வீட்டு உபயோகக் குழாய் அளவிலான கட்டணமே வசூலிக்கப்படும். வீட்டு உபயோக குழாய்க்கு ஒரு மாத குறைந்த பட்ச கட்டணம், ரூ.120 (ரூ.80), குடிநீர் கட்டண டெபாசிட் தொகை ரூ.5000 (ரூ.1000) ஆக உயர்கிறது.

பொது நிறுவனங்களுக்கு ஒரு மாத குறைந்த பட்ச கட்டணம், ரூ.900 (ரூ.600), டெபாஸிட் தொகை ரூ.10 ஆயிரம் (ரூ.3000) ஆக உயர்த்தப்படுகிறது. பிற உபயோகத்துக்கு: வீட்டு உபயோகம் அல்லாத முறையில் வழங்கப்படும் குடிநீருக்கு, ஒரு மாத உபயோக அளவில் 7500 லிட்டர் வரை 7 ரூபாயாகவுள்ள கட்டணம், 10 ரூபாய் 50 பைசாவாகவும், 7501லிட்டரிலிருந்து 10 ஆயிரம் லிட்டர் வரை 9 ரூபாயிலிருந்து 13 ரூபாய் 50 பைசாவாகவும் உயர்கிறது. 10 ஆயிரத்து ஒன்று லிட்டரிலிருந்து ஒன்றரை லட்சம் லிட்டர் வரை, தற்போது 12 ரூபாயாகவுள்ள கட்டணம், 18 ரூபாயாகவும், ஒன்றரை லட்சம் லிட்டருக்கு மேல் பயன் படுத்துவோருக்கு தற்போதுள்ள 15 ரூபாய் கட்டணம், 22 ரூபாய் 50 பைசாவாகவும் உயரும். ஒரு மாத குறைந்த பட்ச கட்டணம், 350 ரூபாயிலிருந்து 525 ரூபாயாகவும், குடிநீர் கட்டண டெபாஸிட் தொகை 3000 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது நிறுவனங்களுக்கும் இதே அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், ஒரு மாத குறைந்த பட்ச கட்டணம் 900 ரூபாயிலிருந்து 1350 ரூபாயாகவும், குடிநீர் கட்டண வைப்புத் தொகை 3000 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.

.தி.மு.. எதிர்ப்பு: புதிய குடிநீர்த் திட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே, இத்திட்டத்துக்கு நிதி ஆதாரச் சான்றில் குறிப்பிட்டுள்ளவாறு குடிநீர் கட்டணத்தை உயர்த்துமாறு நகராட்சி நிர்வாக அலுவலகம் நிபந்தனை விதித்திருந்தது. இந்த தீர்மானத்தை அ.தி.மு.., மா.கம்யூ., இந்திய கம்யூ., கட்சிகள் எதிர்த்தன. கோவை நகரில் குடிநீர் விநியோகத்தில் பெரும் குறைபாடுகள் இருக்கும் நிலையில், 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் நடைமுறைக்கு வந்த பின்பே, புதிய குடிநீர் கட்டணத்தை அமல் படுத்த வேண்டுமென்று தி.மு.., கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இந்த நிபந்தனையுடன் குடிநீர் கட்டண உயர்வு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Wednesday, 30 December 2009 06:45
 


Page 318 of 390